Skip to main content

தந்தை கொடுத்த தீர்ப்பை மாற்றிய தனையன்; யார் இந்த சந்திரசூட்?

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

hkj

 

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக நாளை பொறுப்பேற்க உள்ளார் டி.ஒய்.சந்திரசூட். நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பு பணியைத் துவங்கிய அவர், உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற இடத்திற்கு தற்போது வந்துள்ளார். 62 வயது ஆகும் அவர் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பணியில் இருக்கப்போகிறார். இவர் தலைமை நீதிபதியாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 

 

இதுவரை இவர் வழங்கிய தீர்ப்புகளே இவர் யார் என்பதைச் சொல்வதற்கு போதுமானவை. அப்பா விசாரித்து வழங்கிய தீர்ப்பையே இவர் மாற்றினார் என்றால் எவ்வளவு ஆச்சரியமான ஒன்று. அவரது தந்தை ஒய்.வி சந்திரசூட் அவர்களும் இதே உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் தான். இந்திய நீதித்துறை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் தந்தையும், மகனும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த நிகழ்வு என்பது தற்போதுதான் முதல் முறையாக அமைய இருக்கிறது. பதவி ஏற்கும் முதல் நாளிலேயே இந்த சாதனையைப் புரிய இருக்கிறார் டி.ஒய்.சந்திரசூட்.

 

அதையும் தாண்டி இவரது தந்தை ஒய்.வி சந்திரசூட் 1985ம் ஆண்டு தலைமை நீதிபதியாக இருந்தபோது சவுமித்ரி விஷ்ணு வழக்கை விசாரித்து இந்திய அரசியலமைப்பு தண்டனைச் சட்டம் ஐபிசி 497 செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தார். அப்போதே மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய அந்தப் பிரிவு என்ன என்பதுதான் மிக முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அதாவது திருமணமான ஆண், பெண் மற்றொருவரிடம் திருமணத்தை மீறிய உறவு வைத்துக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு அது புகாராகப் பதிவு செய்யப்பட்டால் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கும் வகையில் அந்தச் சட்டம் அமைக்கப்பட்டிருந்தது. 

 

இதை 1985ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி சந்திரசூட் விசாரித்து, இந்த தண்டனைச் சட்டத்தில் எந்தத் தவறும் இல்லை, இது தொடரலாம் என்று தீர்ப்பளித்தார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தைக்கு வந்த அதே வழக்கு மகன் ஒய்.வி சந்திரசூட் அவர்களிடம் வருகிறது. இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்த அவர், தவறு செய்யும் இருவரில் ஒருவருக்கு மட்டும் தண்டனை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அரசியலமைப்புக்கு எதிரான சட்டமாக இருக்கிறது என்று கூறி அந்தச் சட்டத்தை நீக்க உத்தரவிட்டார். தந்தை ஏற்றுக்கொண்டாலும் அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அதில் உறுதியாக நின்று எதிர்க்குரல் கொடுக்கும் நீதிமானாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறார் அவர். இன்னும் 24 மாதங்கள் அவர் பதவியில் இருக்கப் போகிறார். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக காலம் தலைமை நீதிபதியாக இருக்கப்போகும் சாதனையும் அவர் படைக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Next Story

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி 

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

Supreme Court allows fishing using surukumadi nets

 

மீனவர்கள் சுருக்குமடி வலைகளை கடலில் பயன்படுத்தும்போது அரிய வகை மீன்கள், பவளப் பாறைகள் ஒட்டுமொத்தமாக அரித்துச் செல்லப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலையைப் பயன்படுத்த தடை விதித்தது. 

 

இதையடுத்து இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

 

இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதிலும் 12 கடல் மைல்களுக்கு அப்பால் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு; நீதிபதி சந்திரசூட்டை பாராட்டிய முதல்வர்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Chief Minister mk stalin praised Justice Chandrachud

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்., உச்சநீதிமன்றம் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க தொழில்நுட்பம் உதவும். அதன் முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தார். இதனைப் பாராட்டியுள்ள பிரதமர் மோடி, நீதிபதி சந்திரசூட் கூறியது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டின் கருத்தை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை வெளியிட வேண்டும் என்ற கருத்தை தான் முழு மனதுடன் வரவேற்பதாக கூறியுள்ளார். அத்துடன் உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழியை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவது நீதியை சாமானிய மக்களின் அருகே கொண்டு வரும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.