Advertisment

கொஞ்சம் பொறுங்க..! சமாதானம் செய்யும் ஈ.பி.எஸ்.!

மழைநீரை சேகரிப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் ஊடங்களில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சித் துறை சார்பில் அத்துறையின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியிருக்கிறார்.

Advertisment

sp velumani

இந்த விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுகவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இரட்டை தலைமை என்று சொல்லி வந்த நிலையில், வேலுமணி விளம்பரத்தில் வருவது அவரது தலைமையில் ஒரு அணி உருவாகிறதா என அக்கட்சியினர் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் இந்த விளம்பரம் அதிமுகவில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அதிமுகவில் துணை முதலமைச்சராவது யார் என்பதில் தங்கமணி மற்றும் வேலுமணி இடையே மறைமுகமாக மோதல்நடந்து வருகிறது. இதில் வேலுமணி விளம்பரத்தில் பேசுவது என்பது, வேலுமணிக்கு கூடுதல் வலுசேர்க்கும் விஷயம் என ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்து வருகிறது. இன்னும் கொஞ்சம் நாட்களில் இந்த விளம்பரத்தை நிறுத்திவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி சமாதானம் செய்து வருகிறாராம்.

Advertisement edapadi palanisamy sp velumani
இதையும் படியுங்கள்
Subscribe