Skip to main content

கொரியா தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்கு நக்கீரன் கோபால் – வைகோ வாழ்த்து!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

நக்கீரன் கோபால்

 

nakkheeran gopal



ஒன்றுபட்டு கொரிய தமிழ்ச்சங்கத்தை நிறுவியது தனிப்பெரும் சிறப்பாகும்.  தமிழ்நாட்டில் தமிழை பாதுகாக்க மிகவும் சிரமப்படும் அதேவேளையில் அயல்நாடுகளில் தமிழ் சங்கங்கள் நெருங்கி வருவது மிகவும் போற்றுதலுக்கு உரியதாகும். நமது தமிழ் மொழியை ஒரு சிலர் ஒடுக்க நினைத்தாலும் கீழடி போன்ற இடங்களில் கிடைக்கபெற்ற சான்றுகளின் மூலம் தமிழ் உலகின் மூத்த மொழி என்பதை நிரூபித்து வருகிறது.

 

 

இதுபோன்று தமிழ் மொழியை மென்மேலும் உலகறியச் செய்ய அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் நம் மொழியை தாங்கிச் செல்வது எங்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. குறிப்பாக கொரிய தமிழ்ச்சங்கம் இது போன்றதொரு நிகழ்வினை கொண்டாடும் விதம் மிகவும் சிறப்புமிக்கது. நம் இனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் குறிப்பாக தமிழர்கள் அந்நாட்டில் வாழும் கொரிய மக்களின் பங்களிப்பும் இருக்கிறது என்று எண்ணும் போது உங்களை நினைத்து தமிழகமே தலைவணங்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நக்கீரன் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்  கொள்கிறேன். 


வைகோ 

 

vaiko



மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் சார்பில் பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தென்கொரியா நாட்டில் வாழ்கிற தமிழர்களும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்று குறிப்பிட்டிருக்கிறார். 


ஒரிசா பாலு 

 

orisa balu



1987 முதல் எனக்கும் கொரியாவிற்குமான உறவு தொடர்கிறது. 1905-ம் ஆண்டிலேயே கொரிய மொழி அறிஞர் கெல்மர் கோபர்ட் கொரிய-தமிழ் மொழி தொடர்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதன்பின் 1980-களில் கிளிப்பிங்கர் என்பவர் கொரிய-தமிழ் மொழியிலுள்ள ஒத்த சொற்களை குறித்து புத்தகம் வெளியிட்டார். கொரிய மக்களின் இசை, வழிபாடு, விழாக்கள் மற்றும் உணவு ஆகிய அனைத்திலும் தமிழர் தொடர்பு இருக்கிறது. குடுமி, குமாரி ஆசான் குமி போன்ற பல தமிழ் பெயர்கள் கொண்ட ஊர்களும் அங்கு இருக்கிறது. சிறப்பாக பணியாற்றும் கொரிய தமிழ்ச் சங்க தலைவர் இரமசுந்தரமும் உடனிருந்து உதவி செய்யும் ஆரோக்கியராஜும் அனைத்து உறுப்பினர்களும் கொரிய-தமிழ் உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். 


ஆதனூர் சோழன்

 

athanur

 

கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். கொரிய தமிழ்ச் சங்க நிகழ்வுகள் தொடர்பாக நக்கீரன் இதழில் பல முறை செய்திகள் வெளியிட்டுள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளாக கொரிய தமிழ்ச் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நண்பர்களின் வாயிலாக அறியப் பெற்றேன். இந்த மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் கொரிய தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தலைவர் முனைவர். இராமசுந்தரம், துணைத் தலைவர் கேத்தரின் கிருஸ்டி, செயலாளர் முனைவர். இராமன், துணைச் செயலாளர் முனைவர். ஆரோக்கியராஜ் போன்றவர்கள் மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். நான் கடந்த ஆண்டு கொரியாவின் கதை என்று ஒரு தொடரை நக்கீரன் இணையதளத்தில் எழுதி இருந்தேன். இந்தத் தொடர்தான் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும் எனக்கும் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆகவே தமிழ்தான் என்னை உங்களோடு இணைத்து இருக்கிறது என்பதில் பெருமை அடைகிறேன். உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழர் கோட்பாடுகளை பின்பற்றி உலக மக்களோடு இணைந்து வாழ்வது போற்றுதலுக்கு உரியது. 

 



சமீபத்தில் தமிழக அரசு கொரிய அரசோடு இணைந்து கொரிய மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த புத்தகத்தில் உள்ள விளக்க உரையை கொரிய மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிடப்படுவது மட்டுமல்லாமல் தமிழ்-ஆங்கிலம்-கொரியன் மொழியில் திருக்குறள் ஆண்ட்ராய்டு செயலியையும் வெளியிட இருப்பது வரலாற்று சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்ட்ராய்டு செயலியை பொறியாளர். ஜனகராஜ் போன்றவர்கள் மிகச் சிறப்பாக உருவாக்கி இருப்பதாக நண்பர் இராமசுந்தரம் தெரிவித்தார். விரைவில் இந்த ஆண்ட்ராய்டு செயலியை வெளியிட படுவதாகவும் இந்த முயற்சியை அலுவலகரீதியாக முன்னெடுக்க தென்கொரிய உள்ள இந்திய தூதரகம் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோன்றதொரு நடவடிக்கைகளில் கொரியா தமிழ்ச்சங்கம் ஈடுபடும்போது அந்த சங்கத்தின் மீதான மதிப்பு மென்மேலும் உயர்வது மட்டுமல்லாமல் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்கு இரண்டு நாடுகளின் அரசுகளும் ஊக்கமளிக்கும் என்பது உறுதி.


ஜேம்ஸ் வசந்தன்

 

james vasanthan

 



இன்றைய தலைமுறைகள் பன்மொழி கற்பித்தலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தாலும் இளைஞர்களும் மாணவர்களும் தமிழ் கற்பித்தல தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது மிகப் பெரிய கடமையாகும்.  மெரினா புரட்சி இளைஞர்களால் தமிழ்மொழி என்றென்றும் வளர்ந்து கொண்டே செல்லும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. பல்வேறு நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பித்து நம்முடைய தாய் மொழியை கற்பிக்கப்பட்டு கல்லூரி அளவிலும் சிறப்பாக செயல்பட்டு வருவது போல் உங்கள் அனைவரின் முயற்சியில் தென்கொரியாவில் இது போன்றதொரு கல்வி நிறுவனங்கள் தமிழுக்காக அமையப் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இந்த நிகழ்வுகள் உடனே நடப்பது சாத்தியமில்லை என்றாலும் வரும் காலங்களில் நாம் அனைவரும் இந்த இலக்கை நோக்கி நகர வேண்டும். இதன் அடித்தளமாக கொரிய தமிழ் சங்கம் நிறுவப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. 


நர்த்தகி நடராஜ் 

 

narthagi



தாய்நாட்டை விட்டு வெளியில் இருக்கும் அணைத்து தமிழர்களுக்கும் தமிழிசை நாட்டியக்கலைஞரான நர்த்தகி நடராஜின் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள். வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் பண்பாடு மறவாமல் நமது அடையாள திருநாளை நீங்கள் அனைவரும் முன்னெடுப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதற்காக ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் அவர்களையும் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். சனவரி 26 அன்று நடைபெற இருக்கும் கொரிய பொங்கல் விழாவில் என்னால் நேரடியாக கலந்துகொள்ள முடியாவிட்டாலும் என்னுடைய மனம் உங்களோடு இணைத்திருக்கும். தற்பொழுது கீழடி அகழாய்வு தமிழர் அனைவருக்கும் புதிய உயிர்ப்பை கொடுத்திருக்கிறது.. 


பத்மஸ்ரீ வாசுதேவன் 

 

vasuthavan

 



மனிதன் மனிதனுக்கே கொடுத்ததுதான் திருக்குறள். அத்தகைய குறளை நமது வாழ்க்கையில் வழித்துணையாக கொள்ள வேண்டும். கொரிய தமிழ்ச் சங்கம் திருக்குறளின் ஒவ்வொரு பகுதியை மக்கள் அறியும் வகையில் கொண்டு செல்ல வேண்டும். நாம் ஒவ்வொருநாளும் எழுந்தவுடன் ஒரு திருக்குறளை சொல்லி அதன்படி வாழ்ந்தாலே நாம் வாழ்வில் முன்னேறலாம். நாம் முன்னேறினால் இந்த நாடு முன்னேறும். நாடு முன்னேறினால் உலகம் முன்னேறும். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் வாழ்க்கை அழகானது அதனை வெற்றிகரமானதாக்கு என்பார்கள். அதற்கான வழிகாட்டிதான் திருக்குறள்.  
 
 
 

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர்.