பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வென்றிருக்கும் நிலையில் பலரும் தங்களது பார்வைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் தேர்தல் முடிவுகள் குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி  யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் மிஞ்சி பாஜக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கை இடங்கள் வந்திருக்கே எப்படி பாக்குறீங்க?

Advertisment

021
'India' alliance fails; 'This mistake should not be repeated in Tamil Nadu' - warns Pudumadam Haleem Photograph: (Bihar election)

''இந்த முடிவு என்பது பாஜக கூட்டணிக்கே ஒரு இன்ப அதிர்ச்சி தான். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இவ்வளவு தூரம் அதிக எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை. அதே மாதிரி ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி இப்படி இந்த அளவுக்கு தோற்கும், இவ்வளவு எண்ணிக்கை குறையும் என்பதையும் எதிர்பார்க்கவில்லை இப்போது இந்த முடிவு சொல்கின்ற பாடங்கள் ரொம்ப ஆச்சரியமான அதே நேரத்தில் அவசியமான பாடம். ஏனென்றால் இந்த தேர்தலுக்கு முன்னாடி இருந்த ஒரு ஹைப் கொடுத்தது ராகுல் காந்தியுடைய பேரணி. தேர்தல் வாக்கு திருட்டை பற்றி இந்தியாவுக்கே வந்து பாடம் எடுத்த ஒரு களமாக இருந்தது. பாட்னாவில் ஆரம்பித்து பாட்னாவில் முடிந்த அந்த தேர்தல் பேரணியில் லட்சக்கணக்கான பேர் கலந்துக்கிட்டாங்க. அந்த லட்சக்கணக்கான பேர் எங்கே? வாக்களிக்கவில்லையா? அப்படிங்கிற கேள்வி இருக்கிறது. பின்னர் இப்படிப்பட்ட ஒரு தோல்வியை எப்படி நடந்தது? எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பாஜக தலைமையிலான கூட்டணி பெற்றது. இதெல்லாம் ஆச்சரியமான ஒரு முடிவுகள்தான். இது கற்று கொடுத்திருந்த பாடங்களை எப்படி ஆய்வு செய்ய போகிறோம்.

Advertisment

20 வருடம் நிதீஷ்குமார் மாறி மாறி முதல்வராக இருக்கிறார். இதனால் அங்கு ஆன்டி இன்கம்பன்சி இருக்கும். அப்போது எப்படி இப்படிப்பட்ட ரிசல்ட் வந்தது. தேர்தல் ஆணையம் மற்ற கூட்டணிக் கட்சிகளை விட  பாஜக-ஜனதா தல் கூட்டணியுடன் தேர்தல் ஆணையமும் சேர்ந்துதான் இந்த தேர்தலை நடத்தினாங்க. இப்போது வரைக்கும் தேர்தல் ஆணையம் பாஜக கூட்டணி கட்சிகளை ஒரு பார்ட்னர் மாதிரிதான் நடத்துனாங்க. பாஜக கூட்டணிக்கு தான்  ரொம்ப ஆதரவாக தேர்தல் ஆணையம் இருந்தாங்க. நீதிமன்றத்தில் எஸ்ஐஆர் சம்பந்தப்பட்ட வழக்குகள் போனா கூட தேர்தல் ஆணையம் எவ்வளவு உறுதியா இருந்தது என்பதைப் பார்த்தோம். நீதிமன்றமே தடை போடவில்லை. அந்த  வழக்கும் முடியவில்லை. இன்னும் ஜட்ஜ்மெண்ட்டும் வரவில்லை. அப்போது நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா விஷயங்களுமே பாத்தீங்கன்னா பாஜக-ஜனதா தல் கூட்டணிக்கு சாதகமாக தான் இருந்துச்சு. 

கர்நாடகாவின் மத்திய பெங்களூர் தொகுதியைப் பற்றி ஒரு பவர் பாயிண்ட் பிரசெண்டேஷனை ராகுல்காந்தி போட்டாரு. ஹரியானாவிலும் அதேபோல் ஒரு பவர் பாயிண்ட் பிரசெண்டேஷனைபோட்டுருக்காரு. வெறும் பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் மட்டும் போட்டா மக்களிடம் ஈடுபட்டுவிடுமா? அதை நம்பினார்களா?  ராகுல் காந்தி சொன்னது எல்லாம் பொய் அப்படின்னு சொல்லி பாஜக கூட்டணி பிரச்சாரம் பண்ணாங்க. தேர்தல் ஆணையமும் ஆமாம் ராகுல் காந்தி சொல்வது பொய் எனச் சொல்கிறது. 

