Advertisment

'பங்கு' குமார் முதல் பவாரியா கும்பல் வரை...விடைபெற்றார் மீசைகார நண்பர்..!

'என்கவுண்டர் மனிதன்' என்ற புகழுக்கு சொந்தகாரரான ஐ.ஜி ஜாங்கிட் இன்றுடன் காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 1985 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ஜாங்கிட், ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1985ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி ஆக தன்னுடைய காவல் பணியை தொடங்கினார். நேர்மையான அதிகாரி என்ற பெயரை உடைய ஜாங்கிட் அதனை கடைசி வரை காப்பாற்றினார் என்றுதான் கூற வேண்டும்.

Advertisment

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 90களில் அதிகளவில் ஜாதிக்கலவரங்கள் வெடித்தன. ஓய்வு பெற்ற நீதிபதி கோமதிநாயகம் தலைமையிலான கமிஷன், துாத்துக்குடி எஸ்.பி ஆக ஜாங்கிட்டை பணியமர்த்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இதையடுத்து, அங்கு காவல்துறை கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட அவர், அதிரடி நடவடிக்கையின் மூலம் ஜாதிக்கலவரத்தை ஒடுக்கினார். இவர் மதுரை, நெல்லை, நீலகிரி மாவட்ட போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.

Advertisment

2001ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, சுதர்சன் உள்ளிட்டோரை கொலை செய்த வட மாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்தார். சென்னை கூடுதல் கமிஷனர் மற்றும் புறநகர் கமிஷனராக பணிபுரிந்தபோது, ரவுடிகள், பங்க் குமார், வெள்ளை ரவி ஆகியோரை என்கவுண்டர் செய்தார். இந்திய கலை மற்றும் கலாசாரம், இந்திய பொருளாதாரம் என, 10 புத்தகங்களை எழுதி உள்ளார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி மையங்கள் துவங்கி, ஏழை, எளிய மாணவர்களுக்கு பயிற்சி அளிகக உள்ளதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார். பவாரியா கொள்ளை கும்பலை மையமாக வைத்து இளம் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த படத்தின் ஹீரோ கார்த்தி ஆக இருந்தாலும், இந்த கதையின் ரியல் ஹீரோ ஜாங்கிட் தான். இநி்நிலையில், அவர் இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார். இந்த 34 வருட காவல்துறை வாழ்க்கைக்கு அவர் அளித்த முக்கியத்துவம் மிக அதிகம். குறிப்பாக தன் மகனை கல்லூரியில் சேர்பதற்கு கூட பணி சுழ்நிலைகள் இடம் கொடுக்காத காரணத்தால் ஒரு போலிகாரரை அனுப்பி தன் மகனை கல்லூரியில் சேர்த்தார். அதுவே காவல்துறை பணியை அவர் எந்த அளவிற்கு நேசித்தார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். அவர் காவல்துறைக்கு ஆற்றிய பணியை பாராட்டி 2 முறை குடியரசுத்தலைவர் பதக்கமும், ஒரு முறை பிரதமர் பதக்கமும், மெச்சத் தகுந்த பணிக்காக 2 முறை தமிழக முதல்வரின் பதக்கத்தையும் அவர் பெற்றுள்ளார். 'மீசைக்கார நண்பா உனக்கு நேர்மை அதிகம் டா' என்ற பாடல் வரிகள் தான், அவரின் காவல்துறை வாழ்க்கையை விவரிக்கும்சரியாக சொற்றொடராக இருக்கும்.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe