Advertisment

ஹலோ மிஸ்டர் காண்டம்... ஒரு மிசாய் கொடுங்க...

mechai varavaidya

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸ், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை குறிப்பிட்டுள்ளார். அவர்தான் மிசாய் வரவைத்யா (Mechai Varavaidya) தாய்லாந்தை சேர்ந்த இவர் ஜனவரி 17, 1941ல் பிறந்தார். பேங்காக்கில் பிறந்த இவர், ஆஸ்திரேலியாவில் தனது படிப்பை முடித்தார். 1965ல் தனது படிப்பை முடித்து தாய்லாந்து திரும்பிய அவர், குடும்ப கட்டுப்பாடு மற்றும் ஆணுறையின் அவசியத்தை வலியுறுத்தி வந்தார். பின் 1973ல் குடிமைப் பணியிலிருந்து விலகிய அவர், ஒரு இலாப நோக்கற்ற சேவை அமைப்பை நிறுவினார். குக்கிராமங்கள், அடிதட்டு மக்கள் வரை இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

குடும்ப கட்டுப்பாடு, ஆணுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த மெசாய் சில விந்தையான திட்டங்களையும் செயல்படுத்தினார். அவற்றுள்சில பள்ளிக்குழந்தைகளிடம் பலூன் ஊதும் போட்டிபோல், காண்டங்கள் ஊதும் போட்டி நடத்தினார், டேக்ஸி ஓட்டுநர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆணுறை அளித்தனர், அவர் ஒரு உணவகம் தொடங்கினார் அதன் பெயர் "கேபேஜஸ் அண்ட் காண்டம்ஸ்" (cabbages and condoms). இந்த உணவகத்தில் சாப்பிட வரும் அனைவருக்கும் பில்லுடன் சேர்த்து ஆணுறைகள் வழங்கப்பட்டன. இதில் கவனிக்கதக்கவேண்டியது என்னவென்றால் இந்த உணவகத்திற்கு அருகிலேயே குடும்பக் கட்டுப்பாடு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மிசாய் 1985 முதல் 1986 வரை தொழில்துறை துணை அமைச்சராகவும், 1987 முதல் 1991 வரை செனட்டராகவும் இருந்தார். இந்த காலங்களில் தாய்லாந்தில் எய்ட்ஸ் பரவத் தொடங்கியது. இவர் தனது பிரச்சாரத்தை மேலும் துரிதப்படுத்தினார். பாதுகாப்பான பாலியல் உறவு (sexual safety awarness) குறித்த பிரச்சாரங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார். எய்ட்ஸ், குடும்ப கட்டுப்பாடு, பாதுகாப்பான உறவு, ஆணுறை பயன்பாடு என அனைத்தை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திய இவர் தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தால் தாய்லாந்து குடும்பத்தில் குழந்தைகள் பிறப்பு சராசரியை 7லிருந்து 1.5 ஆக குறைத்தார். இது அவரின் பெரும்சாதனை என்றே கூறலாம். மேலும் அவர் எய்ட்ஸ் விகிதத்தையும் குறைத்தார். இவரால்தான் தாய்லாந்து மக்கள் நோயின்றி வாழ்கின்றனர் என்று கூறினாலும் அது மிகையாகாது. அதனால்தான் தாய்லாந்து மக்கள் அவரை மிஸ்டர் காண்டம் என அழைக்கின்றனர். மேலும் தாய்லாந்து மக்கள் ஆணுறை வேண்டும் என்றால் கடைகளில் காண்டம் கொடுங்கள் என கேட்பதில்லை அதற்கு பதிலாக மிசாய் என இவரது பெயரைக்கூறியே கேட்கின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பில்கேட்ஸ் அண்மையில் பதிவிட்டுள்ள பதிவில் இவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். பில்கேட்ஸ் ஒருவரை குறிப்பிடுகிறார் என்றால் அவரைப்பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும் அதில் சந்தேகமே இல்லை எனக் கூறுவார்கள். ஆம், அது உண்மைதான்...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

AIDS family mechai varavaidya planing safety thailand
இதையும் படியுங்கள்
Subscribe