Advertisment

என் மீது வழக்கு தொடர்ந்தால் சட்ட ரீதியாக சந்திக்கத் தயார்! திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி!

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினோ வண்ணாரப்பேட்டையில் போலீஸார் வன்முறையில் இறங்கியதை கண்டித்து பேசினார். அதற்க்கு மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயக்குமாரோஅந்த போராட்டத்தை தூண்டி விட்டதே லியோனிதான் குற்றம் சாட்டினார். அதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

.

இந்த குற்றச்சாட்டு பற்றி கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணை தலைவரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனியிடம் கேட்டபோது, கடந்த12ம் தேதி வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் தொடர்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான்தான் தூண்டிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டிற்கு முழமையாக மறுக்கிறேன்.

Advertisment

dindigul i leoni - minister D. Jayakumar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அந்த கூட்டத்தில் இந்துக்கள், கிருஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் அருகருகே வேறுபாடின்றி அமர்ந்து இருந்தனர். இந்த மண்ணிலிருந்து இஸ்லாமியர்களை பிரிக்க முடியாது. இந்திய மண்ணோடு கலந்தவர்கள் இஸ்லாமியர்கள். இன்று பாரதப் பிரதமர் கொடியேற்றும் செங்கோட்டை உஸ்தாத் என்ற இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது.

மதசார்பின்மைக்கு ஆதரவாகுவும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் நடத்தப்படுகின்ற போராட்டம் குறிப்பிட்ட சமூகத்தை தூண்டிவிட்டு நடத்துகிற போராட்டம் அல்ல. தூண்டிவிடுவதே பாரதிய ஜனதா தான். மோசமான பொருளாதாரம், வேலையின்மை, விலை உயர்வு இதிலிருந்து திசை திருப்புவதற்கு, இந்த குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி இன்றைக்கு இந்தியா முழுவதும் போராட்டம் நடப்பதற்கு பாஜக தான் காரணம்.

பாஜகவின் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்தது அதிமுக தான். இது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் செய்த மிகப்பெரிய துரோம். அந்த துரோகத்தை கண்டித்து தான் 12ம் தேதி நடைபெற்ற வண்ணாரப்பேட்டை கூட்டத்தில் பேசினேன். அதனால் இது போராட்டத்தை தூண்டிவிடுவது இல்லை. அன்று நடந்தது தன்னெழுச்சியாக நடந்த போராட்டம். அமைச்சர் ஜெயக்குமார் எப்பொழுதுமே ஒரு விஷயத்தை சுலபமாக திசை திருப்பி விடுவார்.

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் பெண்கள் மீதெல்லாம் காவல் துறை தாக்குதல் நடத்தியது பற்றி கேட்டதற்கு, காவல் துறை மீது என்ன தவறு நடந்தது என்று அதற்கு பதில் சொல்லாமல், தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஐ. லியோனி கூட்டத்தில் பேசினதுனாலதான் இந்த போராட்டமே தூண்டி விடப்பட்டது என்ற தவறான தகவலை பதிவு செய்திருக்கிறார். இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்.

அமைச்சர் ஜெயக்குமார் எந்த பிரச்சினைக்கும் இது மாதிரிதான் பதில் சொல்வார். உதாரணத்திற்கு ஜெயஸ்ரீ என்ற பெண் மீது பேனர் விழுந்து இறந்த சமயத்தில் இந்த இடத்தில் அந்த பெண் கிராஸ் பண்ணுச்சு அதனால் தான் விழுந்துச்சு. இந்த மாரி தான் எல்லா நேரத்தில் பதில் சொல்லுவார். அது மாதிரி இந்தியா முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடந்துக்கிட்டு இருக்கு. பல்கலை கழகத்தில் போலீசார் மாறுவேடம், முகமுடி அணிந்து போய் தாக்கியிருக்கிறார்கள் என்பது நேரடியாக நிருபிக்கப்பட்டிருக்குது.

இப்படி இந்தியா முழுவதும் நடந்துகிட்டு இருக்கிற போராட்டத்தை சென்னை வண்ணாரப்பேட்டையில லியோனி கூட்டத்தில் பேசி தூண்டிவிட்டதாக பேசி திசை திருப்புகிற செயல் வேற எதுவும் இருக்காது.ஜெயலலிதா அம்மையார் உயிரோடு முதல்வாரக இருந்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் வாய் திறந்து ஒருநாளும் பேசினதே கிடையாது. அந்த அம்மையார் இறந்த பிறகுதான் ஒரு நாளைக்கு மூன்று தடவ பேட்டி கொடுக்கிறார். எல்லாத்துக்கும் பதில் சொல்லிக்கிட்டு இருக்கார்.

பாறைக்கு அடியில் இருக்கிற தவளை, வெயில் காலத்தில அதுபாட்டுக்கு இருக்கும், அது இருக்கிற இடமே தெரியாது. லேசா மழை பெஞ்சதுமே தவளை மேல ஈரம் பட்டுவிடும். பட்டவுடனே சத்தம் கொடுக்க ஆரம்பச்சிடும். அந்த சத்தத்தை எல்லாமே கேட்டிருப்போம், தவளை சத்தத்தை கேட்டு பக்கத்தில இருக்க பாம்பு பார்க்கும் இவளோ நாள் இங்கதான் இருந்தியானு சொல்லி லபக்குன்னு தவளையை கவ்விடும். அமைச்சர் ஜெயக்குமாருக்கு இந்த உதாரணத்தைதான் சொல்லுவேன்.

ஜெயலலிதா அம்மையார் இருக்கும்போது வாயே திறக்கதாத நீங்க, இப்ப ஆட்சி அதிகாரம் என்ற ஈரம் பட்ட உடன் தவளை மாதிரி பேசிட்டே இருக்கீங்க. ஜனநாயகம் என்கிற பாம்பு உங்களை கவ்வ ரொம்ப நாளாகாது. வண்ணாரப்பேட்டையில் மத ஒற்றுமைக்காவும், மத சார்பிண்மைக்காவுதான் கூட்டத்தில் பேசுனேன். மூன்று மத பாடல்களையும் பாடி காண்பித்தேன். பாரதிய ஜனதா இப்போது தனிப்படுத்தி, இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தி திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதுதான் குடியுரிமை திருத்தச்சட்டம். இதனை இஸ்லாமியர்கள் அமைதியாக ஜனநாயகப்படி போராடி வருகிறார்கள். எந்த இடத்திலும் ஒரு அசம்பாவிதங்கள் நடக்கவில்லை.

15ம் தேதி ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டர்கள். அதில் 10 ஆயிரம் பேர்கள் வரை இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மணி நேரம் பேசினேன். அப்போது ஒரு விசில் சத்தம் கூட இல்லை. ஏனா கையில் தேசிய கொடியை வைத்திருந்தார்கள். அப்படியொரு ஜனநாயக பூர்வமாக நடந்து கொண்டார்கள்.

வண்ணாரப்பேட்டையில் நடந்தது கொடுரா ஜனநாயக தாக்குதல் அதற்கு பதில் சொல்லறதுக்கு வழியில்லாமல், திண்டுக்கல் லியோனி மீது பழியைப் போட்டு தூண்டிவிட்டதா சொல்கிறார். கூட்டத்தில் நான் பேசியது, பாபர் மசூதி தீர்ப்பு வந்த சமயத்தில், அகில இந்திய ஜமாத்திலிருந்து இந்தியாவிலிருக்க கூடிய அனைத்து இஸ்லாமிய தலைவர்களும் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்றனர். அவர்கள் ஏற்றுக்கொண்டது இந்திய இறையான்மைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நாங்கள் வேறு இடத்தில் கூட பாபர் மசூதியை அமைத்துக் கொள்வோம் என்று சொன்னார்கள். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெரிய அளவில் கிளர்ச்சி ஏற்பட்டு போராட்டத்தை நடத்த என்ன காரணம். நாங்கள் மசூதியை நேசிப்பதை விட இந்த மண்ணை நேசிக்கிறோம். மார்க்கத்தை விட இந்த மண் தான் முக்கியம். இந்தியாவிடம் இருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது என்று நாட்டு பற்றுடன் இஸ்லாமியர்கள் நடத்துகின்ற மதச்சார்பிண்மைக்கு ஆதரவான போராட்டம்.

இந்த போராட்டமானது இஸ்லாமியர்கள் மட்டும் நடத்த வேண்டிய போராட்டம் அல்ல. இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டிய போராட்டம். மூன்று இஸ்லாமியர்கள் குடியரசு தலைவர்களாக இந்தியாவை அலங்கரிச்சு இருக்காங்கனா இந்தியாவிடமிருந்து அவர்களை யாரும் பிரித்து விட முடியாது. இந்த கருத்தை வலியுறுத்தி தான் கூட்டத்தில் பேசினேன்.

காந்தியின் சுதந்திர போராட்டம் எப்படி வெற்றி பெற்றதோ, அண்ணாவின் மொழி போராட்டம் எப்பட வெற்றி பெற்றதோ, அது போல் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான, மதசார்பிண்மைக்கு ஆதரவான இந்த போராட்டம் வெற்றி பெறும் என்ற அந்த கூட்டத்தில் பேசினேன். இதுல வந்து நான் தூண்டிவிருறதுக்கு ஒன்னுமே இல்லை.

இந்தியாவின் மத ஒற்றுமையை பாதுகாப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகம் எடுத்திருக்கிற கையெழுத்து இயக்கம் எப்படி வெற்றிகரமாக நடந்தது என்கிறதையும் கூட்டத்தில் பேசினேன். இதனை காரணம் காட்டி அமைச்சர் ஜெயக்குமார், தங்களது தவறுகளை மறைப்பதற்கு இதனை பயன்படுத்திருக்கார். இதை தமிழக மக்கள் நல்ல உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள். நான் வண்ணாரப்போட்டை கூட்டத்தில் பேசியதை யூடியுப் வழியாக ஒரே நாளில் நாலரை லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். மக்கள் நியாயம் என்று ஏற்றுக் கொண்ட இந்த கருத்து, ஜெயக்குமாருக்கு மட்டும் தூண்டிவிடுவதாக தெரிகிறது.

இதிலிருந்து அவர்கள் செய்யும் தவறுகளை மறைக்கு செய்யும் முயற்சி என்று தெரிகிறது. அதனால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது போன்ற திசை திருப்பிற முயற்சியில் ஈடுபட வேண்டாம். இந்த குடியுரிமை சட்டம் அமல் படுத்தியதிலிருந்தே இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நான் தூண்டியதாக சொல்வது பொய்யான குற்றச்சாட்டு. அதோடு வன்முறையை தூண்டுபவர்கள் மேல் வழக்கு தொடர்வோம் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி என் மீது வழக்கு தொடர்ந்தாலும் அதை சட்டரீதியாக சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

interview Dindigul I. Leoni vannarapettai minister jayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe