வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கும் வாழ்வியல் பேச்சாளாராகவும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தன் நினைவிலிருந்தே பாடக்கூடிய பாடகராகவும் பல புகழ்பெற்ற விளம்பரப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவராகவும் பல பரிமாணங்களில் நம்மை இன்ஸ்பையர் செய்து கொண்டிருக்கும் 'இன்ஸ்பையரிங்' இளங்கோ, ஆசியாவிலேயே முதல் முறையாக 'ஸ்கூபா டைவிங்' பயிற்சி சான்றிதழ் பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.

Advertisment

inspiring ilango

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இன்ஸ்பைரிங் இளங்கோ... ஒரு சிறப்புத் திறனாளி சாதனையாளர். சிறப்புத்திறனாளி என்பது வார்த்தை அலங்காரத்துக்காக சொல்லப்படுவது அல்ல, அதுவும் முக்கியமாக இவர் விஷயத்தில். உண்மையில் இவர் சிறப்பான பல திறன்களை உடையவர். மிக அழகாக பல நூறு பாடல்களை மனதில் நிறுத்தி பாடக்கூடியவர்.

Advertisment

பல்வேறு விருதுகளையும் சாதனைகளையும் படைத்துள்ள அவருக்கு, சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்து உள்ளது. அவர் அடிக்கடி சொல்வது போல, அவருக்கு சைட் (sight) இல்லை, ஆனால் விஷன் (vision) இருக்கிறது. ஆம், நம்மையெல்லாம் விட விசாலமான விஷன் இருக்கிறது.