style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கடந்த சில வருடங்களாக இந்தியாவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சுட்டிக்காட்டும் அளவில் குறைந்த எண்ணிக்கையில்நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 5 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரும் பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகின்றனர்.பெண்களுக்கு அரணாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டிய ஆண்களே அதை செய்வது மிகவும் வெட்கமான, வருந்தத்தக்க, கேவலமான பொருள் (விஷயம்). பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் இந்தியாதான் என மார்தட்டிக்கொள்ளும் நிலையில்தான் இப்படியான அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 25ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் கடைபிடிக்கப்பட்டது. அப்போது ஐ.நா. சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல், இந்தியாவில் வரதட்சணை கொடுமை காரணமாக நிகழும் கொலைகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்தாண்டு 87 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 50 ஆயிரம் பேர் கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 6 பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
கடந்த 2016ம் ஆண்டு, இந்தியாவில், பெண்கள் கொல்லப்பட்ட சதவீதம் 2.8 சதவீதமாக இருந்ததுள்ளது. ஏனைய நாடுகளை விடவும் இது அதிகமாகும். இந்தியாவில் 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களில், 33.5 சதவீதம் பேர் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது உடல்ரீதியான பாலியல் சித்திரவதை செய்யப்படுகின்றனர். இது, கடந்தாண்டு 18.9 சதவீதமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லை, வரதட்சணையால் ஏற்படும் இறப்புகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரியவந்துள்ளது. மேலும்உலகிலேயே பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடுதான் என்ற யாரும் எதிர்பார்த்திராதஅதிர்ச்சிகரமான தகவலும், இதன்மூலம் வெளிவந்துள்ளது. உலகளவில் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையானது ஒரு லட்சம் பெண்களுக்கு 1.3 சதவீதமாக உள்ளது. இந்தியா நவீனமயமாகிவருகிறது, பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுவருகிறது, பெண்கள் வெளிவர தொடங்கிவிட்டனர். மத சடங்குகள், சம்பிரதாயங்கள், வரதட்சணையெல்லாம் இன்னும் முழுமையாக ஒழியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த அறிக்கை உள்ளது.