Skip to main content

காசு யாருக்கும் சும்மாதான் வருதா..? கேள்வி கேட்கும் 'லலிதா' ஜுவல்லரி...

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

lalitha jewellery new ad

 

"வீசும் காத்தும், சில்லுன்னு மழையும் சும்மாவே வருது, ஆனால் செலவழிக்க காசு சும்மா வருமா?" என்ற கேள்வியை முன்வைக்கும் வகையில் பாடல் வடிவிலான புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது 'லலிதா' ஜுவல்லரி. தொலைக்காட்சி விளம்பரங்களை தொடர்ந்து, இந்தப் பாடல் மூலம் அனிமேஷன் வடிவிலும் மக்களைக் கவர்ந்துள்ளார் 'லலிதா' ஜுவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார்.

 

ஆண்டாண்டுகாலமாக விளையாட்டுப் பிரபலங்கள், நடிகர்களைப் பயன்படுத்தி தங்களது நிறுவனத் தயாரிப்புகளை விளம்பரப்படுத்திவந்த வணிக நிறுவனங்களின் ஸ்டீரியோடைப், 90 -களின் மத்தியில் மெல்ல மாறத்தொடங்கியது. எம்.டி.எச் மசாலா, வசந்த் அண்ட் கோ உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், தாங்களே தொலைக்காட்சி திரையில் தோன்றி தங்களது நிறுவனத் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த துவங்கினர். 90 -களில் தொடங்கிய இந்த ட்ரெண்ட், அண்மைக் காலங்களில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்களும், பிரபலங்கள் மற்றும் மாடல்களை ஓரங்கட்டிவிட்டு தங்களது நிறுவனங்களுக்காக தாங்களே திரையில் தோன்றினர். இவ்வகை விளம்பரங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பிராண்ட்களில் மிக முக்கியமானது 'லலிதா' ஜுவல்லரி. 

 

தென்னிந்தியா முழுவதும் தங்க நகைகளுக்கான ஷோரூம்களை கொண்ட 'லலிதா' ஜுவல்லரியின் விளம்பரங்கள், மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு, திரையில் தோன்றும் அதன் உரிமையாளர் கிரண்குமார் மற்றும் மக்களை சிந்திக்கவைக்கும் வகையிலான கேள்விகளை எழுப்பும் விளம்பர வடிவமைப்பு ஆகியவை முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. பொதுவாகவே, ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் அதன் விளம்பரத்தில் தோன்றும்போது, அது ஒரு பிராண்ட் மீதான நம்பகத்தன்மையை உயர்த்துவது இயல்பு. அதேபோல சந்தையில் தாங்கள் சார்ந்த துறைமீதான பொதுவான சந்தேகங்களுக்கான விளக்கம் மற்றும் தயாரிப்புகள் குறித்து சிந்திக்கவைக்கும் வகையிலான விளம்பர வடிவமைப்பு மக்கள் மத்தியில் அதிகம் சென்றடையும். அந்தவகையில் தற்போதைய 'இந்த காசு யாருக்கும் சும்மாதான் வருதா..?' என்ற பாடலும் மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

 

 

 

 

Next Story

லலிதா ஜூவல்லரியில் நகைக் கொள்ளை..! -ராஜஸ்தான் விரைந்த தனிப்படை..!

Published on 26/01/2021 | Edited on 26/01/2021
ttttt


தமிழகத்தில் லலிதா ஜூவல்லரி நிறுவனம் பல்வேறு இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் நடந்த நகைக்கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது சென்னையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளைப்போன நகைகளை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படைப் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

 

சென்னை தி.நகரில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ 200 கிராம் நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நகைகளை ஸ்டாக் எடுக்கும்போது நகைகள் குறைந்திருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

 

அப்போது இந்தக் கடையில் கடந்த ஏழு வருடங்களாக ஸ்டாக் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் இந்த கொள்ளைச் சம்பத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நகைகளை ஒரு பையில் வைத்து மறைத்து வைத்து பின்னர் அதனை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது. விசாரணையில் அந்த நபர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என தெரியவந்ததையடுத்து, அவரை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த நபரை பிடிக்க ராஜஸ்தான் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

லலிதா ஜூவல்லரி சார்பில் கரோனா நிவாரண நிதி வழங்கிய கிரண்குமார்

Published on 18/05/2020 | Edited on 18/05/2020
lalitha jewellery kiran kumar



ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் லலிதா ஜூவல்லரியின் கிளைகள் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் லலிதா ஜூவல்லரிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். கரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்கமாறு இம்மாநில முதலமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.


இந்தநிலையில் லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து முதலதைமச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் காசோலையாக அளித்தார். இதேபோல் தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகரராவை நேரில் சந்தித்து முதலதைமச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் காசோலையாக அளித்துள்ளார். இதேபோல் தமிழகத்திற்கும் நிவாரண நிதி அளித்துள்ளார். தமிழக தலைமைச் செயலாளரை சந்தித்து முதலதைமச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் காசோலையாக அளித்துள்ளார்.