Advertisment

இந்தத் தலைமுறைக்கு ஸ்டாலின் யார்? - அவர் முன் இருக்கும் 7 சவால்கள்! 

திமுகவினர் தங்கள் தளபதியின் அறுபத்தி ஐந்தாவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடி முடித்துள்ளனர். தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களுள் ஒருவராக ஸ்டாலின் இருக்கிறார். மக்கள் அன்பைப்பெற்ற கட்சித்தலைமையும் இல்லை, மதிக்கத்தக்க வகையில் ஆட்சியுமில்லை என்று அ.தி.மு.க இருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக மக்கள் நினைப்பவர்களில்முதலில் இருக்க வேண்டியவர் ஸ்டாலின். இருக்கிறாரா? சமூக நீதி போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் ஆகியவற்றை பார்த்திராதஇன்றைய தலைமுறையின் பார்வையில் ஸ்டாலின் யார்? இந்தத் தலைமுறையின் ஆதரவைப் பெறும் பயணத்தில்ஸ்டாலினுக்கு உள்ள சவால்கள் என்ன?

Advertisment

Stalin 2.0

  • 1967ல் இந்திய துணைக் கண்டம் முழுவதும் தன் ஆளுமையைக் கொண்டிருந்த காங்கிரசை, தமிழகத்தில் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய போது, திமுக தமிழகம் தேடிய மாற்றமாக இருந்தது. காங்கிரசின் பண்ணையார்கள், பணக்காரர்களை நடுங்க வைத்த பாட்டாளிகளாக இருந்தனர் திமுகவின் மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளும். ஆனால், இந்தத் தலைமுறை பார்க்கும் திமுகவின் மாவட்டச்செயலாளர்களும் நிர்வாகிகளுமோகல்லூரிகளுக்கு சொந்தக்காரர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள். சாதாரண மக்களுக்கான கட்சியாக, பெரும் பின்புலன் இல்லாத இளைஞர்களும்செயல்படக்கூடிய கட்சியாக திமுக இருக்கிறதா என்பதையும், மக்களுக்கு நெருக்கமாக திமுக நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்து, இளைஞர்களிடம் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
  • 2006-11 கடைசியாகதமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த காலகட்டம். 2ஜி ஊழல் வழக்கு, இலங்கையில் இறுதி யுத்தம் உச்சத்தில் இருந்த பொழுது எதிர்பார்த்த வேகத்தில், தீவிரத்தில்செயல்படவில்லை என்ற பெயர், மாவட்டங்களில் அமைச்சர்கள் மீதான நில அபகரிப்பு, தொழில் அராஜக புகார்கள், திருமங்கலம் ஃபார்முலாஎன இவைதான் திமுகவின் கடைசி ஆட்சி புதிய வாக்காளர்களிடம் விட்டுச் சென்ற தடங்கள். மெச்சத்தக்க ஆட்சியைத் தராத அதிமுகவையே மீண்டும்மீண்டும் அரியணையில் ஏற்ற இவையும் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதிமுக அரசு இவற்றையெல்லாம் தாண்டும் அளவுக்கு ஆட்சி செய்து வந்தாலும்இந்தத் தடயங்களை எல்லாம்மாற்றி புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதும் ஒரு சவாலே.

    m.k.stalin and mk

  • இன்றைய நிலையில் திமுகவில் புதிதாய் சேரும் ஒரு சாதாரண இளைஞர் எந்த அளவுக்கு கட்சிக்குள் வளர முடியும் என்பது ஒரு கேள்வியே. அந்த அளவு கெட்டி தட்டிப் போய் இருக்கின்றன திமுகவின் அதிகாரச் சுவர்கள். தலைமை அளவில் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் ஒரு பக்கமென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் அது இருப்பதை கட்சியின் தொண்டர்களே மறுக்க மாட்டார்கள். ஜனநாயக முறைப்படி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கட்சி என்ற பேர் இருந்தாலும்பெரும்பாலான மாவட்டங்களில்பன்னெடுங்காலமாகமாவட்ட செயலாளர்கள் மாற்றமே இல்லாமல் இருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அவர்களுக்கு அடுத்து இப்பொழுதே வாரிசுகள் வரிசையாக இருக்கின்றனர். ஸ்டாலின், பதினான்குவயதில் கட்சிப் பணியைத் தொடங்கி, 23 வயதில் சிறை சென்றவர். அவர் மேல் இருக்கும் அதே பார்வை உதயநிதி மேல் இருக்காது. பிறந்தநாளன்றுதன் பேரனுடன் வந்து பெரியார் சமாதிக்கு மரியாதை செலுத்தியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும்,தலைமையிலிருந்து அடிமட்டம் வரை வாரிசு அரசியல் என்ற உணர்வைப் போக்குவது பெரும் சவால். சமீபத்தில் திமுக தலைமை தன் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,இரண்டு பதவிகள் வகிக்கும் நிர்வாகிகளை தாங்களே முன்வந்து ஒரு பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது. மாற்றம் நடக்கிறதா பார்ப்போம்.

