400 years

400 ஆண்டுகளாக ஒரு கிராமத்தில் பிரசவமே நடக்கவில்லையென்றால் அதை நம்ப முடியுமா?

Advertisment

மத்திய பிரதேசத்தில்தான் அந்த விசித்திர கிராமம் உள்ளது. அதன் பெயர் சன்கா ஷ்யாம் ஜி அந்த கிராமம் ராஜ்கர் என்ற மாவட்டத்தில் உள்ளது. 400 ஆண்டுகளாக இங்கு பிரசவம் சரியாக நடந்ததில்லை. பிரசவகாலம் வந்தாலே பக்கத்து கிராமத்திற்கு அழைத்து சென்றுவிடுகிறார்கள் அல்லது எல்லையில் பிரசவம் நடக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். தப்பித்தவறிக்கூட ஊருக்குள் நடப்பதில்லை. அப்படி நடந்தால் குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும், உயிரிழக்கும் அல்லது தாயும், சேயும் உயிரிழப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.

Advertisment

இதற்கு அதிகாரப்பூர்வ காரணம் ஏதும் இல்லையென்றாலும், அந்த ஊரில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் ஒரு கோவில் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் அரவைக்கல்லில் மாவரைத்துகொண்டிருந்தார். அந்த சத்தம் கோவில் கட்ட இடையூறாக இருந்ததாகவும், அதனால் சாமி பெண்கள் யாரும் குழந்தை பெறக்கூடாது என சாபம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பிரசவம் பார்ப்பதற்காகவே கிராமத்திற்கு வெளியே ஒரு பிரசவ அறை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற மூடநம்பிக்கைகள் எப்போது ஒழியுமோ அப்போதுதான் நாடு நலம் பெறும் என்றும் பலர் புலம்புகின்றனர்.