Skip to main content

“பத்து ஜென் கதைகள் இருந்தால் போதும்; வாழ்க்கையை எளிதாகக் கடந்து விடலாம்” - ஜெய் ஜென்

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

 JAI ZEN about ZEN STORY

 

ஜென் கதைகளின் மகத்துவம் குறித்து ஜெய் ஜென் நம்மிடம் விவரிக்கிறார்.

 

நமக்கு திருக்குறள் எப்படியோ அதுபோல் ஜப்பானியர்களுக்கு, சீனர்களுக்கு, திபெத்தியர்களுக்கு ஜென் தத்துவம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிமிடத்தில் நீங்கள் வாழ்வது தான் ஜென் தத்துவம். சிறுவயதிலிருந்தே நான் ஒரு புத்தக வாசிப்பாளன். அதில் ஒரு புத்தகத்தில் ஜென் கதைகள் குறித்த ஒரு வரி இருந்தது. அதன் பிறகு ஜென் தத்துவம் குறித்து நான் வாசிக்க ஆரம்பித்தேன். மிகக் குறைவான வரிகளில் பெரிய தத்துவங்களைச் சொல்வதுதான் ஜென் தத்துவம். ஒரு வரியில் கூட கதைகள் இருக்கின்றன. உதாரணமாக "மழை பெய்கிறது. குடையை எடுத்துச் செல்வதும் செல்லாமல் இருப்பதும் உன்னுடைய விருப்பம்" என்பது ஒரு ஜென் கதை. 

 

அவர்கள் பேசும் மொழியே கதைகளின் வாயிலாகத் தான் இருக்கும். உலகத்தில் நிலையானது என்பது எதுவுமே இல்லை என்கிறது ஒரு ஜென் கதை. ஜென் தத்துவ ஞானிகளின் வாழ்க்கையே எளிமையானது. அதனால் அவர்களுடைய சிந்தனையும் எளிமையாக இருக்கும். அதன் மூலமே ஜென் கதைகளும் பிறக்கின்றன. 10 ஜென் கதைகளை அறிந்தால் வாழ்க்கையை எளிமையாகக் கடந்து விடலாம். இயற்கையான விஷயங்களின் மூலமாகவே மகிழ்ச்சியாக இருக்கலாம், அதற்காக செயற்கையாக எதையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது ஜென் தத்துவம். 

 

ஜென் தத்துவ ஞானிகள் உலக நடப்புகள் அனைத்தையும் அறிந்திருப்பார்கள். ஆனால் தாமரை இலை தண்ணீர் போல் வாழ்வார்கள். அனைத்தையும் தூரத்தில் இருந்தே பார்ப்பார்கள். 'பையா' படத்தில் எதையும் தூரத்தில் இருந்து பார்த்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று தமன்னாவிடம் கார்த்தி கூறுவார். அது ஒரு ஜென் தத்துவம். இமயமலையில் ஞானிகளை சந்திக்கும்போது அவர்கள் என்னிடம் கூறும் கதைகளை நான் எங்குமே படித்ததில்லை. அதுபோன்ற கதைகளும் என்னோடு பயணிக்கின்றன. பொருத்தமான கதைகளை என்னுடைய பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு நான் சொல்கிறேன்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி; டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Mikjam Storm Echo TNPSC Important Notification

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

 

அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும், செயலாளருமான (பொறுப்பு) அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வினை கடந்த 22.11.2023 முதல் நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் (04.12.2023 மு.ப. & பி.ப. மற்றும் 06.12.2023 மு.ப.) உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு, மிக்ஜம் புயல் காரணமாக திங்கட்கிழமை (04.12.2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

 

இதனால் நேர்முகத்தேர்வு நாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் திங்கட்கிழமை (04.12.2023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு புதன் கிழமைக்கும் (06.12.2023), புதன் கிழமை (06122023) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வு  வியாழக்கிழமை (07,12,2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே திங்கட்கிழமை (04122023) அன்று நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வரும் புதன் கிழமை (06.12.2023) அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும் புதன் கிழமை (06.12.2023) அன்று தடைபெறவுள்ள தேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (07.12.2023) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“மொழியை எல்லாம் ஏன் மறந்தீங்க” - மாரிமுத்துவின் ஆதங்கம்!

 

 Actor G.Marimuthu Exclusive interview

 

தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியதோடு, முழுநேரமாக நடிப்பில் இறங்கியவர் குணச்சித்திர நடிகர் மாரிமுத்து. இன்று காலை டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகத் தேனி எடுத்துச் செல்ல உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக கடந்த வருடம் நடிகர் மாரிமுத்துவை பேட்டி கண்டோம். அப்போது தமிழ் மொழி குறித்து அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். பேட்டியில் கூறியதாவது, “எனக்கு ஒட்டு மீசை, ஒட்டு தாடி, முடி வைக்கிறதெல்லாம் பிடிக்காது. அந்த சினிமா நான் கற்றுக் கொள்ளவில்லை. இந்த வழுக்கை மண்டைக்கு ஏற்ற என்ன கதாபாத்திரமோ அதைத்தான் ஏற்று நடிப்பேன். தாடி வேண்டுமானால் நான் ஒரு வாரம் வளர்த்து அதற்கு பிறகு நடிப்பேன். நான் சினிமா கற்றுக் கொண்டதெல்லாம் இயக்குநர் வசந்த், இயக்குநர் மணிரத்னம் போன்ற நிஜ சினிமா செய்கிறவர்களிடமிருந்து தான். 

 

அதோடு என்னுடைய யதார்த்தமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு என்பது என்னுடைய தேனி மாவட்டத்தில் சின்ன கிராமத்தில் நான் எப்படி இருந்து வந்தேனோ அப்படியே இன்னும் இருக்கிறேன். அப்படியே பேசுறேன். மொழியை எல்லாரும் மறந்துட்டாங்க என்பது தான் எனது ஆதங்கம். மத்தபடி கதாநாயகனோட அப்பா, கதாநாயகியோட அப்பா போன்ற என் உடலுக்கு தகுந்த மாதிரியான கதாபாத்திரம் தான் தேர்வு செய்வேன்” என்றார்.