தேஜஸ்வி யாதவ் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய், வீட்டுக்கு ஒருத்தருக்கு அரசு வேலை எனக் கொடுத்த வாக்குறுதிகள் எவ்வளவு பெரிய வாக்குறுதிகள் தெரியுமா? தமிழ்நாட்டில் உரிமைத் தொகை கொடுத்தது மாதிரி கிட்டத்தட்ட ஒரு கோடி பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதி. ஒரு கோடி பெண்களுக்கு கிட்டத்தட்ட மாதம் 2500 ரூபாய் தருகிறோம் என்றார்கள். ஆனால் அதற்கு பகரமாக நிதீஷ் குமார் 'பெண்கள் தொழில் தொடங்கினால் நாங்க  உடனே 10,000 ரூபாய் கொடுப்போம். பின்னர் தொழில் வெற்றிகரமாக தொடர்ந்தால் இரண்டு லட்சம் கொடுத்துருவோம்' என்றார். கிட்டத்தட்ட ஒரு கோடி பெண்களுக்கு அவங்க அக்கவுண்ட்ல 10,000 போட்டார்கள். அவங்களும் மாற்றி மாற்றி தான் செய்தார்கள். ஆனால் அதுவும் எடுபடவில்லை.

023
'India' alliance fails; 'This mistake should not be repeated in Tamil Nadu' - warns Pudumadam Haleem Photograph: (election)

இரண்டாவது முக்கியமான விஷயம் பாஜக கூட்டணி 'ஜெல்' ஆனது. ஆனால் கடைசி நிமிடம் வரைக்கும் 'இண்டியா' கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கவில்லை. தேஜஸ்வி எவ்வளவோ இறங்கி வந்தாரு. கடைசி நேரத்தில் 10 இடங்களில் தேஜஸ்வியும் வேட்பாளர்களை நிப்பாட்டுறாரு காங்கிரஸும் நிப்பாட்டுறாங்க. கிரவுண்ட் ரியாலிட்டியை காங்கிரஸ் புரிந்துக்கொள்வதில்லை என்பது முக்கியமானது. தேஜஸ்வி எவ்வளவோ இறங்கி போனாரு. கடந்த முறை நீங்க 19 இடத்தில் வெற்றி பெற்றீங்க இந்த தடவை நீங்க 30 அல்லது 40 இடங்களில் மட்டும் போட்டிடுங்க என் தேஜஸ்வி சொன்னார். ஆனால் முடியாது எங்களுக்கு 70 இடங்கள் வேணும் என்றது காங்கிரஸ். ஆனால் 61 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டாங்க. இன்று பாருங்க சிங்கிள் டிஜிட்டில் 6 இடத்தில் தான் காங்கிரஸ் வெற்றியை நோக்கி போய் இருக்காங்க இதில் எல்லாவற்றையும்  விட முக்கியமான விஷயம் என்ன தெரியுமா 65 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.

