Skip to main content

காங்கிரஸையும், பாகிஸ்தானையும் காட்டியே அரசியல் செய்யப்போகிறாரா மோடி?

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பா.ஜ.க. வென்றதற்கும், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையில் பா.ஜ.க. வென்றதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் சொல்லலாம்? ஒரு வேறுபாடும் இல்லை என்றே சொல்ல வேண்டும். 2014 தேர்தலிலும் காங்கிரஸை குறைசொல்லியே வெற்றி பெற்றார். 2019 தேர்தலிலும் காங்கிரஸை குறைசொல்லியே வெற்றி பெற்றிருக்கிறார். 2014 தேர்தலிலும் சரி, 2019 தேர்தலிலும் சரி எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால்தான் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது.

 

modi



இந்தியா முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் சொன்னாலும் 23 கட்சிகள் கூடிப் பேசியும், கூட்டணி அமையவே இல்லை. காங்கிரஸின் பிடிவாதமும், அது விட்டுக்கொடுத்தாலும் ஏற்காத மாநிலக் கட்சிகளால் மெகாகூட்டணி அமையாமலே போயிற்று.  அதற்கு மாறாக, கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சி களையும் தாஜா செய்து தனது அணி யில் இறுக்கிப் பிடித்து வைத்தது பா.ஜ.க.. மாறாக, எங்கே தனக்கு கட்சி பலம் இல்லையோ, அங்கேயெல்லாம் கட்சிகளை உடைத்து தனது அடித்தளத்தை அமைப்பதில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது.

 

modi



குறிப்பாக, திரிபுராவில் காங்கிரஸ் கட்சியையே மொத்தமாக பா.ஜ.க.வாக்கி, அந்த மாநிலத்தில் இடதுசாரிகளைத் தோற்கடித்து, பா.ஜ.க. ஆட்சியை அமைப்பதில் வெற்றி பெற்றார். மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா காலத்தில் 48 சதவீதம் வாக்குகளுடன் இருந்த இடதுமுன்னணி இப் போது 11 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்திருக் கிறது. மம்தாவை தோற்கடிப்பதற்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் நிலைமைக்கு இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் சென்றதால்தான் இந்தப் பின்னடைவு என்று அரசியல் பார்வை யாளர்கள் கூறுகிறார்கள்.

 

mamta



உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்று காங்கிரஸ் கட்சி அறி வித்தது. ஆனால், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று மாயாவதி சொன்னாரே தவிர, காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்று நிரா கரித்தார். இத்தனைக்கும், காங்கிரஸ் 6 சதவீதம் வாக்குகளை வைத்திருந்தது. 2014 தேர்தலில் 4 தொகுதிகளை ஜெயித்திருந்தது. பகுஜன் சமாஜ் 2014 தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. மாயாவதியும், அகிலேஷும் புறக்கணித்ததால் கோபமடைந்த காங்கிரஸ் தலைவர்கள் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்தார்கள். போதாக்குறைக்கு பிரியங்காவையும் களத்தில் இறக்கி பிரச்சாரம் செய்தார்கள். இதுவே உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாமல் போனது. ஆனாலும் பா.ஜ.க. கடந்த முறை பெற்றிருந்த 71 இடங்களில் 11 இடங்களை இழந்திருக்கிறது. பகுஜன் சமாஜ் 11 இடங்களையும், சமாஜ்வாதி  8 இடங்களையும் பெற்றிருக்கின்றன. அமேதியில் ராகுல் தோல்வி அடைந்திருக்கிறார். கூட்டணி அமைக்கத் தவறியதால் கிடைத்த கைமேல் பலன் இதுதான்.

 

chandrababu



மத்தியபிரதேசத்திலும், ராஜஸ்தானிலும், சட்டீஸ்கரிலும் சமீபத்தில்தான் காங்கிரஸ் அரசு அமைத்திருந்தது. ஆனால், அந்த மாநிலங்களிலும் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இத்தனைக்கும் அந்த மாநிலங்களில் பா.ஜ.க. அரசுகள் செய்யத் தவறிய விவசாயக்கடன் தள்ளுபடியை காங்கிரஸ் அரசுகள் பொறுப் பேற்றவுடன் நிறைவேற்றியிருந்தன. அப்படியிருந்தும் தோல்வி ஏன்? இரண்டு மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் பா.ஜ.க. பதித்து வைத்திருக்கும் இந்துத்துவா அரசியல்தான். இரண்டு மாநிலங்களிலும் பாதிக்குப் பாதிகூட வெற்றிபெற முடியாமல் போனதற்கு, காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் மூத்தோர் இளையோர் இடைவெளியும் ஒரு காரணம்'' என்கிறார்கள்.


ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் இந்த முயற்சிக்கு அணைபோட்டு தடுத்துவிட்டார். டெல்லியில் 7 தொகுதியையும் பா.ஜ.க.விடம் இழக்க இது காரணமாக அமைந்துவிட்டது. பா.ஜ.க.வை ஒழிக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்டிருந்த மம்தா, சந்திரபாபு நாயுடு ஆகியோர் அவரவர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க தவறிவிட்டனர். இதன் விளைவு மேற்குவங்கத்தில் பா.ஜ.க. 16-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற உதவியிருக்கிறது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததுடன், மக்களவைத் தொகுதிகளையும் ஸ்வீப் செய்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் நடந்த கூட்டணிக் குழப்பங்கள் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கியமான சாட்சி. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பைக் காட்டிலும் மாநிலத்தில் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை தவிர்க்க முடியாத தலைவர்களால் ம.ஜ.த. ஆட்சியில் இருந் தும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்வி யைத் தழுவினார். 1972 ஆம் ஆண்டிலிருந்து தோல்வியைச் சந்திக்காத மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக தோல்வி யடைகிறார். மதச்சார் பற்ற ஜனதாதளத்தின் குடும்ப அரசியல் கர்நாடக அரசியலை கேலிக்கூத்தாக்கிவிட்டது'' என்கிறார்கள்.

குடும்ப அரசியல் என்று பார்த்தால், கர்நாடகாவில் தேவ கவுடா, அவருடைய பேரன் நிகில் குமாரசாமி ஆகியோரும், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவும், மத் தியபிரதேசத்தில் ஜோதி ராதித்திய சிந்தியாவும், காஷ்மீரில் முப்தி முகமது சயீதின் மகள் மெஹ்பூபா முப்தியும், தோல்வி அடைந்தனர். இதற்கு மாறாக, தமிழகத்தில் கலைஞரின் மகள் கனிமொழி, காஷ்மீரில் பரூக் அப்துல்லா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராவின் மகன் துஷ்யந்த், மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் கமல்நாத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தத்தில் கடந்த முறை தங்களுடைய ஒற்றுமையின்மையால் பா.ஜ.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த எதிர்க்கட்சிகள், இம்முறையும் கூட்டணி கணக்கில் தவறியதால் மோடியை பிரதமராக்கியுள்ளன. கடந்தமுறையைக் காட்டிலும் கூடுதல் இடங்களுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப்போகும் மோடியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நடந்த குளறுபடிகளின் விளைவு இனிமேல்தான் தெரியவரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தார்கள். அதைச் சரிசெய்வதில் மோடி தனது 2.0 ஆட்சியில் ஆர்வம் காட்டுவாரா? எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளை மோடி எதிர்கொள்வாரா? அல்லது கடந்த காலத்தைப் போல காங்கிரஸையும், பாகிஸ்தானையும் காட்டியே அரசியல் செய்யப்போகிறாரா? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தப்படி செயல்படும் பா.ஜ.க. ஏற்கனவே வகுத்துள்ள இந்துத்வா கொள்கைப்படி இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை நீக்குவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, இந்து-சமஸ்கிருதத்தை வலிந்து திணிப்பது, இந்து நாடாக மாற்றுவது என மோடி அரசின் அடுத்தடுத்த ஆட்டம் ஆரம்பமாவதைக் காண இந்தியா காத்திருக்கிறது.
 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.