தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி நதி நீர்ப் பங்கீடு முறையாகக் கிடைக்க உச்சநீதிமன்றம் தந்த 6 வாரத் தவணை முடியவிருக்கிறது. மத்திய அரசோ, 'செய்வதில்லை' என்ற மனப்போக்குடன் வித்தை காட்டும் நிலையில், பக்கத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்குள்ள சூடு, சுயமரியாதை உணர்வு, பெரியார் மண்ணை ஆள்வோருக்கு வருவது எப்போது?
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்? வெறும் சட்டமன்றத் தீர்மான ஆலாபனைகளால் ஒருபோதும் தீர்வு கிட்டாது! தீவிர நடவடிக்கையில் தமிழ்நாடு இறங்கட்டும்! என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.