Kavingar Kannanji  interview

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு மற்றும் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களைஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கவிஞர் கண்ணன்ஜி பகிர்ந்துகொள்கிறார்.

Advertisment

அவர் கூறியதாவது: “கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 23 தொகுதிகளில் தோற்பதற்கு அமமுக காரணமாக இருந்துள்ளது. அதிமுகவில் எந்தப் பிளவும் இருக்கக் கூடாது என்கிற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து சொல்லி வந்தார். எடப்பாடி பழனிசாமி தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். குழப்பங்கள் அனைத்தையும் நீக்கி கழகத்தை வலுவாக்க ஓபிஎஸ் எடுத்துள்ள முயற்சிதான் இந்த சந்திப்பு. இது சாதிக்கான சந்திப்பு அல்ல. சாதிப்பதற்கான சந்திப்பு.

Advertisment

ஜெயக்குமார் ஒரு அரசியல் பபூன். காமெடி பீஸ். அவர் இந்த சந்திப்பை விமர்சிக்கிறார். மோசமான நபரான ஜெயக்குமார் விமர்சிப்பது தெருவில் குரைப்பது போன்றது தான். கட்சியின் நலனுக்காக நாங்கள் பழசை மறந்துவிட்டு ஒன்றாக இணைந்துள்ளோம். பதவியிழந்த ஜெயக்குமாருக்கு பதவியை வழங்கியவர் சின்னம்மா. எடப்பாடியை முதலமைச்சராக்கியவர் சின்னம்மா. "இப்போது நான் தான் முதலமைச்சர் என்று அறிவித்தால் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கையெழுத்து வாங்கிய பிறகு அறிவியுங்கள்" என்று டிடிவி தினகரனிடம் கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி.

இவர்கள் நடத்துவது கட்சி அல்ல, கம்பெனி. இவர்களுக்குள் மிகப்பெரிய சண்டை வரப்போகிறது. துரோகம் செய்பவர்கள் ஒன்றாக இருக்கின்றனர். கட்சி நிச்சயம் மீட்கப்படும். சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது மரியாதை நிமித்தமானது தான். எடப்பாடி பழனிசாமியின் மகன் ஹோட்டலில் யார் யாரை சந்தித்தார் என்பது தெரியும். கே.பி.முனுசாமி அமைச்சர் துரைமுருகனோடு தொடர்பு வைத்துள்ளார். கோடநாடு வழக்கு பற்றிபேசினாலே நடுங்குகிறார் பழனிசாமி. நேரடியாக ஒருவரை சந்திப்பது என்பது மனிதப் பண்பு.

ஆர்.பி.உதயகுமார் போல் ஒரு பச்சோந்தியை எங்குமே பார்க்க முடியாது. சின்னம்மா முதல்வராக வேண்டும் என்று மொட்டையடித்தவர் உதயகுமார். இந்தக் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு முக்கியமான காரணமே உதயகுமார் தான். மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஜால்ரா அடிப்பது உதயகுமாரின் வழக்கம். அவருக்கான பாடம் விரைவில் கிடைக்கும். அதிமுகவை மீட்டெடுப்பதற்கு ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் மிக முக்கியம். எட்டப்பனுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு செயல்படும் பழனிசாமி போன்றவர்கள் அதிமுக எனும் பாலில் விழுந்த விஷம். அந்த விஷத்தை நீக்கி அதிமுகவை வெற்றிபெற வைப்பது தான் நோக்கம். அதற்கான பணியை ஓபிஎஸ் தொடங்கியிருக்கிறார்.”