'ஊடுருவல்காரர்களுக்கு இனி பீகாரில் இடமில்லை' இதே வார்த்தையைதான் வந்து சில வருடங்களுக்கு முன்பு அசாமில் சொன்னாங்க. அசாமில் எஸ்ஐஆர் நடத்தப்படவில்லை. தேர்தல் ஆணையம் என்ன தெரியுமா சொல்லுச்சு அங்கதான் என்ஆர்சி நடத்திட்டாங்களே என்றது. ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் அமலில் இருக்கு. இப்போது பீகார்ல 65 லட்சம் பேருக்கு வாக்கு இல்லைன்னு சொல்லி தேர்தல் ஆணையம் சொன்னாங்க. கடைசி நிமிடத்தில் 21 லட்சம் பேர்களை வாக்காளர்களாக சேர்த்தாங்க. அதில் நீக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று இதுவரைக்கும் சொல்லவில்லை. உதாரணமா  அந்த 21 லட்சம் பேரில் 11 லட்சம் பேர் புது வாக்காளர்கள் என்றால், 10 லட்சம் பழைய வாக்காளர்களை சேர்த்துவிட்டார்கள் என்றால் எப்படி பார்த்தாலும் 50 லட்சம் பேருக்கு அங்கு வாக்கு இல்லை. 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த 50 லட்சம் பேர் பீகாரில் நடந்த 2025 சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. இந்த வாக்களிக்காத 50 லட்சம் பேர் நிலைமை என்ன? கிட்டத்தட்ட என்ஆர்சி தான்எஸ்ஐஆர். இந்த 50 லட்சம் பேரும் இப்போது குடியுரிமையை நிரூபிக்கணும்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சொன்னது 'இனி ஊடுருவல்காரர்களுக்கு பீகாரில் இடமில்லை' என்றார். என்ன அர்த்தம் என்றால் 'குடியுரிமை இல்லாதவர்களுக்கு இடமில்லை' என்பதுதான். இந்த 50 லட்சம் பேருக்கும் குடியுரிமை நிலைமை என்ன?  சிஏஏ சட்டத்தை அமல்படுத்தினால் இந்த 50 லட்சம் பேரில் 33 விழுக்காடு கிட்டத்தட்ட 15 லிருந்து 20 லட்சம்  சிறுபான்மை மக்கள் அதில் இருக்காங்க. அந்த 20 லட்சம் சிறுபான்மை மக்கள், இஸ்லாமிய மக்களுக்கு இன்னைக்கு வாக்கு கிடையாது. இதனால் அவர்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலை வரும்.

இதை  அசாம் உடன் ஒப்பிட்டு பாருங்க. ஏற்கனவே இதேபோன்று தான் அசாமில் ஒரு 18 லட்சம் பேரை டிடென்ஷன் கேம்ப்ல போய் அடைச்சாங்க. அதற்கென்று ஒரு தனி நீதிமன்றத்தை நிறுவினார்கள். இப்போது இவர்கள் குடியுரிமையை நிரூபிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பார்கள். அமித்ஷா சொல்லும் அந்த ஊடுருவல் காரர்கள் இந்த 50 லட்சம் பேரில் இருக்காங்க. ஏனென்றால் இந்த 50 லட்சம் பேருக்கு அங்கு வாக்கு இல்லை.

இந்த 50 லட்சம் பேரில் யாரெல்லாம் ஊடுருவக்காரர்களோ அவர்கள் நாங்கள் களை எடுப்போம் என்று அமித்ஷா சொல்கிறார். இதனால்தான் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போன்றவற்றை தேர்தல் ஆணையம் மூலம் கொண்டு வருகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில்  இதைப்பற்றி  பயந்து பேசுறோம். இது நடந்தால் தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு வாக்கு இருக்காது. வாக்கு இல்லாத சிறுபான்மையினர் தேர்தலுக்கு பிறகு அவர்கள் குடியுரிமையை நிரூபிக்கணும். அதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரச்சனை இருக்காது. காரணம் சிஏஏ சட்டமே முஸ்லிம்களுக்கு மட்டும் தான். குடியுரிமை இல்லை என்றால் அவர்களை கேம்ப்பில் அடைக்க வேண்டும் என பாஜக அரசு சொல்கிறது. தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி 'தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள்' என்று சொன்னார். நல்லா கவனிச்சு பாருங்க. இந்த பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி என்பது ஒரு காரணியை வைத்து  மட்டும் நடக்கவில்லை. ஒரு பக்கம் தேர்தல் ஆணையம் உதவி செய்தது.

022
'India' alliance fails; 'This mistake should not be repeated in Tamil Nadu' - warns Pudumadam Haleem Photograph: (election)

இன்னொரு பக்கம் ராகுல் காந்தி பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து நம்முடைய முதல்வரே போய் கலந்து கொண்டார். அப்போது மேடையில் வைத்து ராகுல் காந்தியும்- தேஜஸ்வி யாதவ்வும் பேசினர். 'ஆட்சி நடந்தா தமிழ்நாடு மாதிரி நடக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாருங்க பாஜக காலூன்ற  முடியவில்லை. தமிழ்நாட்டில் எப்படி ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார் பார்த்தீர்களா' என்று ராகுல் காந்தி கேட்டார்.

கடைசியில் எப்படி பிளேட்ட மாத்திட்டாங்க? தமிழ்நாட்டை பற்றி தேஜஸ்வியும் ராகுல் காந்தியும் புகழ்ந்து பேசினாங்களே அதே தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுறாங்க. துன்புறுத்துகின்ற ஒரு முதல்வரை உங்கள் தேஜஸ்வி பாராட்டுகிறார் என்ற விஷயத்தை பாஜக கூட்டணி பிரச்சாரமாக முன்னெடுத்தாங்க. இப்படித்தான் அவர்கள் ஒவ்வொரு காரணிகளையும் கையில் எடுத்தாங்க. சிராக் பஸ்வானுடைய கட்சி கிட்டத்தட்ட பல இடங்கள் வெற்றி பெற்று இருக்கு. தலித் மக்களுடைய வாக்குகள் அந்த கட்சிக்கு முழுமையாக கிடைச்சிருக்கு. அந்த வாக்குகள் பாஜக-ஜனதா தல் கூட்டணிக்கும் முழுமையாக போயிருக்கு.
இன்னொரு கோணத்திலும் பாருங்க. சிறுபான்மை மக்கள் 17 விழுக்காடு இருக்காங்க. அசாவுதீன் ஓவைசி மட்டும் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார். அதைவிட கீழதான் காங்கிரஸ் இருக்கு. அசாவுதீன் ஓவைசியை கூப்பிட்டு சேர்த்துக்கொள்ளவில்லை. இண்டியா கூட்டணி தலித் மக்களையும் சிறுபான்மை மக்களையும் சரியா பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் பாஜக கூட்டணி சரியாக பயன்படுத்திவிட்டாங்க. ஓபிசி மக்களையும் இண்டியா கூட்டணி சரியாக பயன்படுத்தவில்லை.  

நிதீஷ் குமாருடைய சமூகத்தை சார்ந்தவர்களை இழிவுபடுத்திட்டாங்க என்று சொல்லி ஒரு பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்தாங்க. அந்த சமூகத்திடைய வாக்குகளும் நிதீஷ் குமாருக்கு விழுந்துருக்கு. 75 இடங்களில் தனியா நிதிஷ் வெற்றி பெற்றுருக்காரு. பாஜக செய்த அந்த யுக்திக்கு வெற்றி கிடைச்சிருக்கு. எல்லா பக்கத்தையும் பயன்படுத்தி இருக்காங்க. காங்கிரஸ் வெறும் பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் மட்டும் போட்டுட்டா அது வெற்றியை கொடுத்துருமா? மக்களுக்கு தெரிஞ்சிருமா?

ஒரு ஊர்வலத்தை நடத்துனீங்க. அந்த ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு முதலில் வாக்கு இருக்கா என்று தெரியுமா? அவர்கள் நீக்கப்பட்ட வாக்குகளை உங்களால் சேர்க்க முடிந்ததா? 50 லட்சம் பேருக்கு வாக்கு இல்லை. அவர்களுக்கு உங்களால் வாக்கு வாங்கி கொடுக்க முடியவில்லை. நீதிமன்றம் போயும் நடக்கவில்லை. இதுதான் காங்கிரஸ்-தேஜஸ்வி கூட்டணி தோல்விக்கு காரணம். இதை பகுத்தாய்வு செய்யாமல் காங்கிரஸ் வெறும் பண்ணையார் மனப்பான்மையோடு 'கூட்டணியில் ஆட்சியை கொடு' என்று மட்டும் சொல்லக்கூடாது. இதே நிலைமைதான் இன்னைக்கு தமிழ்நாட்டிலும் இருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தில் பங்கு என தமிழ்நாட்டிலும் பேசுகிறார்கள். எனவே இதையெல்லாம் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க வேண்டும். அதுபோன்ற தவறு இங்கு நடந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்கு இருக்கிறது. இதுதான் நாம் கற்றுக்கொண்ட பாடம்'' என்றார்.