Advertisment

என்னை விட்டு தொலையுங்கள்;எடப்பாடி பழனிச்சாமி குமுறல்!! 

edapadi

Advertisment

அதிமுகவில் ஓபிஎஸ் அணி பிரச்சனையை தூண்டிய பிறகு அதை சமாளிக்க முடியாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திணறுகிறார். இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அணியின் நிர்வாகியான அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமயைஇன்று சந்தித்தார். அதில் தங்களது ஆதரவாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை அதன் வெளிப்பாடாக தற்போது நடைபெற்ற வடசென்னை மீனவர் சங்க தேர்தலில் ஜெயக்குமார் அமைச்சர் அறிவித்த நபர்களே பொறுப்பாளர்களாக போட்டுள்ளார்கள். இது நியாயமா என்று கேட்ட அவர், இபிஎஸ்-ஓபிஎஸ் அணி இணையும் பொழுது என்ன கோரிக்கை பேசப்பட்டது அது இதுவரையிலும் நிறைவேறவில்லை. கட்சியில் என்னை அவைத்தலைவராக அறிவித்தவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய நீங்கள் இல்லை அம்மாதான் அறிவித்தார். அதை தொடர்ந்து இப்பொழுதும் நான் அந்த பதவியில் இருக்கிறேன் எனக்கு என்ன மரியாதை. கட்சி நடவடிக்கையில் மற்றும்ஆட்சி அதிகார நடவடிக்கையில் முழுக்க முழுக்க நீங்களே செயல்படுகிறீர்கள். மரியாதைக்காக ஓபிஎஸ்சும் ஏற்றுக்கொள்கிறார். வருமான வழியை மட்டும் பார்க்கிறீர்கள் கட்சியை பார்க்கவில்லை ஆகவே கட்சி இனிமேல் உங்கள் வசம் இருக்க எனக்கு விருப்பம் இல்லை ஒருங்கிணைப்பு குழு என்னாச்சு எந்த நிர்வாகிகளும் இதுவரைபேசவில்லை. அம்மாவின் ஆசிபெற்ற ஓ.பன்னீர்செல்வதை புறக்கணித்து கட்சியையும், ஆட்சியையும் நடத்த சொல்லி உங்களுக்கு உத்தரவுவிட்டது யார். எங்களிடம் ஏற்கனவே 12 எம்.எல்.ஏக்களுடன் இப்பொழுது 33 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் பட்டியல் போடட்டுமா என காரசாரமாக மதுசூதனன் எடப்பாடியிடம் ஏகிறஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எல்லாத்தையும் ஒருவாரம் கழிச்சு பேசிக்கலாம் எனக்கூறி மதுசூதனனை அனுப்பிவிட்டார்.

இதன் பிறகு தனது சம்பந்தி முறையாகிற அமைச்சர் தங்கமணியை தொடர்பு கொண்டு பிரச்சனை ஓவரா இருக்குது என்ன செய்யலாம் எனக்கேட்ட போது அமைச்சர் தங்கமணி நீங்க ஊருக்கு வந்துருங்க அப்பறம் மெல்ல பேசிக்கலாம் என்றார். ஆனால் முதல்வர் எடப்பாடி என்னை விட்டு தொலையுங்கள் சமாளிக்கவே முடியவில்லை என்றார் அதற்கு அமைச்சர்தங்கமணி இங்க வந்துருங்க பேசிக்கலாம் என்றார்.இதனால் 28-ஆம் தேதி இரவு தனது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி 29-ஆம் தேதி காலை சேலம் வந்து அநேகமாக வருகிற 2-ஆம் தேதி வரை ஏறக்குறைய 5 நாட்கள் உட்கட்சி பிரச்சனையால் சேலத்தில் உள்ள தனது சொந்த கிராமமான எடப்பாடியில் முகாமிடுகிறார்.

admk ops_eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe