மீனவர்களைப் பற்றி கவலைப்படாதவர்தான் மீன்வளத்துறை அமைச்சர்... மக்கள் நீதி மய்யம் கடும் தாக்கு

மீன்பிடி தடைக் காலத்தில் பன்னாட்டு நிறுவன கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

kkk

''ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?'' என தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

 nakkheeran app

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மிடம் பேசுகையில், கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதில் மீனவர்களும் கடலுக்கு செல்லக்கூடாது என்று தடை செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் விற்பனை செய்ததையும் தடை விதித்தனர். இதனால் அவர்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டது. காய்கறிகள் விற்பனைக்காக கோயம்பேட்டில் எப்படி ஏற்பாடு செய்தார்களோ அப்படி இவர்களுக்கும் செய்திருக்கலாம் அதனை அரசு செய்யவில்லை.

mmm

மேலும் மீன்களின் இனவிருத்திக்காகவருடம் தோறும் வரும் மீன்பிடி தடைக்காலமும் தற்போது வந்துள்ளது. இதனால் அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் நாட்டுப்படகில் கடலுக்கு சென்றபோது, கடலில் பன்னாட்டு நிறுவன கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். எந்த நோக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் போடப்பட்டதோ, அதன் நோக்கமே சிதைந்துவிடுமே என்று அவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

jjj

இந்தியாவின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை நமது கடற்கரை. பெரும்பான்மையான சமுதாயமான மீனவர்கள் பிரிந்து பிரிந்து வசிக்கிறார்கள் கடற்கரையோரங்களில். மற்றவர்களைப் போல ஒரே இடத்தில் வசித்தால் ஓட்டுக்காக இவர்களை கொண்டாடிப்பார்கள் அரசியல் கட்சியினர். பிரிந்து வாழ்வதால் இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. யாராவது அதிமுகவைப் பற்றியோ, அதிமுக அரசைப் பற்றியோ எதிர்த்து பேசினால் அவர்களுக்கு பொறுப்பாக பதில் சொல்லாமல், நக்கலாக பதில் சொல்வதையே சாதனையாக வைத்திருக்கிறாரேயொழிய, ராயபுரத்தில் இருந்து கொண்டு மீனவர்களைப் பற்றி கவலைப்படவில்லை.

கரோனா வைரஸ் தாக்காமல் மக்களை பாதுகாக்க அரசு எப்படி நடவடிக்கை எடுக்கிறதோ, அதைப்போலவே மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

D JAYAKUMAR Fishermen Kamal Haasan minister Murali Appas
இதையும் படியுங்கள்
Subscribe