'மோடி வல்லவரு, அவருக்கு 56 இன்ச் மார்பு, அவரு பிரதமரா வந்தா பாகிஸ்தானும் சீனாவும் பதுங்கு குழிக்குள் போய் பம்மிருவாங்க' என்றுதான் பிரச்சாரமே செய்தார்கள்.அதற்கு தகுந்தபடி மோடியும் கைகளை விரித்து, தொண்டையை பெரிதாக்கி மேடையில் ஆவேசமாக பேசினாரு. எல்லாமே போட்டோஷாப் வேலை என்பதையும், இட்டுக்கட்டிய பொய்கள் என்பதையும் அறியாத மக்கள் ஓட்டுப் போட்டார்கள்.

Advertisment

modi fitness

அப்போக்கூட 100 பேரில் 31 பேர்தான் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டார்கள். ஆனாலும் இந்திய மக்கள் பூராவுமே தனக்கு ஓட்டுப் போட்டிருப்பதைப் போல மறுபடியும் பொய்யாக பில்டப் செய்தார்கள்.ஆனால், மக்களவை இடைத்தேர்தல்களில் 14 இடங்களை இழந்துவிட்டது மோடி அரசு. அதாவது, தனிப் பெரும்பான்மையோடு வந்த பாஜக இப்போது, கூட்டணிக் கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. அதாவது பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தனது பிட்னஸை இழந்து வருகிறது.

இந்த நிலையில், மோடி தனது பிட்னஸ் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது பிட்னஸ் வீடியோவை வெளியிட்டு, மோடி இதுபோல வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தார். அதற்கு முயற்சி செய்வதாக கூறியிருந்தார். நீண்ட இடைவெளிவிட்டு இப்போது தனது பிட்னஸ் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இந்த வீடியோவைப் பார்த்தவுடன் சமூக வலைத்தளங்களில் மோடியை கலாய்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஆட்சியே பலமிழந்து வருகிறது. இந்த லட்சணத்தில், மோடி பலமாக இருப்பதைப் போன்ற வீடியோவை வெளியிடலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.

மோடியின் வீடியோ காட்சிகளை வைத்து விதவிதமான மீம்ஸ்களை வெளியிடுகிறார்கள். மீம்ஸ் கிரியேட்டர்களையும், பதிவர்களையும் மோடியின் வீடியோ உற்சாகப்படுத்தி இருக்கிறது.

modi meme

Advertisment

modi meme2

modi meme 3