"மாநிலங்களவையை பொருத்தவரையில் எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம், ஆனால், மாநில அரசியலில் இனிமேல் தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்க இருக்கிறது" கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தில்லி மாநிலங்களவை உறுப்பினராக இருந்து சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற மைத்ரேயன் கூறிய வார்த்தைகள்தான் இது. அதுவும் இந்த செய்தியை மாநிலங்களவையில் தன்னுடைய கடைசி உரையில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மைத்ரேயன், தொடர்ந்து மூன்றுமுறை ஜெயலலிதாவால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டார். அந்த வகையில் அதிமுகவில் இதுஒரு பெரிய சாதனை என்று தான் கூற வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவா? பன்னீரா? என்ற நிலை ஏற்பட்டபோது அவர் ஓபிஎஸ் பக்கம் நின்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/600 dmk raja_0.jpg)
இந்நிலையில், கடைசியாக மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், நான் இறந்தால் கூட எனக்கு இரங்கல் தெரிவிக்காதீர்கள் என்று கூறி உறுப்பினர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதற்கு மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தவில்லை என்பதை இதற்கு காரணமாக கூறினார். மேலும் ஜெயலலிதாநினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், தனக்கு எம்.பி பதவி மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் நான் ஏமாற்றமடைந்தேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், தனக்கு மிகவும் பிடித்த நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர் என்றால் அது ஆ.ராசா தான் என்று தெரிவித்தார். புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் ஆற்றில் அவருக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Follow Us