Advertisment

"தமிழ்நாட்டில் முனியாண்டி விலாஸ் கடைக்கு உள்ள கிளைகள் கூட பாஜகவுக்கு இல்லை.." - திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!

இன்றைக்கு அதிமுக உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்றால் ஐயா மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இன்றைக்கு தமிழக பாஜகவின் பொறுப்பாளராக முரளிதர ராவ் என்பவர் இருக்கின்றார். அவர் நேற்று அபாரமான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் " பாகிஸ்தான் நாட்டை உருவாக்கிய முகமது அலி ஜின்னா-வின் ஆவி ஸ்டாலினின் உடம்புக்குள் புகுந்து முஸ்லிம் மக்களை தூண்டி விடுகிறது" என்ற புதிய கண்டுப்பிடிப்பை தற்போது கண்டுப்பிடித்துள்ளார். இந்த ஆவி, ஆன்மா பற்றி எல்லாம் யார் பேசுவார்கள் என்றால் அதிமுக-வை சேர்ந்தவர்கள் தான் பேசுவார்கள். தற்போது அதனை பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள். அந்த அதிமு கோஷ்டியோடு இந்த பாஜக கோஷ்டியும் சேர்ந்ததால் தற்போது இவர்கள் ஆவி கதை எல்லாம் சொல்கிறார்கள்.

Advertisment

hj

இப்போது நாங்கள் சொல்கிறோம், உங்களுடைய உள்துறை அமைச்சரின் உடம்பில் தற்போது யாருடைய ஆவி புகுந்திருக்கிறது என்றால், காந்தியை கொன்ற கோட்சேவின் ஆவி புகுந்திருக்கின்றது. இந்த நேரத்தில் குடியுரிமை சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன வந்தது. நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றது, வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கின்றது. விலைவாசி ஏறியிருக்கின்றது. விவசாயிகளுக்கு சரியான கூலி கிடைக்கவில்லை. அவர்களின் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வோம் என்று கூறிய மோடி, தற்போது பெரும் பணக்காரர்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்கின்றார். ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என்று கடனை வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் சொகுசு ஹோட்டல்களில் ஆட்டம் போடுபவர்களிடம் கடனை வசூல் செய்ய இவர்களுக்கு யோக்கிதை இல்லை. ஆனால் விவசாய கடன் வாங்கியவர்களின் வீடுகளுக்கு சென்று பொருட்களை ஜப்தி செய்கிறார்கள்.

நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையை தீர்க்க இவர்களுக்கு தெரிவில்லை. பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நதிகள் வறண்டு போவதை தடுக்க இவர்கள் எந்த திட்டத்தையும் கொண்டுவர தெரியவில்லை. அணைகள் கட்டுவதை பற்றிய எந்த திட்டமும் இல்லை. கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதை போக்க தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்றதிட்டம் அறவே இல்லை. இதையெல்லாம் விட்டுவிட்டு தற்போது எதற்காக இந்த குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். அவர்களின் நோக்கம் என்ன, இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும். அதில் கலவரம் ஏற்பட்டு சிலர் இறக்க வேண்டும். அவர்கள் மீதும், இயக்கங்கள் மீதும் பழி போட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.

Advertisment
Dindigul I. Leoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe