ரசிகரை அடித்தாரா கமல்?
ஃப்ரேம் பை ஃப்ரேம் ஆய்வு...
நடிகர் கமலஹாசன் அரசியலில் கவனம் செலுத்தியுள்ள வேளையில் தற்போது வெளியான ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 'ரசிகர் ஒருவர் கமல் காலில் விழுகிறார், அவரை கமல் அடிக்கிறார்' என்பதாக அது உள்ளது. உண்மையாகவே கமல் அவரை அடிக்கிறாரா இல்லை தடுக்கிறாரா என்பதைஆராய்ந்தோம்.
1.முதலில் காலில் விழ வருகிறவரை பார்க்கிறார்
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/2017/interns/kamal adithaaraa/1.jpg)
2.சுதாரிக்கிறார்
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/2017/interns/kamal adithaaraa/2.jpg)
3.அவரை நோக்கி கையை நீட்டுகிறார்
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/2017/interns/kamal adithaaraa/3.jpg)
4.அவரை தடுக்கிறார்
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/2017/interns/kamal adithaaraa/4.jpg)
5.பாதுகாப்பிற்கு இருக்கும் காவல்துறை அதிகாரியும், பின்னிருப்பவர்களும் அந்த ரசிகரை பின்னே இழுக்கின்றனர்
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/2017/interns/kamal adithaaraa/5.jpg)
இதில் எங்கும் அவர் அடிப்பது போல நம் கண்களுக்கு தெரியவில்லை. எந்த இடத்திலும் யாரையும் காலில் விழ அனுமதிக்காதவர் கமல். அதற்கு நேரடியான சாட்சிகள் உண்டு. ஆகையால் இதை அவர் கோபமாகத் தடுத்திருக்கவும் வாய்ப்புண்டு. மேலும் அந்த தடுக்கும் இடத்தில் மட்டும் வீடியோ வேகமாக செல்வதாக தெரிகிறது. கூர்ந்து கவனிக்கும் போதுதான் அது தெரியவருகிறது. இந்த வீடியோவால் கமல், ரஜினி ரசிகர்கள் மாறி, மாறி டிவிட்டரில் கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர். கமல் நடித்த 'உத்தமவில்லன்' படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்துடன் இருக்கும் இந்த வீடியோ 'ட்ரெண்டில்' வந்தது எப்படி? ரஜினியும் அரசியலுக்கு வர தயாராகி வந்த பொழுது, அவரை 'ஓவர்டேக்' செய்துவந்துவிட்டார் கமல். இது பிடிக்காதவர்கள் செய்ததாகக் கூட இருக்கலாம்.
கமல் குமார்