Skip to main content

பொற்பனைக்கோட்டையில் கொத்தளம் அமைப்பு; அரண்மனையிலும் கோட்டையிலும் ஒரே மாதிரியான செங்கல்!

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Kothalam structure at Porpanaikottai

 

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக் கோட்டைகளில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. வட்டக் கோட்டை எப்படி சிறப்பு மிக்கதாக உள்ளதே அதே போல கோட்டையின் நுழைவாயில்களில் உள்ள பொற்பனைமுனீஸ்வரன் உள்ளிட்ட காவல் தெய்வங்களின் வழிபாடுகளும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பெற்றது.

 

பொற்பனைக்கோட்டையில் இன்றும் அழிவில்லாத சங்ககால கோட்டையின் நடுவில் உள்ள அரண்மனைத்திடலில் தமிழ்நாடு அரசு அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை தலைமையில் ஆய்வு மாணவர்கள் முன்னிலையில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அகழாய்வில் கருப்பு, சிவப்பு, பானை ஓடுகள், வட்டசில்கள், தங்க மூக்குத்தி, விளையாட்டு பொருட்கள், பாசி மணிகள் என ஏராளமான பொருட்கள் கிடைக்கப்பெற்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

 

Kothalam structure at Porpanaikottai

 

அரண்மனைத் திடலில் சுடு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டு வட்ட வடிவ கட்டுமானம், தண்ணீர் வெளியேறும் கட்டுமானமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழாய்வுப் பணியின் தொடர்ச்சியாக பிரமாண்டமாக இன்னும் உறுதியாக நிற்கும் கோட்டைச் சுவர், கொத்தளம் பகுதியில் கோட்டை சுற்றுச் சுவர் கட்டுமானம் பற்றி அறிய அகழாய்வு தொடங்கி நடந்து வருகிறது.

 

கோட்டைச் சுவர் தொடங்கும் சுமார் 60 அடி சாய்வில் இருந்து 5 மீட்டர் நீளம் அகலத்தில் தேவைக்கேற்ற உயரத்தில் படிக்கட்டு வடிவில் அகழாய்வு செய்யத் தொடங்கி நடந்து வருகிறது. கோட்டை சுவரின் அடியில் இருந்து முழுமையாக எளிதில் கரையாத கடினமான மண் கொண்டு உயரமாக அமைக்கப்பட்டு சுவரின் மேலே நடுவில் ஒரு மீட்டர் உயரம், அகலத்தில் சுடுசெங்கல் வைத்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல பாதுகாப்பு வீரர்கள் நிற்க செங்கல் கட்டுமானத்தில் 'ப' வடிவத்தில் கொத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. 

 

கோட்டை சுவருக்கு அருகிலேயே அகழி வெட்டி அதிலிருந்து மண் எடுத்து நிரப்பியுள்ளனர் என்பது அகழியையும் கோட்டை சுவரில் உள்ள எளிதில் கரையாத கல் கலந்த கடினமான மண்ணைப் பார்க்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் கோட்டை சுவரின் மேல் நடைபாதை, கொத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களும் அரண்மனைத் திடலில் உள்ள கட்டுமான செங்கற்களும் ஒரே மாதிரியாக உள்ளதால் கோட்டையும், அரண்மனையும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Kothalam structure at Porpanaikottai

 

இன்னும் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் இறுதிக்கட்ட ஆய்வறிக்கையிலேயே கோட்டை, அரண்மனைத்திடல் கட்டுமானம் ஆகியவை  எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது உறுதியாகத் தெரிய வரும். இந்த கோட்டைச் சுவரின் கட்டுமானத்தைப் பார்க்கும் போது இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உறுதியாக நிலைத்து நிலைத்து நின்று தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

 vengaivayal incident CBCID summons 10 people

 

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 10 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்வதற்காக வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 10 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதே சமயம் வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைகளையும் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மாணவிகளுக்கு பிரியாணி விருந்து; அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்   

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Govt school teachers have a biryani party for the students

 

கீரமங்கலம் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழாவை கொண்டாடும் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாரிமுத்து, வள்ளிநாயகி ஆகியோர் தலைமையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் முன்னிலையில் மாணவிகளின் நடனம், பாடல், ஆசிரியையின் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 

 

தொடர்ந்து மகளிர் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியைகள்  மாணவிகளுக்கு வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தனர். ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றோம். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்லி பரிசுகள் வழங்குவதும் வழக்கமாக உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள், இலக்கியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதும் உள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களை இனிப்பு, பூ கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளது. 

 

Govt school teachers have a biryani party for the students

 

ஆனால், புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு சிறப்பு தினங்களையும் சிறப்பாக கொண்டாடும் பள்ளி நிர்வாகம், குழந்தைகள் தினத்தையும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டனர். குழந்தைகள் தினத்தில் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 900  மாணவிகளுக்கும் வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுக்க திட்டமிட்ட ஆசிரியர்கள் சுமார் ரூ. 30 ஆயிரம் செலவு செய்து சைவ பிரியாணி தயாரித்து மதியம் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில், ஆசிரியர்கள், ஆசிரியைகள் அனைத்து மாணவிகளையும் பள்ளி வளாகத்தில் அமர வைத்து ஒரே நேரத்தில் வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தனர்.                  


இது குறித்து மாணவிகள் கூறும் போது, “நாங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்துவிட்டால் எங்கள் ஆசிரியர்கள்  எங்களை பெற்றோர்களைப் போல  கவனித்துக் கொள்வார்கள். இன்று எங்கள் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளாக  நினைத்து எங்களை வரவேற்று மதியம் சொந்த செலவில் வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இந்த பள்ளிக்கு சிறந்த பெயரை வாங்கிக் கொடுப்போம்” என்றனர். இதே போல கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிக்கன் குழம்பு முட்டையுடன் அசைவ உணவு வழங்கி மாணவர்களை மகிழ்வித்தனர். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்