Advertisment

'வீடியோ விவகாரம்' கே.டி. ராகவனுக்கு பாஜகவில் இனி எதிர்காலம் இல்லை - ராமசுப்பிரமணியன் பேட்டி!

ுபர

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் தொடர்பாக வெளியான வீடியோ ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. தமிழ்நாடுபாஜக முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த கே.டி. ராகவன் தொடர்பாக வெளியான அந்த வீடியோ, பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் தமிழ்நாடு பாஜக கடும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. புகாருக்குள்ளான ராகவன் தற்போது தன்னுடைய கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவில் ஏற்கனவே இருந்த பேராசிரியர் ராமசுப்பரமணியம் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

Advertisment

தமிழ்நாடு பாஜகவில் மிக முக்கிய பொறுப்பில் இருந்தவர் கே.டி. ராகவன். தற்போது அவர் தொடர்பாக ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பொதுமக்களைத் தாண்டி அவர் சார்ந்த கட்சியினரிடையேயும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தமிழ்நாட்டில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

Advertisment

எனக்கு கே.டி. ராகவனை சிறுவயதில் இருந்தே தெரியும். என்னிடம் நன்றாக பேச்கூடியவர். அவரின் வளர்ச்சியை நான் நேரடியாக பார்த்துவந்தவன். என்னை அவர் எப்போதும் உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டிருப்பவர். என்னிடம் பலமுறை வாழ்த்து பெற்று சென்றுள்ளார். அவர் ஒரு டீசெண்டான ஜென்டில்மேன். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. ஆனால் இன்றைக்கு அவரைப் பற்றி வேறு ஒரு நபர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதன் உண்மைத் தன்மை பற்றி நமக்குத் தெரியாது. இருந்தாலும் இது பாஜகவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதையும் தாண்டி மக்களுக்குப் பெரிய கேள்விகளை உண்டாக்கியுள்ளது. இந்த வீடியோ வெளியான பிறகு இதுபற்றி பேச பல்வேறு தரப்பினரும் என்னிடம் அணுகினார்கள். ஆனால் நான் யாரிடமும் இதைப் பற்றி பேச விரும்பவில்லை. எனக்கே இந்த சம்பவம் ஷாக்காக இருந்தது. முதல்முறையாக உங்களிடம்தான் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கிறேன். இந்த செய்தி எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். குறிப்பாக அரசியலிலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் அரசியலில் தேவையில்லாத பல்வேறு அழுத்தங்களை சந்திக்கிறார்கள். தற்போது சிலர் பேசும்போது, இந்த மாதிரியான சம்பவங்கள் காரணமாகத்தான் பெண்கள் அரசியலில் முன்னேற முடியவில்லை என்று கூறுகிறார்கள். குறிப்பாக பாஜகவில் இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகம் இருக்கிறது என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பாஜக ஆரம்பிக்கப்பட்டபோது நிறைய பெண்கள் அதில் பணியாற்றி இருக்கிறார்கள். எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் விருப்பப்பட்டு கட்சியில் இருந்தார்கள். தீவிரமாக பணியாற்றினார்கள். என்னுடைய சகோதரி கூட ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் தீவிரமாக இருந்துள்ளார்கள். அவர்கள் எந்தப் பதவியோ பொறுப்போ எதிர்பார்த்ததில்லை. நிறைய பெண்கள் கையெடுத்து கும்மிடும் வகையில் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக்கொண்டு இருந்துள்ளார்கள். அதேபோன்று, அவர்களுக்கு உரிய மரியாதை எப்போதும் பாஜகவில் இருக்கும். ஆகையால் பாஜகவுக்குப் பெண்கள் வருவது ஆபத்து என்பதுபோன்று சித்தரிப்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகத்தான் பார்க்கிறேன்.

ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் இதே மாதிரியாக பெண் நிர்வாகிகளுக்குத் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அது உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இதே மாதிரியான தொடர்ச்சியான புகார்கள் கட்சியை வலுவிழக்கத்தானே செய்யும்?

இந்த விவகாரத்தில் புகார் கொடுத்த பெண்ணையே கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்கள். அப்போது பல பாஜக நிர்வாகிகள் இது சரியான நடவடிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தார்கள். புகார் கொடுத்த பெண்ணுக்கு காவல்துறை சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கட்சியும் அவர்களை நீக்கியது. இந்த மாதிரியான விஷயங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

இந்த வீடியோ வெளியான பிறகு கே.டி. ராகவன், தன்னுடைய முகப்புத்தகத்தில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், என்னையும், கட்சியையும் களங்கப்படுத்த திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி, இதில் இருந்து சட்டப்படியாக வெளிவருவேன். தர்மம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறார்கள்?

வீடியோவை மாற்றி மார்ஃபிங் செய்யவும் டெக்னிக் கூட தற்போது நிறைய உள்ளது. ஆகையால் எது உண்மை, எது பொய் என்று நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலாது. அவர் 30 ஆண்டுகாலமாக கட்சியில் இருப்பது எனக்குத் தெரியும். ராகவன் படிப்படியாக உயர்ந்து, தற்போது பொதுச்செயலாளர் என்ற இடத்துக்கு வந்தார். அவர் உழைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதைத் தாண்டி இந்த விவகாரம் அவருக்கு மிகப்பெரிய இழுக்குதான். அவரது குடும்பத்துக்கும் கஷ்டமான ஒன்றாகத்தான் இது இருக்கும். பாஜகவில் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றால் அவரதுஎதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும். இதே மாதிரியான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான யாரும் பாஜகவில் மீண்டும் நிலைபெற முடியாமல் போனது.

kt raghavan ramasubramanian
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe