Skip to main content

நக்கீரனுக்கு வந்த தகவல்... மூடப்பட்ட ஆழ்துளை கிணறு... (படங்கள்)

Published on 28/10/2019 | Edited on 28/10/2019



''பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறு உங்கள் பகுதியில் மூடப்படாமல் உள்ளதா?'' அப்படி இருந்தால் 9677081370 வாட்ஸ் அப் எண்ணிற்கு புகைப்படம் மற்றும் முழு தகவலையும் மெசேஜ் அனுப்புங்கள் என தெரிவித்திருந்தோம்.
 

hh

 

''அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் பஞ்சாயத்திற்குள் வரும் அகினேஸ்புரம் கிராமத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ஆழ்துளை கிணறு உள்ளது. இது குடிநீர் தொட்டி கட்ட போடப்பட்ட ஆழ்துளை கிணறு 500 அடி இருக்கும், சிறார் பள்ளி அருகில் உள்ளதால் அதனை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க உதவுங்கள்'' என்று நமக்கு தகவல் வந்தது. 
 

இதுகுறித்து நாம் உடனடியாக செல்போன் மூலம் ஆண்டிமடத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையில் உள்ள சிலரை தொடர்பு கொண்டோம். இந்த தகவல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் வரை சென்றதும், அவரது அறிவுறுத்தல் பேரில் ஆண்டிமடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், சம்மந்தப்பட்ட இடத்திற்கு ஜெ.சி.பி. இயந்திரத்துடன் சென்று ஆழ்துளை கிணறை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

துரிதமாக நடவடிக்கை எடுத்த காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் ஆண்டிமடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர். 

 

Next Story

நுரையாக பொங்கிய நிலத்தடிநீர்; ஈரோட்டில் அதிர்ச்சி

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

 In the foaming subterranean waters; Erode shock

 

ஈரோட்டில் ஏற்கனவே சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், நிலத்தடி நீரில் நுரை நுரையாக ரசாயனம் பொங்கி வந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சாயக்கழிவுநீர் பிரச்சனை ஈரோட்டில் பல வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், கருங்கல்பாளையத்தில் கே.ஏ.எஸ் நகரில் இருக்கக்கூடிய ஐந்தாவது வீதியில் கோபால் என்பவருக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறுக்கான மின் மோட்டாரை ஆன் செய்த பொழுது நுரை கலந்து நீர் வெளியேறியது. தண்ணீரில் ரசாயன நெடி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட சாயை ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், நிலத்தடி நீர் வரை சாயக் கழிவுகள் சென்றிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Next Story

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்!

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

Chennai Kindi Children's Park closed!

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.  நேற்று வண்டலூர் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பூங்காவை ஜனவரி 31ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா  (ஜன.17)  நாளை முதல் மூடப்படுவதாக தெரிவித்துள்ள வன உயிரின காப்பாளர், நிலைமையை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப பூங்காவை திறப்பது குறித்து முடிவு செய்யப்பட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.