தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் ஸ்னோலின். 18 வயதான ஸ்னோலின் தன் தாயார் வனிதாவுடன் போராட்டக் களத்திற்கு சென்றார். போராட்டம் பெரிய அளவில் உருவெடுக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் வனிதா வீட்டுக்கு வந்துவிட்டார். வீட்டில் டி.வி.யில் பாரத்தபோதுதான் ஸ்னோலின் குண்டு தாக்கியதில் உயிரிழந்தது வனிதாவுக்கு தெரிய வந்தது.