/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aa_0.jpg)
உத்திரபிரதேசத்தில்முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சிறையில் கடந்த சனிக்கிழமை கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட விசாரணை கைதி,சிறையில் இருந்தபடி சக கைதிகளுடன் இணைந்து செல்பி எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர் சிறையில் கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக விஜய் சௌத்ரி என்பவன் சென்ற ஆண்டு டிசம்பர்மாதம் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று சிறையில் ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகியுள்ள மோஹித் மற்றும் சச்சினுடன் செல்பி எடுத்து தனது ஃபேஸ்புக் கணக்கில்பதிவேற்றம் செய்துள்ளார். இதனை கண்டறிந்த சிறை நிர்வாகம், விஜயிடமிருந்து கைபேசியை கைப்பற்றியது. இவர் அதிகாரிகளிடம் சிக்க,சமூகவலைதளத்தில் பரவியதே காரணம். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பே பிப்ரவரி 16ஆம் தேதி இதேபோல் இரண்டு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளான். ஆனால் அப்போது சிறை அதிகாரிகள் கவனிக்கவில்லை.
இதுகுறித்து சிறை அதிகாரி சக்சேனா கூறுகையில், "விஜய் சௌத்ரியை கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த டிசம்பர் மாதம்இந்தியச்சட்டம் 307 மற்றும் 323ன் கீழ் கைது செய்தோம். இவர்களுக்கு கைபேசிகளைகொடுப்பது யாரென்று தெரியவில்லை.அதற்குவிசாரணை நடந்து வருகிறது. இதனை தடுக்க சிறையில்,ஜாமர்கருவி பொறுத்தவுள்ளோம்என்று கூறினார்.
சிறையில் கைபேசிகள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இப்போதெல்லாம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சிறைகளில் மறைமுகமாக கைபேசியை உபயோகிக்கின்றனர். அதிலும் செல்வாக்கு மிகுந்தவர்களேல்லாம் சிறை அதிகாரிகளுக்கு தெரிந்தே தனது பாதுகாப்புக்காக என்று கூறி உபயோகிக்கின்றனர். செல்வாக்கு மிகுந்தோர் கைபேசி மட்டுமா பயன்படுத்துகிறார்கள் ஷாப்பிங் கூடதான் சென்றுவருகிறார்கள். இதையே கண்டுகொள்ளவில்லை சிறை நிர்வாகம் அதை கண்டுகொள்ளுமா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)