Skip to main content

மகாசிவராத்திரிக்கு ஜக்கியின் மகா திட்டம்! ஓ.கே சொன்னாரா விஜய்?

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Isha's controversies continue! Jaki approaching Vijay!

 

இந்த வருடம் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவுக்கு நடிகர் விஜய்யை அழைத்து பங்கேற்க வைத்தால் ஈஷா மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவார்கள். கூட்டத்திற்கு கூட்டமும் சேரும் என்ற கணக்கில் விஜய்யை அழைக்க ஜக்கி முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய்யின் பெற்றோர் ஈஷாவின் பக்தர்கள். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், “ஜக்கியால்தான் நான் மனத்தெளிவு பெற்றேன்” எனப் பேட்டியும் கொடுத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, “நடிகர் விஜய்யை, தான் நடத்தும் விழாவிற்கு அழைத்து வந்தால் கூட்டம் தானாகச் சேரும்...” என முடிவு செய்து விஜய்யின் பெற்றோரிடம் இதுபற்றி கூற... கோவை வ.உ.சி. மைதானத்தில் நடத்தப்படும் விழாவிற்கு போய்வரக் கூறியுள்ளனர்.

 

பெற்றோரின் தொடர் வற்புறுத்தலால் நிகழ்வில் கலந்துகொண்டு மேடையேறினார் விஜய். நடிகரைப் பார்க்க கூட்டம் முண்டியடித்துத் தள்ள, அங்கிருந்த நாற்காலிகள் உடைந்தன. ஜக்கியும், “உங்க ரசிகர்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்க. காட்டுமிராண்டித்தனமாக நடக்கக்கூடாது” என நடிகர் விஜய்யிடம் பொங்கிய நிலையில்... கடுங்கோபத்திலிருந்த விஜய், தன்னுடைய ரசிகர்களைப் பார்த்து “ஏம்பா.! உங்களை இவர் அமைதியாக இருக்க சொல்றார்” என ஜக்கியைக் கைக்காட்டிவிட்டு அமர்ந்திருக்கிறார். “தலைவனே ஒன்னும் சொல்லல. சாமியார் சொன்னால் கேட்கணுமா?” என நாற்காலிகளை துவம்சம் செய்து ரகளையில் ஈடுபட்டனர் என்றார் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி ஒருவர்.

 

ஈஷா யோகா மையத்தில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய ஒருவரோ, “அன்றைய தினம் கூட்டம் முடிந்த பின் வாடகைக்கு நாற்காலி கொடுத்தவர், “இத்தனை சேர்கள் உடைஞ்சிருக்கு. அதற்கும் பணம் வேண்டும்” என வாதாடிய நிலையில்..., “நான் வாடகைக்குத்தான் எடுத்தேன். உடைச்சது விஜய் ரசிகர்கள். அவங்ககிட்ட போய் கேட்டுக்க” என்ற ஜக்கியிடம், விடாது, “நீங்கதான் தரணும்” என நாற்காலி வாடகைக்கு விட்டவர் போராட..., “நீங்க விஜய்யிடம் உடைஞ்ச நாற்காலிக்கு பணம் கேளுங்க... தரலைன்னா நான் தர்றேன்” என ஜக்கி சமாதானம் பேசியனுப்ப, அவரும் சென்னையில் விஜய்யை சந்தித்து நாற்காலிக்கு பணம் கேட்க, கோபமடைந்து சத்தம்போட்டு அனுப்பியிருக்கிறார்” என்றார் அவர்.

 

ஈஷாவில் யோகா பயில வந்த சுபஸ்ரீயின் மர்ம மரணம் ஜக்கியை பெருமளவில் டேமஜ் செய்திருக்கும் நிலையில், ‘ஈஷாவை சீல் வைத்து அரசுடைமையாக்க வேண்டும். சுபஸ்ரீ மரணத்தில் நியாயமான விசாரணை வேண்டும்’ என சி.பி.ஐ., சி.பி.எம்., த.பெ.தி.க., அம்பேத்கரிய பெரியாரிய இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இந்நிலையில், மகாசிவராத்திரியான பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்துள்ள ஜக்கியின் ஈஷா நிறுவனம், நடிகர் விஜய்யை சிவராத்திரிக்கு அழைத்து வந்தால் மக்களின் கவனம் வேறு பக்கம் திரும்புமென அவரை அணுகிய நிலையில், “பழசு ஞாபகம் இருக்கு...! பட்ட அடி போதும்பா” எனக் கையெடுத்துக் கும்பிட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

 

Next Story

“கால்ல ஏன் விழுற...” - கடிந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
bussy anand scolded his tvk party member

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கட்சியின் முதல் கூட்டமாக, கடந்த 7 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்தனர்.  

இதனைத் தொடர்ந்து த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுள்ளனர். “நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்” உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அக்கட்சியினர் ஏற்றுக் கொண்டனர். 

மேலும் த.வெ.க தலைவர் விஜய்யின் ஆலோசனையின் படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவரால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்” உள்ளிட்ட பல முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர், புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்தார். உடனே கோபப்பட்ட புஸ்ஸி ஆனந்த், காலில் விழாதீங்க என சொல்லியும் ஏன் விழறீங்க எனக் கடிந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story

“இரண்டு கோடி உறுப்பினர்கள் இலக்கு” - த.வெ.க தலைவர் விஜய் அறிவுறுத்தல்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
tvk leader vijay instructed his members to joined two crore new members

விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். அந்த அறிக்கையில் வருகின்ற 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த அவர், 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து கட்சியின் முதல் கூட்டமாக, செயற்குழு கூட்டம் கடந்த 7ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜய் நேரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காணொளி வாயிலாகப் பேசியதாக கட்சியினர் தகவல் அளித்தனர். 

இதனை தொடர்ந்து த.வெ.க-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுள்ளனர். “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்” உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அக்கட்சியினர் ஏற்றுக் கொண்டனர். 

இந்த நிலையில் த.வெ.க தலைவர் விஜய்யின் ஆலோசனையின் படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவரால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர். ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். தலைவர் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ரீதியாகவும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும். மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார்? யார்? எந்தக் கட்சியையும் சாராதவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். நமது கழகத் தலைவரரின் உத்தரவின் பேரில், மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்து, தலைவர் வெளியிட்ட அறிக்கையில், நமது இலக்கு குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதனை மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.