Kalshetra issue police investigation

சென்னை கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில்கலாஷேத்ரா நடனப் பிரிவின் துணை பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஒருவர்ஒரு மாணவியுடன் தகாத உறவில் இருப்பதாகவும், அதேபோல முன்னாள் மாணவி ஒருவர்அந்தப் பேராசிரியரால் கர்ப்பமாகி மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்தார் என்றும் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வரவேஅதைடெலிட் செய்துவிட்டார்.

Advertisment

இதுதான் பிரச்சனையின் தொடக்கப்புள்ளி. கல்லூரியின்முன்னாள் இயக்குனரேஅங்கு பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல்கள் நடப்பதாகப் பதிவிட்டிருந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்புகளுக்கு நடுவேஅமெரிக்காவைச் சேர்ந்த கேர் ஸ்பேசஸ் என்ற கலாச்சார அமைப்புகலாஷேத்ராவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக புகார்தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. இதைப் பற்றி டெல்லியைச் சேர்ந்த சமூக ஊடகம் செய்தி வெளியிடவேதேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.க்கு ட்வீட் போடதேசிய அளவில் இந்த விஷயம் பரபரப்பாகத் தொடங்கியது.

Advertisment

சென்னை அடையாறில் இயங்கி வரும் கலாஷேத்ரா அறக்கட்டளைபரதநாட்டியம் மற்றும் இசை தொடர்பான கலைப் படிப்புகளுக்கு பெயர்பெற்றது. 1936-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கலாஷேத்ராவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு மாணவ மாணவிகள்பயின்று வருகின்றனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இதுவரை கலாஷேத்ரா குறித்து புகார் எதுவும் வரவில்லை. இருந்தாலும் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாகத் தெரிவித்தார்.

Kalshetra issue police investigation

இதையடுத்து கலாஷேத்ராவின் தற்போதைய இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் டி.ஜி.பி.யைசந்தித்துஅதுபோல ஓர் சம்பவம் நடைபெறவில்லை என்றும் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டதாகக் கூறும் முன்னாள் மாணவியும்தற்போதைய மாணவியும் இதை மறுத்துள்ளதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகள் யாராவது புகார் கொடுத்தால் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் வெளிவந்ததையடுத்து கடந்த ஜனவரி 3-ஆம் தேதி கலாஷேத்ராவின் ஐ.சி.சி. கமிட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜிதா, நடன கல்லூரிப் பேராசியை ருக்மணிதேவி, நந்தினி நாகராஜன், உமாமகேஷ்வரி ஆகியோர் கலாஷேத்ரா மாணவிகளை அழைத்து விசாரித்தபோதுஒருவரும் புகாரளிக்க முன்வரவில்லை என்றனர். ‘கலாஷேத்ரா குறித்து புரளியையோவதந்தியையோ கிளப்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதன் வலைதளம் எச்சரிக்கிறது.

Kalshetra issue police investigation

‘இப்படி விசாரணைக்கு முன்னரேமிரட்டப்பட்டால் யார் தைரியமாக புகார் கொடுக்க முன்வருவார்’ என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்றுக் கவனித்து வருபவர்கள்.

கலாஷேத்ரா முன்னாள் இயக்குனர் லீலா சாம்சனைத் தொடர்புகொண்டால் அவர் போனை எடுக்கவில்லை. தற்போதைய இயக்குனரான ரேவதி ராமச்சந்திரன் நக்கீரன் என்று கூறியதுமே தொடர்பைத் துண்டித்துவிட்டார். கலாஷேத்ரா விசாரணை கமிட்டியை சேர்ந்த வழக்கறிஞர் அஜிதாவைத் தொடர்புகொண்டோம். போனை எடுத்த அவர்களின் அசிஸ்டெண்ட், “மேடமுக்கு உடல்நிலை சரியில்லை. மெசேஜ் செய்தால் பதில் கூறுவார்” என்று தெரிவித்தார். அதன்படி நாம் அவரை தொடர்புகொண்டோம். அதற்கு, “கலாஷேத்ராவில் பாதிக்கப்பட்டதாக எந்த ஒரு புகாரும் வரவில்லை. முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் மீதுபாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ள்ளார்” என்றுதெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதால் மேற்கொண்டு பேச மறுத்துவிட்டார்.

கலாஷேத்ராவின் முன்னாள் நாட்டிய மாணவியான "பாய்ஸ்' பட நடிகை அனிதா ரத்னத்திடம் பேசினோம். "உலக அளவில் புகழ்பெற்ற இந்த கலாஷேத்ராவால் இந்தியாவுக்குப் பெருமை. அதுவும் மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த பாரம்பரிய கலாச்சாரகல்லூரியில் இப்படி ஒரு சம்பவம் என்பது எனக்கு ரொம்ப வருத்தமளிக்கிறது. கடந்த பத்து வருஷமா இதுபோல நடக்கிறதா சொல்றாங்க. புகாரில் சம்பந்தப்பட்ட பேராசிரியரை விசாரிக்கணும். இப்போதைக்கு ஒரு மாணவி புகார் சொல்ல முன்வந்ததா சொல்றாங்க. இதுபோல சம்பவம் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமா வந்து புகார் கொடுத்தாதான் இந்த நிலை தொடராது” என்றார்.

