Skip to main content

முதல்வர் வீட்டருகே இருக்கும் டீ கடைக்காரருக்கு கரோனா... ஈஷா மையத்தை விட்டது ஏன்? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் சமூகத் தொற்று என்கிற மூன்றாவது நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.இப்பொழுது யார் மூலமாக யாருக்கு கரோனா வைரஸ் பரவியது எனத் தெரிந்துகொள்ள முடியாத நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது.மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்குப் பக்கத்தில் டீக்கடை நடத்துபவருக்கு கரோனா நோய் வந்திருக்கிறது.அவருக்கு யார் மூலம் வந்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் முதல்வரின் பாதுகாவல் படையில் இருக்கக்கூடிய நூற்றுக் கணக்கானோரை கரோனா பரிசோதனைக்கு மகாராஷ்டிரா அரசு உள்ளாக்கியுள்ளது.

 

isha



அதேபோல் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டது என ஒரு முதியவர் அட்மிட் ஆகி இறந்தார்.அவர் இறந்த பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதனால் அந்த மருத்துவமனையில் வேலை பார்த்த செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் பல பேருக்கு கரோனா நோய் பரவியுள்ளது. இப்படி யாரிடம் இருந்து கரோனா நோய் எப்படி பரவும் எனக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்தியா முழுவதும் மாநில அரசுகள் கரோனா நோய் பாதிப்பு என சந்தேகப்படும் இடங்களில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து வருகின்றன.

 

corona



கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆலப்பாடு என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது மாதா அமிர்தானந்தமயி மடம்.பெரும்பாலும் வெளிநாட்டினர் வந்து போகும் இந்த மடத்தில் நிரந்தரமாக 600 வெளிநாட்டவர்கள் எப்பொழுதும் தங்கியிருப்பார்கள்.கரோனா நோய் பாதிப்பு பற்றிய மத்திய அரசு அறிவிப்பு வருதற்கு முன்பே மாதா அமிர்தானந்தமயி வெளிநாட்டு பக்தர்களைச் சந்திப்பதை நிறுத்திவிட்டார்.ஆனாலும் அந்த மடத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர்கள் தங்கியிருக்கிறார்கள் என்கிற தகவல் கேரள அரசுக்கு கிடைத்தது.கேரள அரசு உடனடியாகக் கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசரை அந்த ஆசிரமத்திற்குள் அனுப்பியது.
 

http://onelink.to/nknapp


பொதுவாக அந்த ஆசிரமத்திற்குள் எந்த நாட்டில் இருந்து யார் வருகிறார்கள் என ஆசிரம நிர்வாகம் அரசிடம் தெரிவிப்பதில்லை.ஆசிரமத்திற்குள் கேரள அரசு உத்தரவுப்படி அதிரடியாக நுழைந்த கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசர் ஆசிரம ரிக்கார்டுகளை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தர விட்டார்.முதலில் மறுத்த மாதா அமிர்தானந்த மயி பிறகு ஒத்துக்கொண்டார்.

அதன்படி கணக்கு எடுத்ததில் மொத்தம் 68 வெளிநாட்டினர்கள், உலகெங்கும் கொரோனா பாதித்த பிப்ரவரி மாதம்,மாதா அமிர்தானந்தமயி அலுவலகத்திற்கு வந்தார்கள் எனக் கண்டுபிடித்தது.அதில் 25 பேருக்கு இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர்களை அங்கிருந்து அகற்றி அரசாங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கரோனா சோதனை முழுமையாகச் செய்து முடித்தார்கள்.இதையெல்லாம் முறையாக அறிக்கையாக எழுதி,கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசர் கேரள மாநிலத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.அதன்பிறகு கேரள அரசு மாதா அமிர்தானந்தமயி மடத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது.

 

bjp



அதேபோல் லண்டனில் உள்ள இந்து மதம் சார்ந்த 'இஸ்கான்' கோவிலில் இருந்த பல்வேறு நாட்டைச் சேர்ந்த பக்தர்களில் 21 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பதை பிரிட்டிஷ் அரசு கண்டுபிடித்தது.அந்த அமைப்பைச் சார்ந்த தலைவர் ஒருவர் இறந்து போகிறார்.அவரது இறுதி ஊர்வலத்திற்கும் நினைவு அஞ்சலி கூட்டத்திற்கும் சென்ற பக்தர்கள் ஆயிரம் பேரை அந்நாட்டு அரசு தனிமைப்படுத்தி சோதனை செய்தது.அவர்களில் ஐந்து பேர் கரோனா நோய் பாதிப்பில் இறந்து போனார்கள்.

