Advertisment

இங்க பாரு, உன் ஃப்ரண்ட் என்னை எப்படி டிஸ்டர்ப் பண்ணுறான்னு... நண்பனின் காதலிக்கு தொந்தரவு கொடுத்த காசி... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

suji

"ஒவ்வொரு ஆணுக்குள்ளும் காசி இருப்பான். நான் செய்தது எப்படியோ வெளியில் வந்துவிட்டது. என்னிடம் பழகிய பெண்கள், என்னை ஏனோ மன்மதனாகப் பார்த்தார்கள். மற்றவர்கள் நினைப்பது போல பெண்களின் உடம்பு மீது எனக்கு விருப்பம் இல்லை. என் உடம்பு மீது மட்டுமே நான் ஆர்வமாக இருந்தேன். என்னிடம் ஆசைதீரப் பழகிய பெண்கள், என்னை மிரட்டுவதற்காகவே, எனக்குத் தெரியாமல் வீடியோ எடுத்துவிட்டார்கள்.’'

Advertisment

ஆறு நாட்கள் காவல் விசாரணையில் ‘கெத்தாக’ இப்படிப் புளுகியிருக்கிறான் காசி. வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாறிய நிலையில், இதே ரீதியில் அவனால் அளந்துவிட முடியுமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

Advertisment

‘உலகத்தின் பார்வையில் எப்படியிருந்தாலும், தங்களுக்குப் பிள்ளை அல்லவா!’ என்னும் தவிப்பில் இருக்கிறார்கள், காசியின் பெற்றோர். அவனுடைய அப்பா தங்கப்பாண்டியன், காசி கஸ்டடியில் இருந்தபோது, அந்த அனைத்து மகளிர் காவல்நிலையத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார். விசாரணையின்போது காசி கேட்ட வீட்டுச் சாப்பாட்டைக் கையில் வைத்திருந்த அவர், உறவினர்களிடம் “அவனுக்கு சுஜின்னு பேரு வச்சோம். அது கொஞ்சம்கூட கம்பீரம் இல்லாம மொட்டையா இருந்துச்சு. அப்புறம்தான், தாத்தா ‘காசி நாடார்’ பெயரைச் சேர்த்துக் கிட்டான். இப்ப, அவனோட பேரு கெட்டுப்போயி பிரபல மாயிருச்சு. டெய்லி சாப்பிடறதுக்கு முன்னால மூணு நாட்டுக்கோழி முட்டைய பச்சையா குடிப்பான். அரெஸ்ட் ஆனதுக்குப் பிறகு ரொம்பவும் சுருங்கிப் போயிட்டான். ஃபேசியல் பண்ணாம வெளிய கிளம்ப மாட்டான். இப்ப அவன் மூஞ்சி வாடிப்போயிருச்சு'' என்று புலம்பியிருக்கிறார். “இங்கே மட்டுமில்ல, பறந்துபோயி மலேசியாவுலயும் கூத்தடிச்சிருக்கான் என்று, ஒரு தகவலைக் கசிய விட்டார்கள், காவல்துறை வட்டாரத்தில்.

suji

நாகர்கோவிலில் நடந்த முக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு ‘ஆர்க்கெஸ்ட்ரா’ ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்ற பேச்சு எழுந்தபோது, காசியின் தோஸ்த்’ ஒருவர் அங்கிருந்தார். உடனே அவர், தனது ஜூனியரான காசியிடம் "ஒரு நல்ல ஆர்க்கெஸ்ட்ரா ரெடி பண்ணமுடியுமா?' என்று கேட்டு அவசரப்படுத்தியிருக்கிறார். காசி, தனது நண்பனின் ஆர்க்கெஸ்ட்ராவை ஏற்பாடு செய்தான். அந்த இசை மேடையில் நண்பனின் காதலி சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாடியபோது, அவரது அழகில் காசி சொக்கிப்போனான். சுஜாவின் ஃபேஸ்புக் மெசஞ்சரில் "நீ ரொம்ப நல்லா பாடுற...'’என்று ஐஸ் வைத்துவிட்டு, முறுக்கேறிய தனது உடலழகை வெளிப்படுத்தும் போட்டோக்களை அனுப்பி வைக்கிறான்.

அந்த நேரத்தில் அவள், ஆர்க்கெஸ்ட்ரா காதலனுக்கு விசுவாசம் காட்டும் விதத்தில், "இங்கே பாரு.. உன் ஃப்ரண்ட், என்னை எப்படியெல்லாம் டிஸ்டர்ப் பண்ணுறான்னு.. ஒழுங்கா இருன்னு சொல்லி வை...''’என்று கண்ணைக் கசக்கியிருக்கிறாள். அவனும் காசியிடம் "அவளை நான் உயிருக்குயிரா காதலிக்கிறேன். வேணாம்டா ப்ளீஸ்...''’என்று கெஞ்ச, காசியும் பெரிய மனதோடு விட்டுவிட்டான்.

