Advertisment

"நீங்கதான் லக்கி சார்ம்" - அருண் விஜய்யிடம் சொன்ன நாயகி!

மாஃபியா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் அருண் விஜய், படம் சம்பந்தமான சுவாரசியமான நிகழ்ச்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி பேசினார். விழாவில் அவர் பேசியதாவது, " இந்த படத்தின் இயக்குநர் கார்த்திக்கிடம் மிக பெரிய ஆற்றல் இருக்கிறது. அவரை நான் சகோதரராகத்தான் பார்க்கிறேன். அவர் மிக அதிகமான தூரங்களுக்கு செல்லவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கின்றது. லைக்கா போன்ற நிறுவனம் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் என்ற நம்பிக்கையில் தான் இந்த படத்தில் வேலை செய்ய இறங்கினேன். அது தற்போது நிறைவடைந்ததாகவே நினைக்கிறேன். சுபாஷ் சார் போன்றவர்கள் அதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் என்ன எடுக்கப்போறோம் என்ற ஒர்க் ஷீட் அனைவரிடமும் இருந்தது. சின்ன கிராபில் வேலை செய்யும் பையனிடம் கூட அந்த தெளிவு இருந்தது. அதனால் தான் எங்களால் முழு ஈடுபாட்டோடு படத்தில் நடிக்க முடிந்தது. இது அனைத்திற்கும் இந்த ஒத்துழைப்பே காரணமாக இருந்தது. பிரசன்னா உடன் வேலை பார்த்ததில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அவருக்கும் அதிகப்படியான காட்சிகள் இல்லை என்றாலும் அவருடன் வேலை செய்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் என்னை பற்றி பெரிய வார்த்தைகள் எல்லாம் கூறினார். மனதிற்கு நிறைவாக இருந்தது. நல்ல நடிகருடன் நடிக்கும் போது நம்முடைய பெஸ்ட்டை வெளிகொண்டு வர ஒரு வாய்ப்பு ஏற்படும். அது எனக்கு இந்த படத்தில் நடந்தது மகிழ்ச்சியாக இருக்கின்றது. பல புதிய விஷயங்களை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறேன். அதற்கு இதெல்லாம் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது.

Advertisment

gh

படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரைக்கும் படம் சுவாரசியமாக இருக்கும். கார்த்திக் அதை சுவாரசியமாக செய்துள்ளார். பிரியா பவானி சங்கர் இங்கே என்னை பற்றி கூறிய வார்த்தைகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் பெரிய இடத்துக்கு செல்ல இருக்கிறார்கள். நிறைய படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்கள். முதல் நாள் சூட்டிங் முடிந்த பிறகு ஷங்கர் சார் போன் செய்து இந்தியன் 2-வில் நடிக்க கூப்பிட்டதாக கூறி, நீங்கள்தான் அந்த லக்கி சார்ம் என்று கூறினார். எனக்கு அதில் எந்த கிரெடிட்டும் இல்லை. அடுத்ததா இன்னொரு படம் சைன் பண்ணியிருக்காங்க. அவங்க இங்கே அமைதியாக இருக்காங்க. செட்டில் பெரிய ரவுசு கொடுப்பாங்க. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளை இரவு நேரத்தில் தெருவிளக்கு வெளிச்சத்தில் படம் பிடிக்க வேண்டி இருந்ததால், அந்த நேரத்தில் கொஞ்சம் டென்சனா இருப்போம், கார் ஒன்றில் இருவரும் அமர்ந்துகொண்டு ஒரு காட்சி எடுக்கும் போது நான் கொஞ்சம் யோசித்துக்கொண்டு இருக்கும்போது அவர்கள் பாட்டு போட்டக்கொண்டு ஹாயாக அமர்ந்திருந்தார்கள். நான்தான் கொஞ்சம் அமைதியா இருங்களேன் என்று கூறி அமைதிபடுத்தினேன். படத்தில் நடித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கார்த்திக்கு மீண்டும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்" என்றார்.

arun vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe