Skip to main content

பூரண மதுவிலக்கு கொள்கையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - கார்த்தி சிதம்பரம் பேச்சு!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

gkj


நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, "மது விலக்கைப் பொறுத்த வரையில் மற்ற அரசியல் தலைவர்களைப் போல் என்னுடயை கருத்து இருக்காது. முற்றிலும் மாறுபாடு அடைந்த ஒன்றாகவே இருக்கும். பல வெளிநாடுகளில் இந்த பூரண மதுவிலக்கு என்பது தோல்வி அடைந்த திட்டமாகிப்போனதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். 1930 இல் அமெரிக்காவில்  கொண்டுவரப்பட்ட பூரண மதுவிலக்கு திட்டம் தோல்வியில் முடிந்தது. சட்ட விரோத மாஃபியாக்கள் தோன்றினார்கள். அவர்கள் மதுவைக் கைப்பற்ற நினைத்ததால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. சவுதி அரேபியா, ஈரானில் கூட சட்ட ரீதியாக பூரண மதுவிலக்கு இருக்கிறது. ஆனால் அவர்களால் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இந்தியாவில் குஜராத்தில் மதுவிலக்கு இருக்கிறது என்கிறார்கள். ஆனால் காந்தி பிறந்த போர்பந்தரில்தான் அதிகப்படியான மாஃபியாக்கள் இருக்கிறார்கள். மதுவிலக்கு வந்தாலே உடனே மாஃபியா வந்துவிடுவார்கள், கள்ளச்சாராயம் வந்துவிடும். 


நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இந்த 45 நாட்களிலேயே பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சியதை நாம் தொலைக்காட்சிகளில் நேரில் பார்த்தோம். புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஷேவிங் லோஷனைக் குடித்து மூன்று பேர் இறந்து போனார்கள். மது அருந்தக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம், அது உடலுக்குத் தீங்கு என்ற வாதத்தைக் கூட ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மதுவிலக்கு கொள்கை வெற்றிபெறவில்லை. அதற்கு மாறாக 45 நாட்களாகக் கடையைத் திறக்காமல் இரண்டு நாள் திறந்ததால் மட்டுமே கூட்ட நெரிசல் வந்தது. அப்படி இல்லாமல் தினந்தோறும் மதுக்கடைகளை இரண்டு மணி நேரம் திறந்திருந்தால் இப்படிக் கூட்டம் வந்திருக்காது. மற்ற நேரங்களில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்து இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் பூரண மதுவிலக்கு என்பது வெற்றி அடையாது. அதற்கு மாறாக மதுக்கடைகள் கோயில்கள், பள்ளிக்கூடங்கள் அருகில் வைக்காமல் குறைந்தபட்ச நேரம் மட்டும் மது விற்பனை செய்தால் பிரச்சனை வராது. அதனால் பூரண மதுவிலக்கு கொள்கையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை" என்றார்.

 

 

Next Story

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு (படங்கள்)

Published on 11/03/2024 | Edited on 11/03/2024

 

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் இன்று (11-03-24) காலை 11:30 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பங்கேற்றார். 
 

Next Story

'என் அனுபவத்தில் இவிஎம் நம்பிக்கையானது'- கார்த்தி சிதம்பரம் கருத்து

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
nn

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இவிஎம் மெஷினுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அண்மையில் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக விவிபேட் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவிஎம் மெஷின் நம்பிக்கையானது தான் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், விவி பேடை எடுத்து விட்டால் இவிஎம் நம்பிக்கையானது. என்னை பொறுத்தவரை எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் இதுவரை என்னுடைய அனுபவத்தில் எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு வேறு கருத்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக அறிகிறேன்'' என்றார்.