Skip to main content

உரசலில் இந்திய - அரபு நட்பு! உலைவைத்த பழைய ட்வீட்!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


ஒரு ட்வீட் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தலைவலியைக் கொண்டுவந்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

பிரச்சனைக்குக் காரணமான ட்வீட்டுக்குச் சொந்தக்காரர் கர்நாடகாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா. அடிப்படையில் வழக்கறிகஞரான தேஜஸ்வி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர். ஆனால் இப்போது பிரச்சினைக்குக் காரணமாகியிருக்கும் ட்வீட், முன்பே அதாவது 2015-ல் ட்வீட் செய்தது.
 

 

 

 

அப்படி ட்வீட்டில் என்ன சொல்லியிருக்கிறார்…

 

95 சதவிகித அரபுப் பெண்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக ஆர்கசமே அடைந்ததில்லை. ஒவ்வொரு அரபுத் தாயும் அன்பின் அடையாளமாக இல்லாமல் செக்ஸ் செயல்பாட்டின் விளைவாக குழந்தைகளை ஈன்றிருக்கிறார்கள் என தாரேக் பத்தா என்ற கனடிய- பாகிஸ்தானிய எழுத்தாளரின் கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார். கூடவே அவரது கருத்தில் தனக்கு முழு உடன்பாடு எனத் தனி ட்வீட்டும் செய்திருக்கிறார்.

 

Tejasvi Surya

 

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பார்களே அப்படித்தான்… ஒரிஜினலாக அந்த ட்வீட்டை வெளியிட்ட நேரத்தில் எதுவும் நடக்கவில்லை. கடந்த வருடம் தேர்தலில் நின்றபோது, எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களுக்கு எதிரான தேஜஸ்வியின் ட்வீட்டுகளைத் தோண்டி வெளியிட்டதில் இந்த ட்வீட்டும் அடக்கம். அப்போதும் எதுவும் நடக்கவில்லை. கடந்த ஏப்ரல்-19 ஆம் தேதி சமூக ஊடகத்தில் தேஜஸ்வியின் இதே ட்வீட் எடுத்தாளப்பட்டு, விமர்சனங்கள் எழுந்தன.
 

yy

 

http://onelink.to/nknapp


ஏற்கெனவே உலகமே ஊரடங்கில் இருக்கும் நிலையில், அரேபியாவின் முக்கிய வர்த்தகர்களில் ஒருவரான நூரா என்பவர் பார்வையில் பட்டிருக்கிறது இந்த ட்வீட். அவர் ட்விட்டரில் தேஜஸ்வியின் ட்வீட்டைக் குறித்து, இந்தியாவைச் சில தலைசிறந்த பெண் அரசியல் தலைவர்கள் ஆட்சி செய்திருந்தபோதும் பெண்களின் மீதான மரியாதை உங்களிடம் இல்லை. உங்கள் வளர்ப்பு குறித்து வருந்துகிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் உங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டாலும் அரபு நாட்டுக்குப் பயணம் வந்துவிடாதீர்கள். நீங்கள் இங்கு வரவேற்கப்படமாட்டீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் எனப் பதிலடி தந்திருக்கிறார்.

 

tttt

 

அரபு அரச குடும்பம் வரை இந்த விவகாரம் சென்று சேர்ந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர், 
 

மரியாதைக்குரிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்தியா- அரபு அமீரகத்திற்கு இடையான உறவு பரஸ்பரம் மரியாதையுடன் திகழ்ந்துவந்திருக்கிறது. உங்களது பாராளுமன்ற உறுப்பினர் இப்படிப் பொதுவெளியில் எம் தேசப் பெண்களை அவமதிப்பதை அனுமதிக்கிறீர்களா… எனச் சூடாகக் கேள்வியெழுப்பினார்.

555

இதையடுத்து, தேஜஸ்வி தனது ட்வீட்டர் பக்கத்திலிருந்து சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கினார். அவரது ஆதரவாளர்கள் அது பழைய ட்வீட், தவிரவும் தேஜஸ்வியின் சொந்தக் கருத்தல்ல. வேண்டுமென்றேதான் இந்த ட்வீட் தற்சமயம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
 

மாறாக, அவருக்கு எதிரானவர்கள் தேஜஸ்வியின் பழைய ட்வீட்டுகளைப் புரட்டினால் முஸ்லிம்களுக்கு எதிரான அவரது மனோபாவம் வெளிப்படும். ஒரு விஷயத்துடன் உடன்பாடு இருப்பதனால்தானே அதை ட்வீட் செய்கிறார். முன்னால் பதிவிட்டது என நழுவிக்கொள்ள முடியாது என்கிறார்கள்.
 

விஷயம் வெகுசூடாக மாறுவதையடுத்து ஏப்ரல் 20-ஆம் தேதி பிரதமரின் ட்விட்டர் கணக்கிலிருந்து, “கோவிட்-19 வைரஸ் ஒருவரைத் தாக்குவதற்கு முன் இனம், மதம், நிறம், ஜாதி, மொழி, எல்லை எதையும் பார்ப்பதில்லை. எனவே ஒற்றுமையையும் சகோதரத்துவத்துவத்தையும் நோக்கியதாக நமது செயல்பாடு அமையவேண்டும்.” என ட்வீட் செய்தார். ஆனால் பிரதமரின் பதில் போதுமானதல்ல என்ற முணுமுணுப்புக் கிளம்பியிருக்கிறது.
 

இது ஒருபுறமென்றால், இந்தியாவிலிருந்து அரபு நாடுகளில் வேலைபார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும். இவர்கள் எத்தனையோ துயர்களை அனுபவித்து சம்பாதித்து தன் குடும்பத்துக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கும் பங்களித்து வருகிறார்கள். ஆனால் அரபு நாடுகளில் வேலை பார்த்துக்கொண்டே சில விஷமிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான பதிவுகள் வெளியிடுவதை அரபு நாடு சமீபமாகக் கவனித்துக் கொண்டுதான் வந்தது.

 

அவை எல்லைமீறிப் போனதையடுத்து இத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தும், இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பியும் பதில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. மேலும் தம் நாட்டில் இருந்துகொண்டே இத்தகைய விஷமப் பதிவுகளை வெளியிடுபவர்களைக் உற்றுக்கவனிக்கத் தொடங்கியுள்ளது.
 

அரபு தேசம் பொதுவாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை. குஜராத் கலவரத்தின்போதோ, சமீபத்திய தேசிய குடியுரிமை சட்டத்தின்போதோ இந்தியாவை விமர்சிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிக்கவோ செய்யாத நாடு ஐக்கிய அரபு அமீரகம். ஆனால் சொந்த நாட்டு பெண்களையும், அவர்களது தேசத்தில் ராமர் கோவில் கட்டுவோம் போன்ற வீண்வம்பு பதிவுகளையும் அவர்கள் அங்கீகரிக்கத் தேவையில்லை.
 

http://onelink.to/nknapp

 

ஐக்கிய அரபு தேசம் தன் நாட்டுப் பணிகளுக்காக இந்தியர்களையும், பாகிஸ்தானியர்களையும் நம்பியிருந்த காலம் மலையேறிவிட்டது. ஒருசில விஷமிகளால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டால் அதில் இந்தியாவுக்குதான் அதிக நஷ்டம் இருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
 

 

 



 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.