தென்கொரியாவில் கிறிஸ்தவ மதக் கூட்டங்களில் பங்கெடுத்தவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள்.

தமிழகத்தில் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கக்கூடிய 153 வெளிநாட்டவர்கள் விஷயத்தில் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் போலவோ, இஸ்கான் கோவில் போலவோ பரிசோதனை- பாதுகாப்பு- மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
 

கேரள மாநில மாதா அமிர்தானந்தமயி மடத்தில் கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசர் நுழைந்தது போல்,யாரும் ஈஷா மையத்திற்குள் செல்லவில்லை. அமிர்தானந்தமயி மடத்தில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் கரோனா இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது போல் ஈஷா யோகா மையத்தில் சோதனை நடத்தப் படவில்லை.கேரள அரசு அமிர்தானந்தமயி மடத்தில் யார் தங்கியிருக்கிறார்கள்,அவர்களது பெயர், விவரம் அவருக்கு கரோனா நோய் இருக்கிறதா என்கிற சோதனைகள் நடத்தப்பட்ட பட்டியலை வைத்திருக்கிறது.அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேரளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பெற்றிருக்கிறார்கள்.அதுபோல எந்த ஆவணத்தையும் ஈஷா யோகா மையமோ, தமிழக அரசோ அதனை கேட்டு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு வழங்கவில்லை.

ஈஷா யோகா மையத்தில் அமிர்தானந்தமயி மடத்தில் நடப்பது போன்ற வெளிப்படையான தன்மையை ஏன் கடைபிடிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.ஈஷா மையத்தில் வசிப்பவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது எனத் தமிழக அரசு சொல்கிறது.பொதுவாக, எந்தெந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த மருத்துவமனைகளில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை அரசு தனது செய்திக்குறிப்பின் மூலம் உறுதிப் படுத்தப்படுகிறது.ஆனால், ஈஷா மையத்தில் உள்ளவர்களை எந்த மருத்துவர் சோதனை செய்தார்.எந்த மருத்துவமனையில் அந்தச் சோதனை உறுதிப்படுத்துகிறது என்பதற்கான எந்தத் தகவலும் அரசு வெளியிடவில்லை.
 

http://onelink.to/nknapp


ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே ஒரு சுடுகாடு இயங்குகிறது.அதில் இறந்தவர்கள் எரிக்கப்படலாம் என்ற குற்றச்சாட்டைச் சமூக ஆர்வலர்கள் வைக்கிறார்கள்.கோவிட்-19 வந்த பிப்ரவரி காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை எத்தனை பேர் அந்த மையத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு மலைவாழ் கிராமங்களில் கட்டப்படும் கட்டிடங்களில் விதிமுறை மீறல்கள் இருக்குமானால் அதை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மலைப்பகுதி அபிவிருத்தி கவுன்சில் என்கிற அமைப்பிடம் இருந்து பறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளது.அதற்காக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ள கிராமமான போலாம்பட்டி இடம் பெறவில்லை.ஆனால் ஈஷா யோகா மையம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆதிவாசிகளிடம் வாங்கி குவித்துள்ள மலை கிராமங்கள் இடம் பெற்றுள்ளன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்,இது ஈஷாவின் எதிர்கால நலன்களுக்காக,கரோனா நோய் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.கரோனா விஷயத்தில் உலகமெங்கும் உள்ள மத அமைப்புகள் அந்தந்த நாட்டு அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையால் சோதனைக் குள்ளாக்கப்பட்டு வருகின்றன.ஆனால் ஈஷா மையத்தில் உள்ளவர்கள் எந்த சோதனைக்கும் உள்ளாக்கப்படவில்லை.அதற்கு காரணம் ஈஷா மையம் பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்படுகிறது.இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு,மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதால்,அவரிடம் உள்ள செல்வாக்கின் மூலம்,ஈஷா மையத்தில் எந்தச் சோதனையும் நடத்த வேண்டாம் எனப் பிறப்பித்த தடை உத்தரவின் காரணமாகவே மத்திய அரசும்,மாநில அரசும் ஈஷா பக்கமே தலைவைத்து படுக்கவில்லை என்கிறது மத்திய அரசு வட்டாரம்.


- சிவா

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.