  • சுற்றுப்புறச்சூழல், ஆறுகள் அழிவு, மலைகள் ஆக்ரமிப்பு என இயற்கை வளங்களை அழிப்பதில் தமிழகம் பின்தங்கிவிடவில்லை. ஆற்று மணலிலிருந்து இப்பொழுது எம்-சாண்ட் வரை எதிலுமே திமுக காரர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. இன்றையஇளைஞர்கள், இயற்கை விவசாயம், ஏரி,குளங்கள் மீட்பு, மீத்தேன், நியூட்ரினோ எதிர்ப்புஎன பலவகைகளில்சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயல்கின்றனர். அதைப் பற்றி பேசுகின்றனர். அந்த வகையில் ஏரிகளை ஆக்கிரமிக்காமல்,ஆறுகளை சுரண்டாமல் காக்கும், காடுகளை அழிக்காமல் வளர்க்கும் கட்சியாக திமுக மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பது ஒரு சவால் தான்.
Advertisment

mk stalin and uday

  • இந்தி எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு என எதிர்ப்புகளைமட்டுமே எதிர்பார்ப்பவர்கள் அல்ல இன்றைய இளைஞர்கள். மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முக்கியம்தான். அதைவிட முக்கியமாகக் கருதப்படும் பல விஷயங்கள் இருக்கின்றன.ஒரு தலைமுறையில் பெரும் எண்ணிக்கையிலானஇளைஞர்கள், முன்னேறுவோம் என்றெண்ணி பெருகிப் போனபொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து இன்று வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்கள். தமிழகத்துக்கு வருவதாக இருந்தபுதிய நிறுவனங்களோ நெல்லூருக்கும் விஜயவாடாவுக்கும் சென்றுவிட்டன. சுற்றுச்சூழலிலும் கீழே சென்று, தொழில்துறையிலும் கீழே செல்லும் தமிழ்நாட்டை மீட்கமுறையான விவரமானதிட்டங்கள் வேண்டும்.

  • ஒரு பக்கம் சீமான்,திருமுருகன் காந்தி என போராட்ட களத்திலும் மறுபக்கம் ரஜினி, கமல், விஜய் என நட்சத்திர வெளிச்சத்திலும் இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதையெல்லாம் தாண்டி அரசியல் சிந்தனை உள்ள இளைஞர்களை ஈர்க்க இன்னும் வீரியமான செயல்பாடுகள் தேவை. ஜல்லிக்கட்டு, நீட் என இளைஞர்கள் களத்துக்கு வந்துவிட்ட காலகட்டம் இது.சமீபமாகசீறினாலும், இடையில் பல தருணங்களிலும், 'பாயிண்ட் வரட்டும், பாயிண்ட் வரட்டும்' என்று பேசாமல் இருந்தது ஏமாற்றமே. முந்தைய தலைமுறை போலஎந்தத் தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசுவது, பன்னீர்செல்வத்துடன் ஒரே மேசையில் உணவருந்துவது என்று அரசியல் நாகரீகத்தில் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தாலும், அது வெறுமனே அதிகாரத்தில் இருபவர்களுக்கிடையேயான நல்லிணக்கமாக சுருங்கி விடாமல்மக்கள் பிரச்சனைகளில்எந்த அளவுக்கு பயன்படும் என்பதும் முக்கியம்.'நமக்கு நாமே' பயணத்தில் இளமைத் தோற்றம், சட்டசபையில் ஆவேசம் என எல்லாவற்றையும் மீம்ஸ் போடும் இந்தத் தலைமுறையின் பெரும்பான்மையைஈர்ப்பது ஒரு பெரிய சவாலே.

    stalin in namakku name

  • அதற்கு முன்பே பல காலமாக நடந்து வந்தாலும், ஊடக கவனத்தாலும் அழகிரியின் ஆற்றலாலும், இன்றும் அறியப்படுவது திருமங்கலம் ஃபார்முலா. இன்று அதுதினகரன் ஃபார்முலா என்று பெரும் பரிணாம வளர்ச்சியே நடந்துவிட்டது. ஆர்.கே.நகரில், திமுக,ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இடைத் தேர்தலில் இரண்டாம் இடத்தையும் பிடிக்க முடியாத நிலையில், இந்த உறுதி சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமா என்பதும் ஒரு நடைமுறைசவாலே.

பல சவால்களை பல விதங்களில் எதிர்கொண்டுதான் திமுக எனும் பேரியக்கத்தின்செயல் தலைவராகியிருக்கிறார்தளபதி ஸ்டாலின். அவற்றை விட சற்று கடினமானஇந்த சவால்களை வென்று திமுகவை கரை சேர்ப்பாரா? பார்ப்போம்.

admk mkstalinbirthday kalaingar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe