திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், முருகன் பெங்களூரு எம்.ஜி ரோடு மேயோ ஹால் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள தகவல் வெளியானது. பெங்களூரு பானசவாடி காவல்நிலையத்தில் முருகன் மீது 83 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

murugan lalitha

பெங்களூரு போலீசாரால் முன்பு வெளியிடப்பட்ட முருகனின் புகைப்படம்

Advertisment

Advertisment

பெங்களூரு எம்.ஜி சாலையிலுள்ள மேயோ ஹால் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருவாரூர் கொள்ளையன் முருகனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளான். இந்த நோயினால் உடல் மெலிந்தும் பற்கள் விழுந்து மிக மோசமான நிலையில் காணப்பட்டான்.

murugan lalitha

புதிய தோற்றத்தில் முருகன்...

கடந்த ஆண்டு முருகனின் தோற்றம் மிகவும் மோசமான நிலையில் முகத்தில் அறுவை சிகிச்சை சர்ஜரி செய்து 3 பற்களை மாற்றி பல்செட் பொருத்தியுள்ளனர். இதனால் பழைய தோற்றத்திற்கும் தற்போது உள்ள தோற்றத்திற்கும் அதிகம் வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் எப்போதும் நெருக்ககமாக இருக்கும் போலீசுக்கே முருகனை அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள். தான் தங்கியிருந்த இடத்திலும், போலீஸ் விசாரணையிலும் முருகனின் புதிய தோற்றம் அவனை தப்பிக்க வைக்க வசதியாக இருந்து உள்ளது. முருகன் சரண் அடைந்தபோது, இவனா கொள்ளையன் முருகன் என போலீசார் வியப்புடன் பார்த்தனர். முருகனின் புதிய தோற்றம் அனைத்து போலீசாரையும் வியக்க வைத்தது.