Skip to main content

யார் மலாலா, நான்தான் மலாலா

malala

யார் மலாலா ? என்று அவர் கேட்டார்.

யாரும் எதுவும் சொல்லவில்லை. இருந்தும் அவர்கள் என்னை திரும்பி பார்த்தனர். ஏனென்றால் நான் ஒருவள் மட்டும்தான்  முகத்தை மூடாமல் இருந்தேன். 

அவ்வளவுதான் உடனே அவன் வைத்திருந்த கருப்பு பிஸ்டலை எடுத்துவிட்டான். பின்னர் அந்த துப்பாக்கியின் பெயர் "கோல்ட் 45" என்பதை தெரிந்துகொண்டேன். சில பெண்கள் கூச்சலிட்டனர். நான்  அவளின் கையை அழுத்தியததாக மோனிபா கூறினாள்.

அவன் என்னை மூன்று முறை, ஒன்றன்பின் ஒன்றாக சுட்டுத்தள்ளியதாக  என் நண்பர்கள் சொன்னார்கள். முதல் குண்டு என் இடக்கண் குழியின் வழியாக பாய்ந்தது, அடுத்த குண்டு என் இட தோள்பட்டையை தாக்கியது, என் இடது காதில் இருந்து இரத்தம் வலிந்து ஓடியது,  நான் மோனிபா மேல் சரிந்தேன். இதனால் மேலும் சுடப்பட்ட இரண்டு குண்டுகள் என் பின்னே இருந்தவர்களைத் தாக்கியது. 

பின்னர் என் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள், " தீவிரவாதி உன்னை ஒவ்வொரு முறை சுடும்போது அவனின் கை நடுங்கியது" என்று.

அதே நேரத்தில் நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டோம் என்னுடைய நீண்ட தலைமுடி மற்றும் மோனிபாவின் மடி முழுவதுமாக இரத்தம் கரையாக இருந்தது.

யார் மலாலா ? 

நான் தான் மலாலா. இதுதான் என் கதை.

இதில் சொல்லப்பட்ட நிகழ்வு என்பது ஒரு சாதாரண பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த உண்மை சம்பவம். மலாலா என்ற பள்ளி மாணவியை தலிபான் தீவிரவாதிகள் தாக்கினர். பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று தீவிரவாதிகள் சொன்னதை எதிர்த்து, நாங்கள் பள்ளிக்கு சென்று படிப்போம் என அவர்கள் போராடியதற்காக தீவிரவாதிகாளால் கொடுக்கப்பட்ட பரிசுதான் இந்த துப்பாக்கி சூடு. இந்த சம்பவத்திற்கு பின்னர் உலகமே மலாலாவை பற்றியும், "சுவாத்" என்னும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தை பற்றியும் தெரிந்துகொண்டனர். இங்கிலாந்து மருத்துவமனை மலாலாவுக்கு மருத்துவம் செய்தது, அங்கேயே அவருக்கு படிப்பும் அளிக்கப்பட்டது. பல நாடுகளில் சிறப்பு விருந்தினராக இவர் அழைக்கப்பட்டதும், பல விருதுகள் இவருக்கு கொடுக்கப்பட்டதும் இவரது தைரியத்திற்கு  கிடைத்த பரிசு. மிகச்சிறு வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதும், அதை வென்றவரும்  மலாலா தான். ஜஸ்டின் ட்ரூடோ, மலாலாவை கவுரவப்படுத்தும் வகையில் கவுரவ கனடா குடியுரிமை அளித்தார். உலகளவில் புகழ்பெற்ற இளைஞர்களில் மலாலாவுக்கு என்று ஒரு முக்கியமான இடம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. பெனாசிர் பூட்டோ எப்படி பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தாரோ, மாலாலாவும் அதே நம்பிக்கையை அளித்து நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.       

ஐநா இளைஞர்கள் கூட்டத்தில் பேசிய மலாலா, " ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா உலகையே மாற்றும் "  என்றார். இதை அந்த கூட்டத்தில் சொல்லும் போது அவருக்கு வயது 16 தான். இன்றும் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்துக்கொண்டும், தொண்டு நிறுவனத்தை பலரின் உதவியால் செயல்படுத்திக்கொண்டும் வருகிறார். மலாலா என்பவர் ஒரு சாதாரண மனிதர் மட்டுமல்ல, அவர் பல பெண்களின் உரிமைக்கான அடையாளம்!  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்