இயற்கையின் மீது காதல் கொண்ட நம்மாழ்வார் காவிரியில் இறங்கி நடந்த போது அவருடன் நடந்த இளைஞர் இரா.ஜெயராமன் மீது கொண்ட பற்றினால் பாரம்பரிய நெல் ரகங்களை நீ மீட்க வேண்டும் என்று சொன்னதோடு சில ரக நெல் விதைகளையும் அவரிடம் கொடுத்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்படி திருத்துறைப்பூண்டி கட்டிமேடு ஆதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நெல் ஜெயராமன் தனது தேடல்களை தொடங்கினார். ஒவ்வொரு நெல் ரகமாக தேடித் தேடி ஒவ்வொரு ஊராக ஓடினார். இறுதியில் 174 பாரம்பரிய நெல்ரகங்கள் சேகரித்தார். சேகரித்த நெல்லை தனது வீட்டில் வைத்து கண்காட்சி நடத்தவில்லை. மாறாக ஒவ்வொரு மே மாதமும் நெல் திருவிழாவைநடத்தி திருவிழாவுக்கு வரும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தலா 2கிலோ பாரம்பரிய நெல் விதையைக்கொடுத்து அடுத்த திருவிழாவுக்குவரும் பொது 4 கிலோ நெல்லை வாங்கி அடுத்தடுத்தவிவசாயிகளுக்கு கொடுத்து தமிழகம் முழுவதும் மீண்டும்பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு விவசாயிகளை தயார்படுத்திவிட்டார்.

nel jayaraman

Advertisment

இதனால் இவருக்கு குடியரசுத் தலைவர் விருதும் மற்றும் பல விருதுகளும் கிடைத்தது. விருதுகளுக்காக நெல்லை சேகரிக்கவில்லை. என் மக்கள் ஆரோக்கியமாக வாழவேண்டும். அதற்கு இயற்கையாக விளையும் பாரம்பரிய நெல்வேண்டும் என்பதால் தான் சேகரித்து வருகிறேன் என்று தொடர்ந்துதனது சேவையை செய்து வந்தார்.விவசாயிகளால் கைவிடப்பட்ட பழைய பாரம்பரிய நெல்ரகங்கள் கருப்பு கவுணி, அறுபதாம் குறுவை, குள்ளக்கார், கிச்சடிசம்பா, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, குடவாலை, காட்டுயானம்,கூம்பாலை, குழியடிச்சான் போன்ற நெல் 174 நெல் ரகங்களை சேகரித்தவர் கடந்த 2012 ம் ஆண்டு தனது வீட்டுக்குள் 1969 ம் ஆண்டுஅறுவடையின் போது சாமிக்காக துணியில் முடிந்து வைத்த ஒரு படி கைவரச்சம்பா நெல்லை விதைத்து சுமார் 400 கிலோ அறுவடை செய்து கைவரச்சம்பா என்ற பாரம்பரிய நெல்லையும் மீட்டார்.

பாரம்பரிய நெல் விதைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முளைக்கும், விளைச்சலும் தரும் என்பதற்கு கைவரச்சம்பாவே சான்றாக இருந்தது. நஞ்சை விதைக்கும் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்டவீரியமில்லா விதைகளால் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டப்பட்ட நம் பாரம்பரிய நெல் விதைகளை மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து இன்று தமிழகம் முழுவதும் நஞ்சில்லா உணவுக்காகபாரம்பரிய நெல் விதைகளை கொடுத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தி வந்த நெல் ஜெயராமனுக்கு கொடிய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மனிதனுக்கு எந்த நோய் வரக் கூடாது என்று 174 ரக பாரம்பரியநெல் விதைகளை மீட்டெடுத்தாரோ அவருக்கே அந்த நோய் வந்துவிட்டது.பாரம்பரிய நெல் ஜெயராமனை அந்த கொடிய நோயிலிருந்து மீட்போம் என்று உணர்வுள்ள அத்தனை உள்ளங்களும் கலங்கினார்கள்.கைகொடுத்து துணைக்கும் நிற்கிறார்கள். கிட்னியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொடர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னதால் சென்னை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார்.நஞ்சில்லா உணவுக்காக போராடி விதைகளை சேகரித்தவிவசாயி நெல் ஜெயராமனுக்கு சிகிச்சை என்றதும் நேரில் கூடசென்று பார்க்காமல் தனது உதவியாளர் மூலம் அப்பல்லோநிர்வாகத்திடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமன்மருத்துவ செலவுகள் அத்தனையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதுடன் முதலில் வைப்புத் தொகைக்கு ரூ. 1 லட்சம்காசோலையும் வழங்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல்அடிக்கடி மருத்துவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தும் வந்துள்ளார்.

