Skip to main content

'கை' சின்னத்தில் கமல் போட்டியா?  - மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் விளக்கம்!

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

 Murali Abbas | MNM | Kamal Haasan | Rahul Gandhi |

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சி உருவாகி அடுத்த 14மாதத்தில் 2019 மக்களவை தேர்தலை சந்தித்தது. எனவே, வரவிருக்கும் தேர்தலுக்கு நாங்கள் தயாராகத் தான் இருக்கிறோம். சமீபத்தில் நடந்த எங்கள் செயற்குழு கூட்டத்தில், கூட்டணி குறித்து தலைவர் முடிவெடுப்பார் என முடிவெடுத்தோம். ஆனால், நிச்சயம் அது என்.டி.ஏ. கூட்டணியாக இருக்காது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பின்னர், இ.ந்.தி.யா. வுடன் கூட்டணி வைக்கிறோமா அல்ல தனித்து போட்டியிடுவதா என்பதை தலைவர் தான் தீர்மானிப்பார். சமீபத்தில் கூட, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு கமல் அவர்கள் ஆதரவு தெரிவித்தார்.

 

மேலும், கர்நாடக தேர்தல், ஈரோடு இடைத் தேர்தலிலும் ஆதரவளித்தார். ஆகையால், எங்களுக்கும் காங்கிரஸிற்கும் நெருங்கிய நடப்பு இருக்கிறது. கூட்டணி குறித்து உகந்த சூழல் வரும்போது அடுத்தடுத்த கட்டங்களில் முடிவுகள் எட்டப்படும். இ.ந்.தி.யா. கூட்டணியில் தி.மு.க. இருப்பது எந்தவிதத்திலும் பிரச்சனை இல்லை. நாங்கள் இன்றைக்கு முயல்வது மத்தியில் பத்து வருடம் ஆளும் பாஜகவின் ஆட்சியை மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு உதவவே. ஏனென்றால், சமீபத்தில் கூட அரசியலமைப்பில் சோசலிச மதச்சார்பற்ற போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு சர்ச்சையானது. இதனையெல்லாம் வைத்து தான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்கிறோம். காங்கிரஸ் ஆட்சியமைக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. ஆனால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமா என்பது கூடிய விரைவில் தீர்மானிக்கப்படும்.  

 

மக்கள் நீதி மய்யம் துவங்கி 14 மாதங்களில் பெரிய தேர்தலை சந்தித்த அனுபவம் எங்களிடம் உள்ளது. மேலும், மய்யம் என்ற புதிய கருத்தியலை கொண்டு வருகையில் அதற்கு வரவேற்பு சற்று குறைவாக இருக்கும் என்பதும் அறிந்ததே. எனவே, முதல் தேர்தலில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தத் தேர்தலில் வெற்றியை பெற முயல்வோம். மேலும், நாங்கள் முன்னின்று நடத்திய மாதிரி கிராம சபைக் கூட்டங்கள், முதலில் அறிவித்த பெண்களுக்கு மாத ஊதியம் ஆகியவை இன்றைக்கு தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றுகிறது. மக்கள் நீதி மையம் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில், பிற கட்சிகள் அதனை நிறைவேற்றக் கூடிய சூழலை உருவாக்குகிறோம். ஆதலால், நாங்கள் படிப்படியாக வளரவே விரும்புகிறோம். மேலும், நாளை முதல்வராகும் கனவில் நாங்கள் தேர்தலுக்கு வரவில்லை. கட்சியின் எதிர்காலம் குறித்து தலைவர் கமல் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு நாங்கள் செயல்படவுள்ளோம். 

