தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

Advertisment
313
madhimaran Photograph: (politics)

சமூகநீதி என பேசும் திமுக கூட்டணியில் ராமதாஸ் உள்ளே வருவதாக இருந்தால் விசிக  எதிர்க்கிறதாக பார்க்கப்படுகிறது. எப்படி எடுத்துக்கொள்ள முடிகிறது?

Advertisment

இப்போது  ராமதாஸ் திமுக கூட்டணிக்கு உள்ளே வருவதாக யார் சொன்னார்? தொடர்ந்து ஊடகங்கள் விஜய்யை லைம் லைட்டில் வைத்துள்ளார்கள். ஆனால் விஜய் சீனுக்கே வருவது இல்லை. எதற்குமே விஜய் வருவது இல்லை. அவர் பாட்டுக்கு அமைதியாக இருக்கிறார். ஆனால் விஜய்யை தொடர்ந்து ஊடகங்கள் அவர் விவாதப்பொருளாக வைத்திருக்கிறது. என்ன காரணம் என்று கேட்டால் அவர் திமுக எதிர்ப்பு பேசி வருகிறார் விஜய். அதுதான் முக்கிய காரணம்.

திமுக பாமக கூட்டணிக்கு வருகிறது அல்லது வரவில்லை என்பதல்ல பிரச்சனை. திருமாவளவன் ஸ்டாண்ட் பாமக வரக்கூடாது என்பதுதான். நீங்க சொல்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. சாதி கட்சி என்று எடுத்துக்கொண்டால்  வேல்முருகன் கட்சி,  கொங்கு கட்சி, பாமக கட்சி எல்லாம் ஒன்னு தான். ஆனால் இதுல வந்து திருமாவளவன் பாமகவை தவிர்ப்பதற்கு ஒரு சிறப்பு காரணம் இருக்கு. என்ன காரணம் என்றால் மற்ற ஜாதி கட்சிகள் எல்லாம் கூட தலித் விரோத கண்ணோட்டம் பின்புலம் எல்லா ஜாதி உணர்வாளர்களுக்கும் இருக்கும். ஆனால் ராமதாஸ் என்ன பண்ணி இருக்கிறார். ஒரு படி மேல போய் தலித் அல்லாத கூட்டமைப்பை ஆர்கனைஸ் செய்கிறார்.

Advertisment

அவர் குறிப்பாக விடுதலை சிறுத்தைகளை எதிரியாக சித்தரிச்சு வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாய மக்கள் மத்தியில் அமைப்பு கட்டி இருக்கிறார். மிக மோசமான ஒரு தர்மபுரி கலவரத்தின் போது பாமகாரர்கள் ரோல் பண்ணி இருக்கறாங்க. அதன் காரணமாக விடுதலை சிறத்தைகள் எதிராக சித்தரித்து, தலித் அல்லாத அமைப்பை கட்டியவர் ராமதாஸ். அதனால் திருமாவளவன் ராமதாஸ் வந்தால் நாங்க இருக்க மாட்டோம் என்கிறார்.