Rice

Advertisment

இந்த நிலையில் தான் தனக்கு மருத்துவ உதவி செய்துள்ளநடிகர் சிவகார்த்திகேயனை நேரில் பார்க்க வேண்டும் என்றுநெல் ஜெயராமன் சொல்ல அப்பல்லோ வந்தார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் மருத்துவ உதவிக்கு நன்றிகள் என்று நெல்ஜெயராமன் சொல்ல.. ”அய்யா நீங்க இந்த நாட்டின் பொக்கிஷம்” உங்களை காக்க வேண்டியது எங்கள் கடமை. அந்த கடமையை தான்செய்திருக்கிறேன். அதுக்காக நன்றி சொல்லாதீங்க. உங்களைப் போன்ற விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். உங்க மருத்துவச் செலவு மட்டுமில்லை உங்க மகன் சீனிவாசராமின் முழு படிப்பு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் பூரணகுணமடைஞ்சுடுவீங்க என்று நெகிழ்ச்சியாக சொல்ல.. அவர்கைகளை பற்றிக் கொண்டார் நெல் ஜெயராமன்.

இதைத்தொடர்ந்துநடிகர்கள் சத்தியராஜ், சூரி, நாம்தமிழர் கட்சி சீமான்,த.மா.க. வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன், பி.ஆர்.பாண்டியன், அ.ம.மு.க கலைராஜன், டி.ஜி.பி. ராசேந்திரன் மற்றும் பலரும் போய் பார்த்து நலம் விசாரித்துச்சென்றனர். இந்த தகவல்கள் நக்கீரன் இணையத்தில் செய்திகளாக வந்து கொண்டிருந்தது. அதன் பிறகு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சென்றுபார்த்து மருத்துவச் செலவை ஏற்பதாக சொன்னார்கள். எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார். இப்படி அனைவரும் சென்று பார்த்து அவர் மீண்டு வரவேண்டும்என்று நினைத்தார்கள். ஆனால் கொடிய நோய் அவரை உயிருடன் விடநினைக்கவில்லை. தொடர் சிகிச்சையில் இருந்த நெல் ஜெயராமன் 2018டிசம்பர் 6 ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்தார். அவரதுஇறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனைபேரும் நெல்ஜெயராமனை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றுகோரிக்கை வைத்தனர்.

அதன்படி பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது.அவரது இழப்பை விவசாயிகள் பெரிய இழப்பாக அனுசரித்தனர்.ஆனாலும் அவர் செய்து வந்த அத்தனை பணிகளையும் அவரது அண்ணன்மகன் உள்பட அவர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.அதனால் தான் இத்தனை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுத்த நெல் ஜெயராமன் பற்றி பாடப்புத்தகத்தில் சிறு பகுதி சேர்க்கப்பட்டிருந்தாலும் அவரது நினைவு நாளான டிசம்பர் 6 ந் தேதியைபாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது நக்கீரன் கோரிக்கையாக உள்ளது.இந்த நிலையில் நெல் ஜெயராமன் நினைவு தினத்தை டிசம்பர் 6 ந்தேதி அவரது சொந்த கிராமத்தில் மட்டுமல்ல கிரீன் நீடா அமைப்பினர்சென்னையில் அனுசரிக்க திட்டமிட்டு பிரபலங்களுக்கும், பள்ளிகுழந்தைகளுக்கும் அழைப்பு கொடுத்துள்ளனர். மேலும் இயற்கை விவசாயஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் நெல் ஜெயராமன் நினைவு தினத்தைஅனுசரிக்கிறார்கள்.

rice

இது குறித்து கிரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்ராஜவேல் "நெல் ஜெயராமன் அவரது வாழ்க்கை முழுவதும் பாரம்பரியநெல் தேடலுக்காகவே செலவிட்டார். அதனால் தான் 174 ரகங்களை மீட்டார். மீட்டதோடு விவசாயிகளுக்கு கொடுத்து மறு உற்பத்தியும் செய்யவைத்துவிட்டார். அவரது இழப்பு இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமல்லஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பெரிய இழப்பு. அவர் மீட்ட ரகங்களை தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள்பயிரிட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு கட்டுபடியான விலைகிடைக்கவில்லை. உற்பத்தி செய்த பாரம்பரிய நெல்லை விற்கமுடியாமல் விவசாயிகள் தவிப்பதால் மறுபடியும் உற்பத்தி செய்யஅச்சப்படுகிறார்கள். அவர் மீட்ட பாரம்பரிய நெல் அரிசி மக்களுக்கு நோய்வராமல் தடுக்கும். அதனால் இன்று பணக்காரர்கள் அந்த ரகங்களைஉற்பத்தி செய்தோ வாங்கியோ சாப்பிடுகிறார்கள்.

ஆனால்ஏழைமக்களுக்கு நஞ்சான உணவே கிடைக்கிறது. அடித்தட்டு ஏழைமக்களுக்கும் நஞ்சில்லாத இயற்கையாக விளையும் பாரம்பரிய அரிசிகிடைக்க அரசுகள் உதவி செய்ய வேண்டும். மேலும் பாரம்பரிய நெல்உற்பத்திக்கு உழவு செலவு உள்ளிட்ட செலவினங்களை மானியமாகவிவசாயிகளுக்கு வழங்கினால் சில ஆண்டுகளிலேயே தமிழ்நாடுமுழுவதும் பாரம்பரிய நெல் உற்பததி அதிகரிக்கும். மேலும் அவரைப் பற்றி அடுத்த தலைமுறையும் அறிந்து கொள்ளவேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களை உணவுக்காக பயன்படுத்தவேண்டும் என்பதற்காகத் தான் சென்னையில் மாணவர்கள் மத்தியில்அஞ்சலி நிகழ்ச்சியை வைத்திருக்கிறோம். இந்த நிலையில் நெல்ஜெயராமனின் பாரம்பரிய நெல் பற்றி நடிகர்கள் சத்தியராஜ், ஸ்ரீகாந்த்மற்றும் பலர் சிறிய வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.

ஒட்டுாமொத்த விவசாயிகளின் கோரிக்கை,நெல்ரகங்களை மீட்டுத்தந்தஜெயராமனின் மறைந்த நாளான டிசம்பர் 6பாரம்பரிய நெல் தினமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.அடுத்தடுத்த ஆண்டுகளில் பாரம்பரிய நெல் தினத்தில் பாரம்பரிய நெல்விளைச்சலில் சாதித்த விவசாயிகளுக்கு நெல் ஜெயராமன் பெயரில்விருது வழங்க வேண்டும். இதை தமிழ்நாடு அரசு ஏற்று கோரிக்கையைநிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார். நமது கோரிக்கையை விவசாயிகளும் முன் வைத்திருப்பதுவரவேற்கத்தக்கது..இனி அரசாங்கம்தான் நிறைவேற்ற வேண்டும்.