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியது முதல் வேறு கட்சிகளில் இருந்து எவரும் இங்கு வரவில்லை. காரணம், அவர்களின் வழக்கமான அரசியல் முறைகளை நாங்கள் பின்பற்றுவதில்லை என்பது.மற்றும் எங்கள் கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களால் நிர்வாகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால், அந்த இடத்திற்கு வேறொரு தொண்டன் அடுத்து தயாராகுவார். நான் துணிச்சலாக சொல்வேன் மக்களிடம், வேறெந்த கட்சிக்கும் இல்லாத மதிப்பு எங்கள் கட்சிக்கு இருக்கிறது. இதற்கு, எங்களின் தனித்துவ நேர்மையும், கொள்கையும் தான் காரணம். ஏன், 2021 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதைவிட, கமல் தோல்வி அடைந்ததை நினைத்து மக்கள் வருந்தினார்கள். மேலும், அனைத்து கிராமங்களில் எங்கள் கட்சிக் கொடிகள் இருக்கவும் செயல்பட்டு வருகிறோம். 

 

சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியல் செய்வது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே வந்தது. அவர், 1972ல் கட்சியைத் தொடங்கி 1977ல் ஆட்சியை கைப்பற்றினார். இதற்கிடையில் 14 படங்களில் நடித்தார். இருந்தும், மக்களுடனான தொடர்பும், அரசியல் வேலைகளும் தடைபடவில்லை. அதுபோலத் தான் கமல் அவர்களும். முன்பு, சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றார். தற்போது, அரசியலில் இருந்து சினிமாவிற்கு செல்கிறார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களுடன் நேரடியாக உரையாடுவதால் கட்சி மேலும் பலமாகிறது. 

 

மத்திய-மாநில நிர்வாகம் இருக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அர்த்தமில்லாத செயல். மேலும், இது குழப்பத்தில் தான் முடியும். தொடர்ந்து, இதனால் மாநிலத்தின் தனித்தன்மை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், மாநில அரசின் தேவைகள் வேறு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தலினால் மத்திய அரசின் கொள்கைகளுக்கு முன்னுரிமை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, ஒரே தேசம் என்று சொல்வது உணர்ச்சிவசமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை. 

 

மகளிருக்கான 33% சதவிகித ஒதுக்கீட்டை கமல் அவர்கள் புரட்சிகரமானது என்று கூறியுள்ளார். இது தான் எங்களின் நிலைப்பாடும். ஆனால், இது தற்போது செயல்படுத்த முடியாது என்பதால் கனவுத்திட்டமாக மாறிவிடக் கூடாது. மேலும், இதில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாட்டின் பங்கு தேசிய அரசியலில் குறையும். ஏனென்றால், தமிழகத்தில் குடும்பக்கட்டுப்பாடு விதிகளின் படி முறையாக மக்கள் தொகையை குறைத்துள்ளோம். இதனால், உ.பி. போன்ற மாநிலங்களுக்கு 11 எம்.பி. அதிகரிக்கும். இருந்தும், இட ஒதுக்கீடு கொண்டுவந்ததை பாராட்ட வேண்டும்.

 

உதயநிதி சனாதனம் அழிய வேண்டும் என்கிறார், எனில் அதற்கான எதிர் வாதத்தை வைக்க வேண்டும். மாறாக, குற்றச்சாட்டை மாற்றி பரபரப்பை ஏற்படுத்தக் கூடாது. நீங்களும் உங்கள் மேடைகளில் இது குறித்து தர்க்கம் செய்யுங்கள். எதனையும் கேள்வி கேட்கலாம்... கேள்வி கேட்கப்படாத ஒன்று உலகத்தில் இல்லை என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு. 

 

மேலும், தேர்தல் வருவதற்கு 200 நாட்களுக்கு முன்னர் கூட்டணி குறித்து பேச வேண்டாம் என நினைக்கிறேன். ஆனால், நிச்சயம் ம.நீ.ம. தலைவர் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் அவரின் குரல் ஒலிக்கும். ஆகையால், கூட்டணி குறித்து தற்போது பேச விரும்பவில்லை. கமல் போன்ற அறிவுடையவர் நாட்டு மக்களின் சார்பில் கருத்துகளை நாடாளுமன்றத்தில் பேசவே, அவருக்காக நாங்கள் இந்தத் தேர்தலில் உழைக்கிறோம். தொடர்ந்து, இந்த தேர்தலில் கை சின்னத்தில் நிற்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. கட்சியை வளர்ப்பது தான் தலைவரின் முடிவு.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்'-கமல்ஹாசன் கருத்து   

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

'The effects of natural disasters can be controlled only to a certain extent' - Kamal Haasan opined

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

நேற்று முற்பகல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயல் ஆனது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், தற்போது சென்னையை விட்டு விலகி 200 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது.

 

தமிழ்நாட்டில் இருந்து புயல் விலக்கிச் சென்றதால் சென்னையில் வெகுவாக மழை வாய்ப்பு குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மழை நீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

 

nn

 

இந்நிலையில் புயல் தாக்கம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்.  புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மய்யம் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார். 

 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘THUG LIFE’ என்ற பெயர் வந்தது இந்தக் கொள்ளையனால் தான்!

Published on 08/11/2023 | Edited on 10/11/2023

 

 THUG LIFE  - THUGGEE 

‘Thug life’ இந்த வார்த்தை இணையத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிற பிரபலமான வார்த்தை . எதையுமே கண்டுக்காமல் அசால்ட்டா பதில் சொல்றவங்களுக்கு Thug life பயன்படுத்துறோம். இந்த Thug life எங்கிருந்து வந்தது? எப்படி உருவானது?

 

தக்கீஸ் என்கிற கொள்ளைக் கூட்டத்தில் தக் பெக்ராம் என்கிற கொடூரமான கொள்ளையன் இருந்தான். 1765 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் என்கிற கிராமத்தில் பிறந்தவன். சிறுவயது முதலே கூச்ச சுபாவமான இவன் யாருடனும் அதிகமாக பேசவோ பழகவோ விளையாடவோ மாட்டான். அப்படியிருந்தும் இவனுக்கு தக்கீஸ் கொள்ளைக் கூட்ட குழுவைச் சார்ந்த நண்பன் கிடைக்கிறான். அவன் மூலமாக அந்தக் குழுவில் இணைகிறான்.

 

ஆரம்பத்தில் கொள்ளைக் கூட்டத்தில் சிறிய உதவியாளனாக இருந்தவன், தன்னுடைய 25வது வயதில் தக்கீஸ் கொள்ளைக் கூட்டத்தின் முக்கிய புள்ளியாக உருவெடுக்கிறான். அதிகமாக கொள்ளை அடிக்க வேண்டும் என்ற வெறியும், கொள்ளையின் போது தடுப்பவர்களை இரக்கமற்று கொலை செய்வதிலும் ஒரு மிருகம் போல நடந்து கொள்வதால் கூட்டத்தில் பெரிய ஆளாகிறான். பெக்ராமின் வன்முறைத் தன்மையைப் பார்த்த தக்கீஸ் தலைவர்களே பயப்படுகிற அளவுக்கு வளர்ந்து கொண்டே போகிறவனுக்கு, நாம் தனியாக ஒரு கூட்டத்தினை உண்டாக்கினால் என்னவென்று யோசித்து தன்னை இந்த தக்கீஸ் கொள்ளைக் கூட்டத்தில் இணைத்த நண்பனை தளபதியாக வைத்து 200 பேர் கொண்ட புதிய கொள்ளைக் கூட்டத்தினை உருவாக்குகிறான்.

 

தக் பெக்ராம்
தக் பெக்ராம்

 

தக்கீஸ்கள் சிக்கல் நிறைந்த இடத்தில் பிரச்சனையானவர்களிடம் கொள்ளை அடிக்க மாட்டார்கள். ஏனென்றால் பிரச்சனை பெரிதானால் தங்களை அழித்து விடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் பெக்ராம் சிக்கல் நிறைந்த இடங்களில் தான் கொள்ளை அடித்து வந்தான். குறிப்பாக இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ்காரர்களிடம் தக்கீஸ்கள் கொள்ளை அடிப்பதில்லை. ஆனால் பெக்ராம் அங்கும் கொள்ளை அடித்து வந்தான். 

 

பிரிட்டீஷ்கார ராணுவத்தில் இருக்கிற ஒரு சிப்பாயின் பெண்ணின் உதவியோடு அங்கு சென்று கொள்ளை அடித்துவிட்டுக் கொலையும் செய்து விடுகிறான். தொடர்ச்சியாக கொலை, கொள்ளை ஆவதால் நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் அரசு 5 பேர் கொண்ட குழுவை உருவாக்கி கிராமம் கிராமமாகச் சென்று விசாரிக்கிறார்கள். 

