Advertisment

இப்போ கோட்சேயின் ஆட்சிதானே நடக்கிறது…காந்தியை சுடும்போது அருகில் இருந்த நேரடி சாட்சி;மகாத்மா காந்தியின் உதவியாளர் கல்யாண் அதிரடி பேட்டி

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு ஜெயந்தி விழா இன்று தொடங்கியுள்ளது. காந்தியின் நினைவாக சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக,.

Advertisment

1922 ஆகஸ்ட்15 அன்று பிறந்த கல்யாண் தனது 21 வயதிலிருந்து 1942 முதல் 1948 வரை காந்தியடிகளுக்கு தனிபட்ட உதவியாளராக இருந்தவரும் காந்தியடிகளின் தனிப்பட்ட உதவியாளரும், காந்தி சுடப்பட்டபோது அருகிலிருந்தவருமான கல்யாணத்தை நக்கீரனுக்காக- சந்தித்து உரையாடினோம்.

Advertisment

ganthi

காந்தியுடனான பல்வேறு வரலாற்றுத் தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். இனி அவரது பேச்சிலிருந்து, 'காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்த அனைவரும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து விட வேண்டும் என்பது விதி. எழுந்தவுடன் பிரார்த்தனை நடைபெறும். அனைத்து மதங்களுக்கும் பொதுவான பிரார்த்தனையாக நடைபெற்றது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மௌனவிரதம் கடைப்பிடிப்பார். அந்த சமயம் யாருடனும் பேசமாட்டார்.

காந்தியைக் கொல்வதற்கு ஆறு முறை முயற்சிகள் நடைபெற்றன. 1931, 1936, 1942, 1944-ம் ஆண்டுகளில் காந்தியைக் கொல்ல நடைபெற்ற முயற்சிகளின் போது பிரிட்டீஷார் ஆட்சியிலிருந்தனர். அவர்கள் காப்பாற்றிக் கொடுத்த காந்தியை விடுதலை இந்தியாவில் வெறும் ஐந்தரை மாதங்களில் இழந்தோம். அப்போது நம்மால் கொடுக்க முடியாத நல்லாட்சியை, இன்று வரை கொடுக்க முடியவில்லை. அந்த வெள்ளைக்காரன் ஆட்சி மறுபடியும் வந்தால் இந்தியா நன்றாக இருக்கும்.

ganthi

நீங்கள் தவறு செய்தீர்களென்றால் உடனடியாக தண்டனை கிடைக்கும் எனும் நிலை வெள்ளையர் ஆட்சியில் இருந்தது. பிரிட்டீஷ் ஆட்சியின் போது லஞ்சம் ஊழலுக்கு ஒருபோதும் இடமில்லை. நம்மைக் கொள்ளைடித்தார்கள் என்பது வேறு. ஆனால் அலுவலகத்தில் வேலை செய்யும் கிம்பளம் வாங்கும் பழக்கமெல்லாம் அவனிடம் இல்லை. நேரு காலத்தில்தான் இந்தியாவில் ஊழல் நடைமுறை தொடங்கியது. வெள்ளையர் ஆட்சி நடைமுறை, நிர்வாகத் திறமை குறித்து காந்தியே பலமுறை பாராட்டியிருக்கிறார்.

காந்தியை சுத்தமாக மறந்துவிட்ட தேசத்தில் காந்திக்கான தேவை எப்படி இருக்கும்?

காந்தியை இப்போதும் மதிப்பவர்கள் வெள்ளையர்கள் மட்டுமே. தெய்வத்தைப் போன்று வணங்குகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளானாலும் இன்னொரு காந்தி நமக்கு கிடைக்கமாட்டார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவில் நடைபெற்ற முதல் இரண்டு தேர்தல்களில் காந்தியின் பெயரைச் சொல்லி வாக்குகள் வாங்கினார்கள். இப்போது அப்படியில்லையெனும்போதே காந்தியை மறந்துவிட்டார்கள் என்பதுதானே பொருள்.

இன்றைக்கு வெள்ளையர்கள் ஆட்சி செய்ய மீண்டும் இந்தியாவிற்கு வந்தால், அவர்களை உளப்பூர்வமாக வரவேற்பேன். காந்தி உயிரோடு இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார். பாடுபட்டு உருவாக்கிய தேசத்தை ஊழலிலும், ஏழ்மையிலும் விட்டுச் செல்லவா காந்தி விரும்பியிருப்பார்?

இந்திய தேசத்தின் விடுதலைக்குப் பிறகு ஒருவேளை நேதாஜி தலைமையில் ஆட்சி, அதிகாரம் அமைந்திருந்தால் தற்போதைய ஆட்சி அவலங்களைப் போல் இருந்திருக்காது. இந்தியா விடுதலை பெறும்போது நேதாஜி தலைமையில் சர்வாதிகார ஆட்சி முறை ஐந்து ஆண்டுகளுக்கு அமைந்திருந்தால் இந்த நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும். ஜெனரல் கரியப்பாவும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்' என்றார்.

ganthi

கோட்சே சுட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது ?

இந்தியாவே சுக்கு சுக்காய் உடைந்தது போல் இருந்தது.. நான்தான் முதலில் அவரை தாங்கி பிடித்தேன் அவர் இறக்கும்போது ஹேராம் என்றெல்லாம் சொல்லி விழவில்லை அது கற்பனை பின்னாளில் நீதிமன்றத்தில் நாதுராமை சந்தித்து கேட்டேன் ஏன் இப்படி சுட்டாய்? என்று அதற்கு அவன் கடவுள் சொன்னார் சுட்டேன் என்றான் நீதிமன்றத்திலும் இதே பதிலைதான் சொன்னான் ”காட் சே”{god say} பின்னாளில் அது மருவி கோட்சே என்றானது..

சுட்டதற்கான காரணம் தெரிகிறதா?

ஏன் தெரியாது காந்தி அனைத்து மதத்தினரையும் சாதியினரையும் அரவனைத்து போகவேண்டும் என்று எண்ணினார் ஒரே மதம் ஒரே மொழி எனஎண்ணுவபவர்கள்இனி இவர் வேண்டாம் இவர் வேலை முடிந்து விட்டது என எண்ணினர் அவர்கள் நினைத்தது நடந்து விட்டது.

தற்போதுள்ள ஆட்சியாளர்களை பற்றி ?

ஒன்றும் சொல்வதற்கில்லை இந்த நாட்டிற்கு கோட்சேக்களும் வேண்டாம் காந்தியின் பெயரை சொல்பவர்களும் வேண்டாம் இருவருமே நாட்டை சுரண்டி தாங்கள் மட்டும் கொழுத்துள்ளனர் ஏழைகள் 50% பேர் அப்படியேதான் இருக்கிறார்கள். சுதேசி கொள்கை தற்போது விதேசி கொள்கையாக மாறிவிட்டது ஏன் நாட்டையே அவர்களிடம் கொடுத்தால் இந்த லஞ்சம் ஊழல் இல்லாத மத பிரிவினை இல்லாத நாடாக வைத்திருப்பார்கள்…

தற்போது உங்களுக்கு 99 வயதாகிறது இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஏண்டா ஆண்டவன் எனக்கு ஆயுசை கூட்டி வைத்திருக்கிறான் என்று கவலை படுகிறேன்… தம்பி விடைபெருகிறேன் என்றார்..

நாமும் அவரின் கையை பற்றி கொண்டு ஒரு முத்தம் வைத்தோம் அவர் சிரித்தார் நாம் சொன்னோம் ”இந்த கை மகாத்மாவை பிடித்த கை தமிழர்களாகிய ”நாங்கள் மறக்கமாட்டோம் அதனால்தான் நீங்கள் சொன்ன இருவரையுமே நிராகரித்துவிட்டோம்… இந்த மண்ணிலும் காந்தி மறுபிறவி எடுத்திருக்கிறார் அது தந்தை பெரியார்.. அய்யா நீங்கள் கவலைபடாமல் விடைபெறுங்கள் தமிழகம் அதற்கு விடைசொல்லும் என்று விடைபெற்றோம்…

Mahatma Gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe