/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/it-raid.jpg)
நேற்றுதமிழகத்தின் பரபரப்பு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், முன்னாள் போலிஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில்வருமானவரி துறை சோதனை நடந்திருப்பது தான். இதற்கு காரணம் குட்கா வழக்கு.பொதுவாகவே வருமானவரி சோதனைகள் மத்தியில் ஆளுபவர்கள் கைகாட்டும் இடத்திலேயே நடக்கும். சோதனை செய்யப்படுபவர்கள் தூயவர்கள் இல்லையென்றாலும் அவர்கள் சோதனை செய்யப்படும் நேரம்தான் சந்தேகத்தை கிளப்புகிறது. ஹெச்.ராஜாவை விமர்சித்ததும் விஷால் அலுவலகத்தில் சோதனை, எடப்பாடி அணிக்கு எதிரான தினகரன் உறவினர்கள் அலுவலகத்தில் சோதனை என... ஒருவரை மிரட்டவும், எதிர்ப்பவரை அடக்கவுமே இந்த வழிமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் எங்கும், எப்போது வேண்டுமானாலும் சோதனை மேற்கொள்ள உரிமையுள்ள வருமானவரி துறை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் சோதனை நடத்த வேண்டும். ஒரு வருமான வரி துறை சோதனை எப்படி ஆரம்பித்து, எப்படி முடியும் படிப்படியாக இதோ.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
ஒரு முழுமையான ஆவண தயாரிப்பு மற்றும் குழு தயாரிப்புக்குப்பின் குறித்த இடங்கள் அனைத்திற்கும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் செல்வர். முதலில் தங்களை குறித்த விளக்கங்கங்களை கூறி தெளிவுபடுத்திக்கொள்வர். பின் அந்த இடத்தில் தேவையான மருத்துவ சேவையை தயார்படுத்திக்கொள்வர். அலைபேசி, தொலைபேசி என அனைத்து தகவல்தொடர்பு சாதனங்களையும் துண்டித்துவிட்டு சோதனையிட தொடங்குவர். ரொக்கம், நகை, பத்திரங்கள், தாள்கள் ஆகியவற்றை சோதனையிட்டு அங்கிருப்பவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் சரியான ஆவணங்கள், ஆவணங்கள் இல்லாத ரொக்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிடுவர். நீதிமன்றம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
வருமான வரி துறை சோதனை தொடங்குவது சூரியன் உதித்த பின்னர் தான் நடக்க வேண்டுமென்பது விதி. வருமான வரி துறை அதிகாரிகள் நம்மை சோதனை செய்வதற்கு முன், சோதனை செய்யப்படுபவர்கள் அவர்களின் வாரண்ட் மற்றும் அது சார்ந்த வெரிஃபிகேஷன்' ஆவணம் ஆகியவைகளில் உள்ள நாள், இடம் ஆகியவற்றையும், அடையாள அட்டைகளையும் சோதனை செய்ய உரிமை உண்டு. அதில் ஏதும் சந்தேகமிருப்பின் வருமான வரி துறைக்கு தொடர்புகொண்டு விசாரித்துக்கொள்ளலாம். அதன்பின் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் எவ்வித தயக்கமுமின்றி வழங்க வேண்டும். தனக்கு தேவையான உணவை தேவையான நேரத்திற்கு வழங்கவும், சோதனை நடக்கும் இடத்திற்குள்ளேயே உலாவவும், ஆவணங்கள் குறித்து விளக்கம் தரவும், பெண்களை பெண் அதிகாரிகளை கொண்டு விசாரிக்க சொல்லவும், புத்தகப்பையின் சோதனைக்குப்பின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்பதெல்லாம் வருமான வரி சோதனையின் விதிமுறைகள். உங்கள் பட்டய கணக்காளர்(C.A), வழக்குரைஞர்கள் ஆகியவர்களை அழைக்கலாம். இதுபோன்ற இன்னும் சில விஷயங்களும் நமது உரிமைகள்.
கணக்கில் வராத சொத்துக்களாக இருந்தாலும் 250கிராம் தங்கம் திருமணமாகிய பெண்ணும், 150 கிராம் திருமணமாகாத பெண்ணும், 100 கிராம் ஆணும் வைத்துக்கொள்ளலாம். அசையா சொத்துக்கள், விளக்கமளிக்கப்பட்ட பணம், வியாபாரத்திற்காக வாங்கப்பட்ட பொருட்கள், கணக்கில் உள்ள சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்படக்கூடாது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
எல்லா வருமான வரி சோதனைகளுமே யாரோ ஒரு மூன்றாம் நபர் கொடுக்கும் தகவல் மூலமே நடக்கிறது. அந்த மூன்றாம் நபராக பெரும்பாலும் மத்திய அரசே உள்ளது.