/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ayako.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஜப்பான் இளவரசி அயாகோ சாமானியர் ஒருவரை காதலித்தார். ஜப்பான் அரச குடும்ப வழக்கத்தின்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாமானியரை காதலித்தாலோ, மணந்தாலோ அரச வாழ்க்கையை விட்டு சென்றுவிட வேண்டும். இந்த விதிக்கு அப்பாற்பட்டவரல்ல இளவரசி அயாகோ, அவரும் இந்த விதிக்கு உட்பட்டு அரச வாழ்க்கையை விட்டு விலகினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இளவரசி அயாகோ, மன்னர் அகிஹிடோவின் ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் ஆவார். இவர் சாமானியர் ஒருவரை (அரச குடும்பம் அல்லாத ஒருவரை) காதலித்தார். அவர் பெயர் கெய் மொரியா இவர் ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்கிறார். வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்த அயாகோ காதலனை திருமணம் செய்ய நினைத்தார். அப்போது அவர்முன் இரண்டு விருப்பங்கள் இருந்தன. ஒன்று சுகபோகங்களுடனான வசதியான அரச வாழ்க்கை, இன்னொன்று காதலனை திருமணம் செய்துகொண்டு சாமானியரின் வாழ்க்கை. அயாகோ தேர்ந்தெடுத்தது, காதலனுடனான சாமானியர் வாழ்க்கை. இந்த இருவருக்கும் டோக்கியோவிலுள்ள ஒரு வழிபாட்டு தலத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துகொண்டு பலரும் மணமக்களை வாழ்த்தினர். மணமக்கள் வசதியாய் வாழ ஒரு மில்லியன் டாலர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)