Kalshetra issue police investigation

கலாஷேத்ரா முன்னாள் மாணவியான மீராகிருஷ்ணன் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை நக்கீரனிடம் தைரியமாக வெளிப்படுத்தினார். "நான் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவள். எங்கள் குடும்பம் கலைக் குடும்பம். கலாஷேத்ராவில் படிப்பது அங்கு தரப்படும் பட்டத்துக்காக இல்லை. கலை மீதுள்ள ஆர்வத்தால்தான். பெரிய கனவுகளுடன் நான் இங்கு வந்தேன்.

ஒருநாள் கலாஷேத்ரா வளாகத்தில் மரத்தடியில் இருந்தபோதுபேராசிரியர்ஹரிபத்மன் என்னருகே வந்து வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். எனக்கு முதலில் அது புரியவில்லை. அவரது நோக்கம் புரிந்தபோது மறுத்தேன். மீண்டும் ஒருவிதமான பாலியல் சைகையுடன்யாருக்கும் தெரியப்போவதில்லை என்று கூறி அழைத்தார். நான் அவரது அழைப்பை உறுதியாக மறுத்தேன். அதுமுதல் எனக்கான பிரச்சனை ஆரம்பமானது. தொடர்ந்து வந்த மாதங்களில் ஹரிபத்மனால் தொந்தரவுக்கு உள்ளானேன்.

ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது கல்லூரிக்கு வந்திருந்த நிலையில், வகுப்புக்கும் பாத்ரூமுக்கும் போய் வந்து கொண்டிருந்தேன். ஒருமுறை பாத்ரூமில் இருந்து வெளிவரத் தாமதமானபோது, "பாத்ரூமில் யாருடன் இருந்துவிட்டு வருகிறாய்?' என அனைவர் முன்னிலையிலும் அசிங்கமாகக் கேட்டார். கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களுக்கும் மேல் என்னை அவமானப்படுத்தினார்.

ஒருசமயம் நாட்டிய நிகழ்வொன்றுக்காக எனக்கு கிருஷ்ணர் வேடம் கொடுத்தார். நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் நிகழ்ச்சிக்கான நாள் நெருங்கியதும், "அந்த வேடத்தை நீ சரியாகச் செய்யமாட்டாய்' என்று சொல்லி என்னிடமிருந்து பறித்தபோது நொறுங்கிப்போனேன். இத்தகைய கலைநிகழ்ச்சிகளில் ஹரிபத்மனுடன் அனுசரித்துப் போகிறவர்களுக்கே பெரும்பாலும் வாய்ப்பளிப்பார். இத்தகைய தொடர் நெருக்கடிகளால் மனமுடைந்து நான் 2019-ல் திருவனந்தபுரத்துக்கே திரும்பிவிட்டேன்.

Kalshetra issue police investigation

இப்போது கலாஷேத்ரா நிர்வாகம் முன்னாள், இந்நாள் மாணவிகள் யாரும் பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்யவில்லை என்கிறது. இது எவ்வளவு பெரிய பொய். நானே கலாஷேத்ராவுக்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பியுள்ளேன்.

ஹரிபத்மன் கலாஷேத்ரா பெண்கள் பாத்ரூம் பக்கம் தற்செயலாக நடமாடுவார். உணவு இடைவேளையின்போது பெண்கள் பக்கம் வந்தமர்வார். தொட்டுப் பேசுவார். இப்போது கலாஷேத்ராவில் இரண்டாமாண்டு பயிலும் சில மாணவிகள் என்னைத் தொடர்புகொண்டு பேசினர். அவர்கள் பேசுவதை வைத்துப் பார்த்தால், ஹரிபத்மன் மட்டுமல்லாமல் வேறுசில ஆசிரியர்களும் மாணவிகளை தவறான நோக்கத்தில் அணுகுகின்றனர். சிலர் இரவுவீடியோ அழைப்பில் வந்து பேசச் சொல்கின்றனர். எத்தனை காலம் உண்மையை அழுத்திஒடுக்கி வைத்துவிட முடியும்” என்கிறார்.

கலாஷேத்ரா முன்னாள் மாணவியான மீராகிருஷ்ணனும் மற்றொரு மாணவியும் தற்போது தைரியமாக வெளிவந்து இவ்வமைப்பில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்துப் பேசியுள்ளார்கள். இவர்களைப் போல மற்றவர்களும் வாய் திறக்கும் போதுதான் உண்மைகள் வெளிவரும்.

ஒரு அமைப்பு எத்தனை புகழ்மிக்கதாகவும் பாரம்பரியமானதாகவும் இருந்தாலும்அதனைவிடவும்மிக முக்கியமானது அதில் பயிலும் மாணவிகளும் அவர்களின் நலன்களும். அதை மனதில் கொண்டு நியாயமான விசாரணைகள் நடைபெறுவதையும் தவறு செய்தவர்கள் தப்பாமலிருப்பதையும் மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.