இது நடந்த சில நாட்களில், ஆர்க்கெஸ்ட்ரா நண்பனின் இன்ஸ்டாகிராமுக்கு லிங்க் ஒன்றை அனுப்பினான் காசி. அதனை அவன் ஓபன் செய்தபோது, காசியுடன் பழகிய இளம்பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களும், அவளது போன் நம்பரும் இருந்திருக்கிறது. அதனைப் பார்த்த மாத்திரத்தில் நிலை குலைந்து போய், தனக்கென்று ஒரு காதலி (சுஜா) இருப்பதை மறந்தவனாக, அந்தப் பெண்ணின் நம்பரில் மாறி மாறி தொடர்பு கொண்டிருக்கிறான், ஆர்க்கெஸ்ட்ரா நண்பன். இங்கேதான் விதி விளையாடியிருக்கிறது. காசி மீது புகார் அளித்திருந்த அந்தப் பெண்ணின் செல்போன் அழைப்பு விபரங்களை காவல்துறையினர் ஆராய்ந்தபோது, ஆர்க்கெஸ்ட்ரா நபரின் போன் நம்பர் சிக்கியிருக்கிறது. அவனைத் தூக்கி வந்து விசாரித்தபோது, காதலி சுஜா காசியின் கைக்கு மாறி, தன்னுடைய காதல் முறிந்த சோகத்தைப் பிழிந்திருக்கிறான்.

suji

இந்தியாவில் இருந்தவரையிலும் காதலுக்கு மரியாதை செலுத்தி வந்திருக்கிறாள், சுஜா. மலேசியா கிளப் ஒன்றில் பாடகி ஆனவுடன், போக்கு மாறியது. காசியின் பேச்சு இனித்தது. அதனால், வெறும் பேச்சோடு நின்றுவிடக்கூடாது என்று முடிவு செய்தனர். அந்த நோக்கத்துடன் காசி மலேசியா பறந்தான். அங்கு நடந்த சந்திப்பில் அவனோடு மூன்று பெண்கள் இருந்திருக்கின்றனர். தனது டிராஜடி கதையையும், காசி குறித்து சுஜா பேசிய ஆடியோவையும், விசாரணை அதிகாரி கேட்கும்படி செய்துவிட்டு அழுதிருக்கிறான், ஆர்க்கெஸ்ட்ரா நண்பன். "அப்படின்னா.. நீ காசி மாதிரியும் இல்ல.. காசியோட கூட்டாளியும் இல்ல...'’’ என்று சிரித்துவிட்டு, அவனை வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

காசி வழக்கில் காவல்துறை நடத்திய விசாரணை விபரங்களெல்லாம், சி.பி.சி.ஐ.டி. பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், எல்லாம் மேலிடத்தின் தலையீடு’ என்று காவல்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர், ‘காசி வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டால், தேர்தலின்போது அந்தக் கட்சியுடனான அரசியல் கூட்டணியே நம்மைக் கவிழ்த்துவிடும்.’ என்ற தகவல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி கவனத்துக்குப் போயிருக்கிறது. அதன்பிறகே, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு காசி வழக்கு மாறியது.

சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.-யாக இருந்த ஜாபர் சேட்டையும் மாற்றியது. அந்த நாற்காலியில், பிரதீப் வி பிலிப்பை புதிய டி.ஜி.பி.யாக அமர வைத்தது. சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. மாற்றத்துக்கான காரணத்தை குமரி மாவட்டத்தில் அலசி ஆராய்கிறார்கள். எப்படித் தெரியுமா? ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்தவர், பிரதீப் வி பிலிப். இம்மாவட்ட முக்கிய பிரமுகர்களுடன் இப்போதும் தொடர்பில் இருப்பவர். எஸ்.பி.யாக இருந்தபோது, பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொண்ட தால், நெருக்கமான வி.ஐ.பி. நண்பர்கள் வட்டம் இவருக்கு உண்டு. காசியின் கூட்டாளிகளும், பாதிக்கப்பட்ட பெண்களில் சிலரும், வி.ஐ.பி. குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.

இவர்கள், ‘காசி வழக்கில், இரு தரப்பினருக்கும், எந்த ஒரு சேதாரமும் வந்துவிடக்கூடாது, காசி யாரையும் காட்டிக் கொடுத்து விடக்கூடாது...'' எனச் சென்னையில் முகாமிட்டு மூக்கைச் சிந்தியிருக்கிறார்கள். நடுக்கத்தில் உள்ள இந்த வி.ஐ.பி.க்களுக்கு, ஆபத்பாந்தவனாகத் தெரிகிறார், பிரதீப் வி பிலிப். ஆனால், காவல்துறை உயர்மட்டத்திலோ, பிரதீப் வி பிலிப் ஹானஸ்ட் ஆபீசர் என்றும் யாரும் அவர் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் தெரிவிக்கின்றனர். பெண்களின் உடல் மீது தனக்கு ஆர்வம் இல்லை என்று அழுத்தமாக காசி அளித்துள்ள வாக்குமூலம், ’அவனா நீ?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன், நித்யானந்தாவுக்கு நடத்தியதுபோல், ஆண்மை பரிசோதனை செய்தால் என்ன?’ என்று, அடுத்தகட்ட விசாரணையின்போது தீவிரத்தைக் கூட்டும் மனநிலையை, சி.பி.சி.ஐ.டி. பிரிவினருக்கு ஏற்படுத்தியிருக்கிறதாம்.

http://onelink.to/nknapp

நாகர்கோவில் சிறையில், ஆடு திருடிய மூன்று பேரோடு தான் அடைக்கப்பட்டுள்ள செல்லில், கம்பி எண்ணுகிறான் காசி. சி.பி.சி.ஐ.டி. விசாரணையின்போது, அவன் வாயிலிருந்து என்னென்ன உண்மைகள் வெளிவரப் போகிறதோ? பொள்ளாச்சி பாலியல் வழக்கினைப் போல், எவையெவை மறைக்கப்படப் போகிறதோ?

-மணிகண்டன்

incident Investigation Kanyakumari woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe