நக்கீரன் ஆக்‌ஷன் ரிப்போர்ட்! 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

சென்னை ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., ஜி.எஸ்.டி. சாலைகளில் யாராவது விபத்துக்குள்ளாகியோ நோயின் காரணமாகவோ உயிருக்குப் போராடிக்கோண்டிருப்பவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரைக்காப்பாற்றாமல் தூரத்திலுள்ள பிரபல குளோபல் மருத்துவமனைகளில் கொண்டுபோய் சேர்த்து 5,000 ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை கமிஷன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், டெக்னிஷியன்கள் மற்றும் கோ-ஆர்டினேட்டர்கள் என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, "உறுப்புத் திருடும் தனியார் மருத்துவமனைகள்! துணைபோகும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள்! என்றத் தலைப்பில் கடந்த 2019 செப்டம்பர்-28 அக்டோபர்-01 நக்கீரன் இதழில் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினோம்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விராணைக்கு உத்தவிட்டார். நக்கீரன் கொடுத்த ஆதாரங்களை வைத்து விசாரணை செய்ததில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ்பணியாளர்கள்10 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணையில் இருப்பதாக நம்மிடம் ர் 108 ஆம்புலன்ஸ்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் உயிருக்கு உலைவைக்கும் இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மேலும், இவர்களுக்கு துணையாக இருந்த 108 ஆம்புலன்ஸ் கோ- ஆர்டினேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

108 ambulance staff
இதையும் படியுங்கள்
Subscribe