Advertisment

தேர்தலில் கூட்டணி வைக்க ரெடியாகிய கமல்! மக்கள் நீதி மய்யம் உற்சாகம்!

முதல் தேர்தல் களத்தில் ஏறத்தாழ 4% பெற்ற கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு பெரும்பான்மை வாக்குகள் நகரவாசிகளிடமிருந்து தான் கிடைத்தன. கிராம மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் அறிமுகமாகாதது கமலை யோசிக்கவைத்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கமல்ஹாசனை கடந்த மாதம் சந்தித்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களிடம் கமல்ஹாசன்.... ""மக்கள் நீதி மய்யம் இதுவரை முழுமையாக எந்த ஒரு கிராமத்தையும் சென்றடையவில்லை. இதனால் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கிராமங்களில் மக்கள் நீதி மய்யத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.

Advertisment

mnm

தமிழகத்தில் தி.மு.க., அ.தி. மு.க. கட்சிகள் வலுவாக இருப்பதற்கு காரணம் அக்கட்சியின் வலுவான அடித்தளம் கிராமத்திலிருந்து வளர்ந்ததுதான். கடந்த தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்துக்கு அதிகமான ஊராட்சிகளில் கிராமசபை கூட்டத்தை தி.மு.க. நடத்தியது. அதனால் அதன் அடித்தளம் மீண்டும் பலமானது. ம.நீ.மய்யத்துக்கு அதைப்போன்ற ஒரு அடித்தளத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். இனி நடக்கும் ஒவ்வொரு கிராம சபைக் கூட்டங்களிலும் ம.நீ.மய்யத்தினர் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினையில் நாம் கேள்விகள் கேட்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றிருக்கிறார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து 28-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் மனுக்களோடு கலந்துகொண்டனர். இதில் கமல்ஹாசன் காணொலி மூலம் 72 ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடமும் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்களிடமும் பேசி நிலவரத்தைக் கேட்டறிந்தார். இதேபோல் குமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 95 ஊராட்சிகளில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்த மக்கள் நீதி மய்யத்தினர், அங்கு தீர்க்கப்படாத, அதிகாரிகள் கண்டுகொள்ளாத மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுத்து அதை கிராம சபைக் கூட்டத்தில் விவாதப் பொருளாக்கி தீர்மானமாக்கினார்கள்.

mnm

பறக்கை ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ம.நீ.ம. நாகர்கோவில் தொகுதி மற்றும் பகுதிப் பொறுப்பாளர்களான சிதம்பரம், ராஜசேகர், சுந்தர்ராஜ், கணேஷ் சிதம்பரம் நம்மிடம், "உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் மக்களுக்கான தேவைகளும் பிரச்சினைகளும் அதிகம் உள்ளன. இதையெல்லாம் ஒவ்வொரு ஊராட்சியிலும் சென்று பட்டியல் தயாரித்தோம். பறக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் கக்கன்புதூரில் அந்த மக்கள் குளத்தில் இறங்கிக் குளிப்பதற்கு பல ஆண்டுகளாக படித் துறை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் அதை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

mnm

அதேபோல் நெடுந்தெரு மக்களுக்கு கழிவுநீர் சாக்கடை நிரம்பியுள்ள பகுதியிலிருந்து ஆழ்குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்கிறார்கள். அந்த குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும். மின்சாரம் இல்லாமல் காட்சிப் பொருளாக இருக்கும் இ- சேவை மையத்துக்கு மின்சாரமும், அலுவலகம் இருக்கு ஆனால் அதிகாரிகள் இல்லை. இதையெல்லாம் கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளை வலியுறுத்தி தீர்மானம் போட வைத்தோம்.

இங்கு கிராம சபைக் கூட்டம் நடக்கும்போது பொதுமக் கள் 5-ல் இருந்து 10 பேர்தான் வருவார்கள். ஆனால் இந்தக் கூட்டத்தில் 100 பேரை கலந்து கொள்ள வைத்தோம். ஆரம்பத்தில் அந்த மக்களுக்கு எங்களை அடையாளம் தெரியவில்லை. கிராம சபைக் கூட்டத்துக்குப் பிறகு அந்த மக்கள் எங்களுக்கு ஒரு அடையாளத்தை தந்ததோடு எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையும் வந்துவிட்டது. இது கிராமத்தில் எங்களுக்கு முதல் வெற்றி'' என்றனர். கிராம சபைக் கூட்டங் களை கையிலெடுத்திருக்கும் கமல்ஹாசனின் யுக்தி குறித்து மாநில நிர்வாகிகளிடம் பேசிய போது... ""பிரதான கட்சிகளும் ஆண்ட மற்றும் ஆளும் கட்சி களும் கிராமங்களைக் கண்டு கொள்ளவேயில்லை. இதனால் கிராம மக்களின் குரலை ஒலிக்க வைக்கவும் கிராமங்களில் ம.நீ.ம.வை வலுப்படுத்தவும், ஊராட்சியில் முழு அதிகாரம் கொண்ட கிராமப் பொறுப் பாளர்கள் என்ற பதவியை அறி விக்கவும் தலைமை திட்டமிட்டுள் ளது. அந்தப் பொறுப்பாளர்கள் கிராமத்திலுள்ள மக்கள் பிரச் சினைகளை முழுமையாக அறிந் திருக்க வேண்டும். அதன்பிறகு தலைமை அறிவிக்கும் ஒரு விச யத்தை மாவட்ட தலைநகரத்துக் குப் பதில் கிராமத்திலிருந்து நடைமுறைப்படுத்தும் விதமாக திட்டம் வகுக்கப்பட உள்ளது. இனி கட்சிக்கு முதுகெலும்பே கிராமம்தான்''என்றனர்.

பிக்பாஸ் சீஸன் 3 பங்கேற் பாளர்களிடம் "அகம் டி.வி.' வழியே பேசுகிற கமல், ம.நீ.ம. சார்பில் கிராம மக்களிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸில் பேசியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் வந்தால் கணிசமான ஊராட்சிகளில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதே கமலின் டார்கெட். கிராம சபை வியூகம், உள்ளாட்சித் தேர்தல் களத்தில் ஹிட்டானால், அது சட்டமன்ற தேர்தலுக்கு பெரிய கட்சிகளுடன் மோதுவதற்கோ அல்லது கூட்டணி அமைப்பதற்கோ பயன்படும் என்பது கமல் கணக்கு.

admk kamal MNM politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe