Skip to main content

தமிழனால் பெருமைபெற்ற பிப்ரவரி 28

Published on 28/02/2018 | Edited on 02/03/2018

பிப்ரவரி 28- தேசிய அறிவியல் தினம் 


 

sir.C.V. Raman

 

கிழக்கில் சூரியன் உதிப்பதும், மேற்கே சூரியன் மறைவதும் கடவுளின் உத்தரவு, "கடவுள் நினைத்தால்தான் குழந்தை பிறக்கும்" என்பது போன்ற மனிதனின் மூடநம்பிக்கைகளை உடைத்தது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்தான். "சூரியனை பூமி  சுற்றிக்கொண்டு இருப்பதால்தான் காலம் காலை, மாலை மாறி, மாறி வருகிறது, பருவநிலை மாறுகிறது என்கிற உண்மைகளையெல்லாம் சொன்னவர்கள் அறிவியல் அறிஞர்கள்தான். அப்படிப்பட்ட உண்மைகளை அவர்கள் சொல்லாமல் இருந்தால், நம்மை இன்றளவும் ஆன்மீகவாதிகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.

 

அந்த அறிவியலை பாமரனும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகதான் "தேசிய அறிவியல் தினம்" என்கிற ஒரு தினத்தை உருவாக்கியுள்ளது இந்தியா. தேசிய அறிவியல் தினம் கொண்டாட முக்கிய காரணமாக இருந்தவர் இஸ்ரோ என்கிற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இருந்த வி.ஆர். கோவாரிக்கர்தான். இவரே தேசிய அறிவியல் தினம் என்று ஒரு நாளை நாம் கடைபிடிக்க வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தியவர். 1988ல் அவர் கருத்தை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ந்தேதியை இந்திய அறிவியல் தினம் என அறிவித்தது அரசு.

 

sir.C.V. Raman


பிப்ரவரி 28 ந்தேதியை அறிவிக்க என்ன காரணம்?

இந்தியாவின் அறிவியல் ஆய்வாளரும், கணிதவியல் அறிஞருமான சர்.சி.வி ராமன் என்கிற சந்திரசேகர வெங்கட்ராமன் ஐரோப்பில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து கப்பல் பயணமாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இந்தியாவின் அரபிக்கடல் மற்றும் வங்காளவிரிகுடா கடல் பயணத்தின்போது இருந்த வானத்தின் மேற்பரப்பு நிறத்தை விட, அவர் பயணம் செய்துகொண்டிருந்த மத்திய தரைக்கடலின் வானம் நீல நிறமாக இருந்தது. இது அவர் மனதை உறுத்த அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தார். ஒளிச்சிதறல் ஏற்படுவதால்தான் நிறமாற்றம் ஏற்படுகிறது என கண்டறிந்தார். இந்த ஆய்வு முடிவை உலகம் ஏற்றுக்கொண்டதால் 1930ல் ராமனுக்கு நோபால் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருதுக்கு காரணமாக இருந்த ஒளிச்சிதறல் பற்றிய ஆய்வை அவர் உலக அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் வெளியிட்ட நாள் பிப்ரவரி 28 அதனால்தான் அந்த தினத்தை தேர்வு செய்தது அரசு.  அந்த அறிக்கையை வெளியிடும்போது அவர் மனம் மகிழ்ச்சியில் தத்தளித்தது. இவர் திருச்சியிலுள்ள திருவானைக்காவல் என்ற இடத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்தியாவின் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இந்த நாளை சிறப்பு நாளாக கொண்டாடுகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சிகளே உலகத்தை பலகட்டமாக முன்னேற்ற பாதையில்  அழைத்து சென்றுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் தினம்... பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை யொட்டி அறிவியலில் பெண்கள் என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பரங்கிப்பேட்டை, சிதம்பரம், நெய்வேலி, விருதாச்சலம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 25- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 350- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா, ஓவியம் வரைதல், சுவரொட்டி விளக்கக்காட்சி மற்றும் வாய்வழி விளக்கக்காட்சி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர்.

anna malai university national science day , schools students

பின்னர் கலந்து கொண்ட 350 மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முனைவர் சம்பத்குமார் வரவேற்று மாணவர்கள் மத்தியில் பேசுகையில், "மனிதர்களின் நலன் மற்றும் மருத்துவர்களுக்கான அறிவியலின் முக்கியத்துவத்தை விளக்கினார். இந்திய பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சிகளில் பெண் ஆராய்ச்சியாளர்களின் பங்கு படிப்படியாக வளர்ந்து வருகிறது" என்பதை அவர் குறிப்பிட்டார் .
 

கடல்வாழ் உயிரியல் புல முதல்வரும் சுற்றுச்சூழல் தகவல் மைய பொறுப்பு அதிகாரி சீனிவாசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு அறிவியல் குறித்த அறிவை வழங்குவதில் பள்ளிகளின் பொறுப்பை சுட்டிக்காட்டினார். மேலும் பள்ளி மாணவர்களை எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் ஆக வாழ்த்தினார். நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் சம்பத்குமார், அனந்தராமன், ஜெயலட்சுமி, இணை பேராசிரியர்கள் ஆனந்தன், சரவணகுமார் உதவி பேராசிரியர்கள் குமரேசன், சுஜி மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் சுற்றுச்சூழல் தகவல் மைய குழுவினர் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

 

Next Story

வயலின் வாசித்த விஞ்ஞானி!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
 Einstein playing violin


உலகில் தலைசிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாசித்த வயலின் அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 516,500 டாலர்களுக்கு ஏலம்போனது. இந்திய மதிப்பில் சுமார் 3.35 கோடியாகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வயலின் மற்றும் அவர் எழுதிய கடிதங்கள் ஆகியவை அமெரிக்காவை சேர்ந்த போன்ஹம்ஸ் எனும் ஏல நிறுவனம் இதனை ஏலம்விட்டது. இந்த ஏலமானது தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் ஏலத்தில் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

 

 

 Einstein playing violin


 

அறிவிக்கப்பட்ட அடிப்படை விலையை விட ஐந்து மடங்கு ஏலம் போனது. இந்த வயலின் ஐன்ஸ்டைனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது. 1933ஆம் ஆண்டு பிரிஸ்டன் கல்வி நிறுவனத்திற்குச்  சென்ற பொழுது, ஆஸ்கர் ஸ்ட்ரெஜ்ர் என்பவர் வயலினை பரிசாக வழங்கினார். அந்த வயலினில் ஐன்ஸ்டினை பற்றி ஒரு வாக்கியத்தை எழுதியிருந்தார்." இவ்வுலகின் மிகச்சிறந்த அறிவியல் பேராசிரியர் ஐன்ஸ்டைனுக்காகத் தயாரிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டு  பிப்ரவரி 1933 என்று தேதியையும் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், பிரிஸ்டன் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த லாரன்ஸ் ஹிப்ஸ் என்பவரின் மகனுக்கு அந்த வயலினை பரிசாக அளித்துவிட்டார்.

இந்த வயலின் வாசிப்பு குறித்து ஐன்ஸ்டைன் கூறியுள்ளது "இசையில்லாத என் வாழ்வு நினைத்துப்  பார்க்க முடியாத ஒன்று. என் பகல் கனவிலும் இசைதான், என் வாழ்வை நான் இசை வழியாகத்தான் பார்க்கிறேன், இந்த இசை என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது".