Advertisment

செங்கொடியின் கீழ் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி!

ஒற்றுமை வெற்றி தரும் என்பதை விவசாயிகள் நிரூபித்திருக்கிறார்கள். விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டிருப்பதாக மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்தார். விவசாயிகள் தங்களுடைய ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Advertisment

ஆறு நாட்கள்… 180 கிலோ மீட்டர்… நாசிக்கில் சிறு ஊற்றாக தொடங்கியது அந்த செங்கொடி பேரணி.

Advertisment

Kisan

பின்னர் அது ஒரு கங்கையைப் போல பெருக்கெடுக்கத் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கமான ஏஐகேஎஸ் சார்பில் மகாராஸ்டிரா விவசாயிகளைத் திரட்டி ஏற்பாடு செய்யப்பட்டது அந்தப் பேரணி.

மும்பையை நோக்கி நடைபயணமாக புறப்பட்ட அந்தப் பேரணி சிறுகச்சிறுக மாபெரும் சிவப்பு நதியாக பெருக்கெடுத்தது. அவ்வளவு பெரிய ஜனத்திரள் போக்குவரத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் நகர்ந்தது. மும்பை போன்ற மாநகரத்துக்குள் அவ்வளவு பெரிய பேரணி நுழைந்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்?

ஆனால், நகர மக்களே சாலையின் இருபுறமும் திரண்டு தங்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து வரவேற்றனர்.

60 ஆயிரம் விவசாயிகளுக்கு தலைமையேற்று வழிநடத்திய விவசாயிகள் சங்க தேசிய செயலாளர் அசோக் அதுவாலே கூறுகிறார் கேளுங்கள்…

“பகல் நேரத்திலேயே மும்பைக்குள் நுழைய திட்டமிட்டிருந்தோம். ஆனால், அது, மும்பை நகர மக்களுக்கும், பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நள்ளிரவு நேரத்தில் நுழைய முடிவெடுத்தோம்.”

ஊர்வலத்தை வரவேற்ற பொதுமக்களில் ஒரு பெண்மணி இப்படி கூறினார்…

“விவசாயிகளை இப்படி தெருவில் இறங்கும்படி செய்தது மிகப்பெரிய அவமானம். நமது விவசாயிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறுவோம். சமீபத்திய தேசியவாதம் என்பது, ராணுவவீரர்களை பெருமைப்படுத்தாவிட்டால் ஆன்ட்டி இண்டியன்ஸ் என்கிறது. ஆனால் நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளை பாதுகாக்கத் தவறியவர்களையும் ஆன்ட்டி இண்டியன்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.”

ருசிதா மித்ரா என்ற 26 வயது என்ஜினியர் பெண்மணி கூறியது உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது…

“காய்ச்சி எடுக்கும் வெயிலில் இவ்வளவு பேர் இப்படி நடந்து வந்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் நிஜத்திலேயே எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்திருக்க வேண்டும்? விவசாயிகள் மகிழ்ச்சியாக வைத்திருக்காத நாடு முன்னேறவே முடியாது.”

Kisan

பேரணி மும்பைக்குள் நுழைந்தவுடனேயே, சிவசேனா, காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகளை சந்தித்து தங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தனர்.

சிவசேனா தலைவர்களில் ஒருவரான ஆதித்யா தாக்கரே கூறியது…

“நமது வண்ணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், உங்கள் இயக்கத்தை சிவசேனா முழுமையாக ஆதரிக்கிறது. நமது கோரிக்கைகள் கடன் சலுகை நமக்கு தேவையில்ல. பெரு முதாலாளி கிரிமினல்களுக்குத்தான் அது தேவை. நாம் வேண்டுவது முழுமையான கடன் ரத்து. சிவசேனா மற்ற கட்சிகளைப் போல பேச்சோடு நிற்காது. உங்கள் தோளோடு தோள் இணைந்து போராடும்” என்றார்.

திரிபுரா தோல்விக்குப் பிறகு, போராட்டக் காலம் முடிந்துவிட்டது. இனி வளர்ச்சியின் காலம் என்று பிரதமர் மோடி மார்தட்டினார். கம்யூனிஸத்திற்கு இந்தியாவில் என்ன வேலை என்று கேட்டார்கள். ஆனால், மும்மை நகரமே சிவப்பாகி இருக்கிறார்கள் விவசாயிகள்.

இப்போதும்கூட இந்த பேரணியின் உணர்வை கொச்சைப்படுத்தும் வேலையில் மகாராஸ்டிரா முதல்வர் பட்னாவிஸும் பாஜக ஆட்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

“பேரணியில் 70 சதவீதம் பேர் பழங்குடியினர்தான். விவசாயிகள் மிகவும் குறைவு” என்கிறார் முதல்வர் பட்னாவிஸ்.

“பேரணியில் மாவோயிஸ்ட்டுகள் பெரும்பான்மையாக கலந்துகொண்டிருக்கிறார்கள்” என்கிறார் அந்தக் கட்சியின் எம்.பி.

ஆனால், மாநில பாசனத்துறை அமைச்சர் விவசாயிகளைச் சந்தித்து 5 பேர் மட்டும் முதல்வரைச் சந்திக்கலாம் என்று அழைப்பு விடுத்தார்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் சார்பில் 12 பேர் பிரதிநிதிகளாக முதல்வரைச் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. விவசாயிகள் அனைவரும் சட்டமன்றத்தை முற்றுகையிடும் முடிவு தள்ளிவைக்கப்பட்டது.

2014 ஏப்ரலில் இருந்து 2017 செப்டம்பர் வரை பாஜக அரசு பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த கடன் 2 லடசத்து 40 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதில் பாஜக அரசு பல்வேறு சாக்குப் போக்குகளையும், ரிசர்வ் வங்கியையும் காரணம் காட்டுகிறது.

பாஜகவின் விவசாயிகள் விரோதப் போக்கைக் கண்டித்தே இந்த மாபெரும் செங்கொடி பேரணி மும்பையில் முகாமிட்டிருக்கிறது.

மும்பை நகர மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சகோதர அமைப்பினரும் விவசாயிகள் தங்கியுள்ள மைதானத்தில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை செய்துகொடுக்கிறார்கள்.

மும்பையில் புகழ்பெற்ற உணவு பரிமாற்றக் குழுவினரான டப்பாவாலாக்களும் விவசாயிகளுக்கு உணவளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு ஓரிரு நாட்கள் மக்களிடம் உணவைச் சேகரித்து வழங்குவதே எங்களுக்கு பெருமை சேர்க்கும் என்று டப்பாவாலா சங்கத்தின் தலைவர் கூறியிருக்கிறார்.

ஆகமொத்தத்தில் மும்பை நகரமக்கள் அனைவருமே விவசாயிகளின் பெருமையை உணர்ந்திருக்கிறார்கள். விவசாயிகளோ நகர மக்களின் வாழ்க்கையை பாதிக்காத அளவுக்கு பொறுப்பாக நடந்துகொள்கிறார்கள்.

Kisan

ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய மாநில அரசு, அவர்களை உதாஷீனப்படுத்துவதிலேய குறியாக இருந்தது.

விவசாயிகளோ, இந்தமுறை தங்களுடைய கோரிக்கைக்கு முடிவு காணாமல் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

Farmers Maharashtra Kisan long march
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe