Advertisment

பெண்களின் ‘இரவு நடை!’-நிர்பயா நினைவுநாளில் கேரளாவில் அதிரடி! 

k

இரவில் நேரங்களில் பெண்கள் வெளியே சென்று விட்டு திரும்புவது பெரும் சவாலாக இருக்கிறது. இரவு நேரங்களில் வெளியே சென்றுவிட்டு திரும்பிய நிர்பயா, ஹைதராபாத் பெண் மருத்துவரின் படுகொலைகள் இந்தியாவையே உலுக்கியெத்தது.

Advertisment

இரவில் பெண்கள் வெளியே சென்றுவிட்டு திரும்புவது கேள்விக்குறியான நிலையில், கேரள அரசு ’இரவு நடை’ என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. நிர்பயா 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இரவு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

k

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்த இரவு நடையில் பெண்கள் பங்கேற்றனர். குழந்தைகளும் இந்த ‘இரவுநடை’யில் பங்கேற்றனர். கேரளாவில் 22 இடங்களில் இந்த நடை புரட்சி நடந்தாலும், திருவனந்தபுரத்தில் அதிக அளவில் பெண்கள் பங்கேற்றனர்.

k

இது குறித்து அமைச்சர் கே.கே.சைலஜா, ‘’பெண்கள் அச்சமின்றி இரவில் நடமாடும் நிலை வரவேண்டும். அதற்காகத்தான் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளோம். ’இரவுநடை’யில் பங்கேற்கும் பெண்களை போலீசாரும், தன்னார்வ அமைப்பினரும் தூரத்தில் இருந்து கவனிப்பார்கள். பெண்களுக்கு தொந்தரவு தரும் ஆண்களை பிடித்து உடனுக்குடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வாரமும் இந்த இரவு நடை மாநிலம் முழுவதிலும் நடைபெறும். இதன் மூலமாக பெண்களுக்கு இரவு பொது இடங்களூக்கு செல்லலாம் என்ற நம்பிக்கை வளரும்’’என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
night walk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe