பாப் இசைஉலகின் பிதாமகன், பாப் ரசிகர்களின் கடவுள் மைக்கேல் ஜாக்சன். உலகின் எல்லா மூலையிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த அவர் ஜூன் 25, 2009ல் இறந்தார். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கும்போதே பல உச்சங்களைத் தொட்டவர். அவர் இறந்த பின்பும் கூடஅது இன்றும் தொடர்கிறது, அவரது பாடல் சி.டி.க்கள் விற்பனை, பாடல்கள் காப்புரிமை, ஏலம் போன்றவற்றால்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மைக்கேல் ஜாக்சன் இறந்தது 2009ஆம் ஆண்டில்.அந்த ஆண்டில் மட்டும் அவரது வருமானம் 9 கோடி டாலர்கள். 2010ல் அது 27.5 கோடி டாலர்கள். 2011ஆம் ஆண்டில் அவரது ஆண்டு வருமானம் 17 கோடி டாலர்களாகும். 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் முறையே 14.5 கோடி, 16 கோடி, 14 கோடி டாலர்களாகும். 2015ம் ஆண்டில் 11.5 கோடி டாலர்களாகும். இப்போது வரையில் அவரது ஆண்டு வருமானத்திலேயே 2016ம் ஆண்டின் வருமானம்தான் அதிகம். அந்த ஆண்டில் மட்டும் அவரது ஆண்டு வருமானம் 82.5 கோடி டாலர்கள். கடந்த ஆண்டில் (2017) அவரது ஆண்டு வருமானம் 7.5 கோடி டாலர்கள்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இப்படியாக அவர் உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பின்னும் பெரும் பணக்காரராகவே இருக்கிறார். உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ஜாக்சன். தான் வாழும் காலத்திலேயே நிறைய தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்காக அவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இறந்த பின்னும் அப்படியே வாழ்கிறார் மைக்கேல் ஜாக்சன்...
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">