Skip to main content

கீழடியை கீலடியாக மாற்றிய தமிழக அரசு! கீழடி மக்கள் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே கல்வி பெற்றிருந்தனர்!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

கீழடி நாகரிகம் கி.மு.ஆறாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது என்று தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து சங்க காலம் குறித்த மதிப்பீடுகளிலும் மாற்றம் வரலாம் என்று கருதப்படுகிறது.
 

keeladi

 

 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் ஏராளமான தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்தத் தடைகளை எதிர்த்த போராட்டங்கள் காரணமாக இப்போதும் இரண்டாவது கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

முதல்கட்ட ஆய்வுகளில் கிடைத்த பொருட்களின் வயது தொடர்பான விவரங்கள் மேலோட்டமாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக நவீன கார்பன் டேட்டிங் முறையில் காலம் அறியப்பட்டுள்ளது. அதன்படி கி.மு. 1 முதல் கி.மு.6 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த நாகரிகம் என்று தெரியவந்துள்ளது.

இதுவரை கீழடி நாகரிகம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்பட்டு வந்தது. இப்போது கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்குச் சொந்தமானது என்று உறுதியாக தெரியவந்துள்ளது. கீழடியில் 353 செண்டி மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட ஆறு மாதிரிப் பொருட்கள் கார்பன் டேட்டிங்கிற்காக அனுப்பப்பட்டதாகவும், அமெரிக்காவில் நடைபெற்ற அந்த ஆய்வில் அந்தப் பொருட்கள் கி.மு.580 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று அறியப்பட்டதாகவும் தொல்லியல்துறை ஆணையர் டி.உதயச்சந்திரன் தெரிவித்தார்.

“கீழடி – வைகை ஆற்றங்கரையில் உருவான சங்க கால நகரமைப்பு” என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கங்கை சமெவெளியில் உருவான நாகரிக காலத்தில் வைகைக் கரையிலும் இந்த நாகரிகம் உருவாகி இருக்கிறது.

இதுவரை இந்த அகழ்வாய்வை கீழடி என்று உச்சரித்து வந்த நிலையில் தமிழக அரசு அறிக்கை கீலடி என்று உச்சரித்துள்ளது ஏன் என்று தெரியவில்லை.

கீழடியில் வாழ்ந்த மக்கள் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே எழுதப்படிக்க தெரிந்திருந்தார்கள் என்பதையும் இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அதாவது தமிழ் பிரமி எழுத்துகள் இதுவரை கருதப்பட்ட காலத்தைக் காட்டிலும் பழமையானது என்று தெரியவந்துள்ளது.

அதைவிட, கீழடி நாகரிக மக்கள் விவசாய வேலைகளுக்கு விலங்குகளை பழக்கியிருந்தார்கள் என்பதையும் இந்த அறிக்கை உறுதி செய்துள்ளது.

 

 

Next Story

கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்வையிட்ட சூர்யா

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

suriya and his family members visit Keezhadi museum

 

சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் கடந்த மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 

நாள்தோறும் ஏராளமான மக்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் அருங்காட்சியகத்துக்கு வருகை தந்து கண்டுகளிக்கின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் கீழடி அருங்காட்சியகத்துக்கு வருகை தந்து அங்குள்ள பொருட்களை கண்டு ரசித்தனர். அவர்களுக்கு அங்குள்ள அதிகாரிகள் பொருட்கள் பற்றி எடுத்துரைத்தனர். அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.  

 

சூர்யா தற்போது சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 


 

Next Story

“திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் அதற்காக இப்படியா?” - முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

MM

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “2015ல் மத்திய அரசு கீழடி விஷயத்தில் இதற்கு மேல் தோண்டுவதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னதற்கு பிறகு ஜெயலலிதா மாநில அரசாங்கத்தால் அது செய்யப்படும் என்று சொல்லி மூன்றாவது கட்டம், நான்காவது கட்டம், ஐந்தாவது கட்டம் அகழாய்வுகளை நிறைவு செய்தார். உலகத்தமிழ் மாநாடு சிகாகோவில் நடந்த பொழுது அந்த மாநாட்டிற்கு தீமே 'கீழடி என் தாய்மடி' என்று வைத்து அதன் பிறகு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முன்னெடுப்பில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியகம் அந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் நிதி கேட்டார்.

 

மத்திய அரசு தரவில்லை. இத்தனை நிதிச் சுமையிலும் 12.5 கோடி ரூபாய் ஒதுக்கி அந்த இடத்தில் கட்டடத்திற்கு டிசைன் அப்ரூ கொடுத்து, காண்ட்ராக்டர் போட்டு 90 விழுக்காடு வேலைகள் நடந்தது. அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஒரு வேலைகூட செய்யவில்லை. இப்பொழுது இந்த ஒரு வருடத்தில் கிடுகிடுவென்று வேலையை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியின் பெயரை தாங்கிய, ஜெயலலிதாவின் பெயரை தாங்கிய அடிக்கல்களை எடுத்துவிட்டு ஏதோ எல்லாத்தையுமே திமுகதான் செய்தது போல் காட்டிக் கொள்கிறார்கள். திமுக ஸ்டிக்கர் ஒட்டுவது தப்பில்லை. ஆனால் இருக்கிற அடிக்கல் ஆவணங்களை எடுக்கக் கூடாது. அந்த இடத்தில் மீண்டும் அவர்களுடைய அடிக்கல் நாட்டிய ஆவணம் இருக்க வேண்டும்.” என்றார்.