திரிபுராவில், முதல்வர்பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி,மூத்த தலைவரானஅத்வானியை அலட்சியம் செய்த காணொளி வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும்கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

Advertisment

திரிபுராவில் கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் இருபத்தைந்து வருட கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்துபா.ஜ .க.வெற்றிபெற்றது.

modi

அதைத்தொடர்ந்து,நேற்று முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டு பிப்லாப் தேப் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

Advertisment

அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,பா.ஜ.க. தேசிய தலைவர்அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் திரிபுராமுதல்வர் மாணிக் சர்க்கார் போன்றோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார், அந்த நிகழ்வின் ஆரம்பத்தில் அனைத்து தலைவர்களும், மேடைக்கு வந்தபிரதமர் மோடிக்குவணக்கத்தை தெரிவித்தனர்.

எல்லா கட்சி நிர்வாகிகளுக்கும் அவர்கள் வணக்கத்தை ஏற்று பதில்வணக்கம் செலுத்தினார் மோடி.ஆனால் மூத்த தலைவரானஅத்வானி வணக்கம் செலுத்தும்போதுபாராமுகமாக இருந்துகொண்டார். இதனால்அத்வானி முகம் வாடிப்போனது.அந்த காணொளி வலைத்தளங்களில்பெரும் விமர்சனத்திற்குஉள்ளாகி வருகிறது.

modi

Advertisment

"குஜராத் தேர்தலின் போதுநடந்த பா.ஜ.க. பிரச்சாரக்கூட்டத்தில்அத்வானிஅவர்களுக்கு அருகில் நின்று மைக் பிடித்தவர் மோடி. ஆனால் இன்று இப்படி நடந்துகொள்ளும் அவருடைய இந்தபோக்கு கண்டிக்கதக்கது" எனஉட்கட்சியிலேயேபெரும்விமர்சனத்தையும், சர்ச்சையையும்ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.