 

கொலை, கொள்ளையில் ஈடுபடுவது தக்கீஸ்கள் தான் என்பது எல்லோருக்கும் தெரிய வருகிறது. ஆனால் அதில் குறிப்பிட்ட அந்த குழுக்கள் யார்? அதில் தலைவன் யார் என்று தீவிரமாக விசாரிக்கிறது பிரிட்டிஷ் தேடுதல் குழு. தேடுதலின் முடிவில் அந்த கிராம மக்கள் கண்களில் பயத்தோடு இதையெல்லாம் செய்வது தக் பெக்ராம் தான் என்று சொல்லிவிடுகிறார்கள். இந்த தகவலையும் பிரிட்டிஷ் தலைமைக்கு 5 பேர் தேடுதல் குழு சொல்லி விடுகிறது. துரதிஷ்டவசமாக பெக்ரமிடன் சிக்கிக் கொள்கிற அந்த 5 பேரையுமே தக் பெக்ராம் கொடூரமாகக் கொன்று விடுகிறான்.

 

தக் பெக்ராமின் அட்டூழியத்தை அடக்க பிரிட்டிஷ் அரசு இங்கிலாந்திலிருந்து வில்லியம் ஹென்றி ஸ்லீவ்மென் என்ற அதிகாரியை இந்தியா வர வைக்கிறார்கள். அவர் ஜபல்பூர் கிராமத்தினைச் சுற்றி விசாரிக்கும் போது தக்கீஸ்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்கிறார். தக்கீஸ்கள் பழக்கவழக்கம், நம்பிக்கைகள், உணவு, கொள்ளை அடிக்கும் முறைகள் என அனைத்தையும் தரவுகளாக எடுத்துக் கொள்கிறார்.

 

தக் பெக்ராமைப் பற்றி விசாரிக்கிறார் என்பதைத் தெரிந்தே அவனது குழு பல முறை கொலை மிரட்டலும், கொலை முயற்சியையும் செய்து பார்க்கிறார்கள். ஆனால் எதற்குமே அசராத வில்லியம் ஹென்றி, தொடர்ச்சியாக தக் பெக்ராமை பிடிக்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். தக்கீஸ்களை அழிக்க பிரிட்டிஷ் அரசு உறுதிபூண்டதை அறிந்த தக்கீஸ்கள் பலர் சரண்டர் ஆகிறார்கள். அதில் ஒருவன், தக் பெக்ராமின் வலது கரமாக செயல்படுகிற சையத் அமீர் அலியைப் பிடித்தால் தக் பெக்ராமை பிடித்து விட முடியும் என்ற தகவலை சொல்கிறான்.

 

 THUG LIFE  - THUGGEE 
வில்லியம் ஹென்றி ஸ்லீவ்மென்

அமீர் அலியைத் தேடிப்போன போது அவன் தப்பிக்கவே அவனது குடும்பத்தை கொண்டு வந்து சித்திரவதை செய்கிறார்கள். அதை அறிந்து அவனும் சரணடைகிறான். அவனின் மூலம் தக் பெக்ராமையும் பிடிக்கிறார்கள். ஒரு சில ஆண்டுகள் சிறையிலிருந்தவனை மீட்க அவனது எஞ்சிய ஆட்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இறுதியாக ஜபல்பூரின் நடுவில் உள்ள மரத்தில் தக் பெக்ராமும் அவனது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட்டார்கள்.

 

தக் பெக்ராமின் அட்டூழியத்தை அழித்த  வில்லியம் ஹென்றி ஸ்லீவ்மென் நினைவாக மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஊருக்கு ’ஸ்லீமனாபாத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இன்றும் அந்த ஊர் இருக்கிறது. தக் லைப் என்பது பெருமைமிக்க வார்த்தை இல்லை. அது ஒரு கொள்ளைக் கூட்டத்தினரைக் குறிக்கிற வார்த்தை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்